ஐபிஎல் 2021 தொடரில் நேற்று நடைபெற்ற 50 ஆவது லீக் போட்டியில் ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிடல்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது, முன்னதாக இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை டெல்லி பவுலர்களின் சிறப்பான பந்து வீச்சில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 136/5 ரன்கள் மட்டுமே எடுத்தது.
![]() |
MS Dhoni | Rishab Pant (Photo : BCCI/IPL) |
அதிகபட்சமாக அம்பத்தி ராயுடு 43 பந்துகளில் 55* ரன்கள் எடுத்தார், டெல்லி சார்பில் அக்சர் பட்டேல் 2 விக்கெட் சாய்த்தார்.
டெல்லி முதலிடம்:
பின் 137 என்ற இலக்கை துரத்திய டெல்லிக்கு தொடக்க வீரர் ஷிகர் தவான் தன்னால் முடிந்த வரை போராடி 39 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளம் இட்டார். இருப்பினும் பிரித்திவி ஷா 18 ரன்களிலும் ஸ்ரேயாஸ் அய்யர் 2 ரன்களிலும் அவுட் ஆனார்கள், அடுத்து வந்த ரிபல் படேல் 18 ரன்களிலும் கேப்டன் ரிஷப் பண்ட் 15 ரன்களும் எடுத்து முக்கியமான நேரத்தில் அவுட் ஆனார்கள்.
இறுதியில் 99/6 என தடுமாறிய டெல்லி அணிக்கு கடைசி நேரத்தில் சிம்ரோன் ஹெட்மையர் வெறும் 18 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 28* ரன்கள் குவித்து வெற்றி பெறச் செய்தார், இந்த வெற்றியின் வாயிலாக புள்ளிப் பட்டியலில் 20 புள்ளிகளுடன் சென்னையை முந்திய டெல்லி முதலிடம் பிடித்து அசத்தியது.
ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்து சிறப்பாக பந்து வீசிய போதும் மோசமான பேட்டிங் காரணமாக சென்னை போராடி தோல்வி அடைந்தது.
தோல்விக்கான காரணங்கள்:
இப்போட்டியில் மோசமான பேட்டிங், 18வது ஓவரில் சிம்ரோன் ஹெட்மயர் கொடுத்த கேட்ச்சை 12வது வீரராக பீல்டிங் செய்ய வந்த கிருஷ்ணப்பா கௌதம் கோட்டை விட்டது மற்றும் 20வது ஓவரில் டுவெய்ன் பிராவோ வீசிய அறிவிக்கப்படாத நோ பால் உட்பட சென்னையின் தோல்விக்கு பல காரணங்கள் வித்திட்டன.
- இருப்பினும் இந்தப் போட்டியில் கேப்டன் எம்எஸ் தோனி 27 பந்துகளை சந்தித்து வெறும் 18 ரன்கள் மட்டுமே எடுத்து கடைசி ஓவரில் அவுட் ஆனார், இதுதான் அந்த அணியின் தோல்விக்கு மிக மிக முக்கிய பங்காற்றியது.
பிளெமிங் ஆதரவு:
இந்நிலையில் இந்தப் போட்டியில் மெதுவாக விளையாடிய எம்எஸ் தோனிக்கு சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுபற்றி போட்டி முடிந்த பின் அவர்,
"தோனி மட்டும் மெதுவாக விளையாடவில்லை, 137 என்பது கிட்டத்தட்ட வெற்றிக்கு சரியான இலக்காக இருந்த அந்த தருணத்தில் அதிரடி ஆட்டத்தை விளையாட பிட்ச் மிகவும் கடினமாக இருந்தது. போட்டி முடியும் வரை இரு அணி பேட்ஸ்மேன்களுக்கும் பெரிய ஷாட் அடித்து பெரிய அளவில் ரன்கள் குவிக்க அந்த பிட்ச் மிகவும் பேட்டிங்க்கு கடினமாக இருந்தது, இருப்பினும் நாங்கள் வெற்றிக்கு 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்திருந்தோம்
என கூறிய ஸ்டீபன் பிளமிங் துபாயில் இருக்கும் 3 விதமான மைதானங்களுக்கும் உடனுக்குடன் மாற்றிக் கொள்வது கடினமாக இருந்ததாகவும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கொஞ்சம் கூட பின்னடைவு அடைய வில்லை எனவும் தெரிவித்தார், அத்துடன் டெல்லி பவுலர்கள் சென்னை பேட்டிங் செய்தபோது வீசிய கடைசி 5 ஓவர்களில் மிகச் சிறப்பாக பந்து வீசினார்கள் எனவும் பாராட்டினார்.
ரவீந்திர ஜடேஜா:
இருப்பினும் கொல்கத்தா, ராஜஸ்தான் போன்ற அணிகளுக்கு எதிராக கடைசி நேரத்தில் களமிறங்கி பட்டையை கிளப்பிய ரவீந்திர ஜடேஜாவுக்கு முன்பாக தோனி களம் இறங்கியது தவறான முடிவு என்பதில் சந்தேகமே இல்லை.
![]() |
MS Dhoni (Photo : BCCI/IPL) |
ஒப்புக்கொண்ட தோனி:
ஆரம்ப கட்டத்தில் விழுந்த விக்கெட்டுகளை சரிசெய்ய இடையில் மெதுவாக விளையாடியது சரியானது, இருப்பினும் கடைசி கட்டத்தில் வேகமாக ஆட தவறிவிட்டோம், 150 என்பது சரியான இலக்காக இருந்திருக்கும்.
என டெல்லிக்கு எதிரான போட்டியில் மெதுவாக ஆடியதை கேப்டன் தோனி போட்டி முடிந்த பின்னர் தனது தோல்வியை செய்தியாளர்களிடம் ஒப்புக்கொண்டார்.
தடுமாறும் தோனி:
நேற்றைய போட்டியில் 27 பந்துகளை சந்தித்த போதும் தோனி ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை, அத்துடன் தோனி விளையாடிதிலேயே இதுதான் மிகவும் மெதுவான ஐபிஎல் இன்னிங்ஸ் ஆகும்.
மேலும் இந்த இன்னிசையும் சேர்த்து ஐபிஎல் கிரிக்கெட்டில் 4 இன்னிங்ஸ்சில் 20 பந்துகளுக்கும் மேல் சந்தித்த போதிலும் ஒரு பவுண்டரி கூட அடிக்காத கேப்டன் என்ற மோசமான சாதனையை தோனி படைத்தார், வேறு எந்த கேப்டனும் ஒரு முறைக்கு மேல் இதுபோல் விளையாடியதில்லை.
அவரின் 4 மெதுவான இன்னிங்ஸ்கள்:
- 28 (30) பெங்களூருக்கு எதிராக, 2009.
- 8* (22) கொல்கத்தாவுக்கு எதிராக, 2016.
- 12 (21) மும்பைக்கு எதிராக, 2019.
- 18 (27) டெல்லிக்கு எதிராக நேற்று, 2021.