IPL 2021: திணறும் சுரேஷ் ரெய்னா நீக்கப்படுவாரா - பயிற்சியாளர் பிளெமிங் பதில்

ஐபிஎல் 2021 தொடரி எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை பங்கேற்ற 11 போட்டிகளில் 9 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 18 புள்ளிகள் பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.

Suresh Raina | MS Dhoni (Photo : BCCI/IPL)


கடந்த 2020ஆம் ஆண்டு படுமோசமாக செயல்பட்ட சென்னை வரலாற்றிலேயே முதல்முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறி பெரிய அவமானத்தை சந்தித்தது, இருப்பினும் அந்த தோல்வியில் துவளாத தோனியின் சிங்கப்படை இந்த வருடம் அடுத்தடுத்த வெற்றிகளை குவித்து முதல் அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது, அந்த அணிக்கு வரும் அக்டோபர் 15ல் நடைபெறும் இறுதிப்போட்டியில் 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்வதே தற்போதைய அடுத்த இலக்காக உள்ளது.

இளம் வீரர்கள் வாய்ப்பு :

பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற காரணத்தால் எஞ்சிய 3 போட்டிகளில் சென்னை அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏனெனில் அணியில் இருக்கும் மூத்த வீரர்கள் தொடர்ச்சியாக 11 போட்டிகளில் பங்கேற்று உள்ளார்கள்.

அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வண்ணமாக நீண்ட நாட்களாக பெஞ்சில் அமர வைக்கப்பட்டுள்ள நாராயண் ஜெகதீசன், கிருஷ்ணப்பா கவுதம், ஷாய் கிசோர் போன்ற வீரர்களுக்கு இனி வரும் போட்டிகளில் வாய்ப்பு அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தடுமாறும் சின்ன தல:

அப்படி பார்த்தால் சென்னை அணியில் இந்த வருடம் மிகவும் மோசமாக தடுமாறி வரும் சுரேஷ் ரெய்னா தான் முதல் ஆளாக இருப்பார்.

  • இதுவரை அவர் பங்கேற்றுள்ள 11 போட்டிகளில் 157 ரன்கள் மட்டுமே எடுத்து படுமோசமான பார்மில் உள்ளார்.

ஒரு காலத்தில் எவ்வளவு பெரிய பவுலராக இருந்தாலும் ஐபிஎல் கிரிக்கெட் என்று வந்தால் அசராமல் வெளுத்து வாங்கிய சுரேஷ் ரெய்னா மிஸ்டர் ஐபிஎல் என்று அழைக்கப்பட்டு வந்தார் ஆனால் புலியாக இருந்த அவர் கடந்த சில வருடங்களாக பூனையாக மாறிவிட்டார் என்றே கூறலாம்.

Chennai Super Kings (Photo : BCCI/IPL)


இதே காரணத்தால் தோனிக்கு அடுத்து சென்னை ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் சின்ன தல என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை மோசமான பாரம் காரணமாக சென்னை அணி நிர்வாகம் எஞ்சிய போட்டிகளில் பென்ஞ்சில் அமர வைக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

பிளெமிங் பதில் :

இந்த நிலையில் தடுமாறி வரும் சுரேஷ் ரெய்னாவின் பார்ம் பற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்,

அவர் விஷயத்தில் எங்களுக்கு தெளிவான கருத்து உள்ளது, அவருக்கு தேவையான நேரம் அளிக்கப்படும். அவர் சிறப்பாக பேட்டிங் செய்து அவருக்குள் இருக்கும் ஆக்ரோஷமான பேட்ஸ்மேனை வெளிக்கொணர விரும்புகிறோம். நாங்கள் அவரின் அனுபவத்திற்க்கு மதிப்பளிப்போம், அவர் தொடர்ந்து விளையாடுவதற்கான எல்லா தகுதிகளையும் அவர் பெற்றுள்ளார். சுரேஷ் ஒரு அனுபவம் மிகுந்த வீரர், தொடர் செல்ல செல்ல அவரின் செயல்பாடுகள் முன்னேறும்

என கூறி சுரேஷ் ரெய்னா பார்ம் இல்லாமல் தவிக்கும் வேளையிலும் அவரின் அனுபவம் காரணமாக எஞ்சிய 2021 ஐபிஎல் போட்டிகளிலும் சுரேஷ் ரெய்னாவுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படும் என பிளெமிங் தெரிவித்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் மற்ற அணிகளை காட்டிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அனுபவத்திற்கு மதிப்பு அளிக்க கூடிய ஒரு அணியாக இருப்பது சுரேஷ் ரெய்னா விஷயத்திலும் எதிரொலிக்கிறது. 

Previous Post Next Post

Your Reaction