டி20 கிரிக்கெட்டில் 2 புதிய விதிமுறைகளை மாற்றி அறிவித்துள்ள ஐசிசி ! என்னனு பாருங்க

சர்வதேச அளவில் நடைபெற்றுவரும் கிரிக்கெட் போட்டிகளை தனது கண்காணிப்பில் நடத்தி வரும் சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி அவ்வப்போது தேவைக்கேற்ப சில விதிமுறைகளை மாற்றி அமைப்பது வழக்கமாகும்.

Photo Credits : BCCI


அந்த வகையில் சர்வதேச டி20 போட்டிகளில் பந்துவீசும் அணிகள் மெதுவாக பந்து வீசுவதால் அடிக்கடி சம்பளம் குறைப்பு போன்ற அபராததிற்கு உள்ளாகின்றன.

புதிய மாற்றம்:

இதற்கு தீர்வு காணும் வண்ணம் ஐசிசி 2 புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது, இதுபற்றி தனது நிர்வாகக் கூட்டத்தில் கிரிக்கெட் வல்லுனர்களிடம் விவாதித்த பின் இந்த விதிமுறைகளை ஐசிசி முடிவெடுத்துள்ளது. அதன்படி:

1. ஒரு பீல்டிங் தரப்பு இன்னிங்சில் இறுதி ஓவரின் முதல் பந்தை இன்னிங்ஸ் முடிவதற்குள் திட்டமிடப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட நேரத்திற்குள் வீசும் நிலையில் இருக்க வேண்டும்.

  • அவர்கள் அத்தகைய நிலையில் இல்லை என்றால், அந்த இன்னிங்சின் மீதமுள்ள ஓவர்களுக்கு 30 யார்டு வட்டத்திற்கு வெளியே ஒரு குறைவான பீல்டர் அனுமதிக்கப்படுவார்கள்.

எடுத்துக்காட்டாக ஒரு டி20 இன்னிங்ஸ் விளையாட 90 நிமிடங்கள் தேவை என உங்களுக்கு தெரியும், அந்த வகையில் 18வது ஓவரில் 90 நிமிடங்கள் முடிந்து இருக்கும் பட்சத்தில் அடுத்த 2 ஓவர்களில் உள்வட்டத்துக்கு வெளியே 1 பீல்டர் குறைவாக அனுமதிக்கப்படுவார், அதாவது 4 பீல்டர்கள் மட்டுமே அனுமதிக்க படுவார்கள்.

2. ஒவ்வொரு இன்னிங்ஸ்சின் மத்திய பகுதியில் (10வது ஓவர்) 2 நிமிடங்கள் மற்றும் 30 நொடிகள் கொண்ட குடிநீர் இடைவேளை வழங்கப்படும், இது ஒவ்வொரு தொடரின் தொடக்கத்திலும் உறுப்பினர்களுக்கிடையேயான உடன்படிக்கைக்கு உட்பட்டது.

3. வரும் ஜனவரி 16ம் தேதியன்று சபீனா பார்க் மைதானத்தில் துவங்கும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதும் டி20 போட்டியில் இருந்து இந்த புதிய விதிமுறைகள் டி20 கிரிக்கெட்டுக்கு அமலுக்கு வரும் என ஐசிசி அறிவித்துள்ளது.

கடந்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற்ற "தி ஹண்ட்ரட்" லீக் தொடரில் இந்த விதிமுறைகள் முதல் முறையாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது, அந்த தொடரில் இந்த விதிமுறைகள் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வெற்றியை கொடுத்ததன் காரணமாக சர்வதேச கிரிக்கெட் வாரியமும் அதைப் பின்பற்றி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கு இதை பயன்படுத்த முடிவெடுத்துள்ளது.

Previous Post Next Post

Your Reaction