ஐபிஎல் 2022 தொடர் : சென்னை சூப்பர் கிங்ஸ் முழு அணி இதோ

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் மெகா அளவில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 590 வீரர்கள் பங்கேற்ற இந்த ஏலத்தில் இறுதியில் 204 வீரர்கள் மட்டுமே 551 கோடி ரூபாய் செலவில் வாங்க பட்டுள்ளார்கள்.

Photo Credits : BCCI/IPL


இதில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுக்கு தேவையான 25 வீரர்களையும் முழுமையாக தேர்வு செய்துள்ளது. அதில் குறிப்பிடத்தக்க அம்சமாக இந்திய வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹர் அதிபட்சமாக 14 கோடிகளுக்கு அந்த அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இருப்பினும் பாப் டு பிளேஸிஸ், சுரேஷ் ரெய்னா, ஷார்துல் தாகூர் போன்ற முக்கிய வீரர்களை அந்த அணி நிர்வாகம் வாங்காதது சென்னை ரசிகர்களை கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முழு அணி விவரம்:

முன்னதாக இந்த மெகா ஏலத்துக்கு முன்பாக ரவீந்திர ஜடேஜா 16 கோடி, எம்எஸ் தோனி 12 கோடி, மொய்ன் அலி 8 கோடி, ருதுராஜ் கைக்வாட் 6 கோடி ஆகிய 4 வீரர்களை மிகப்பெரிய தொகைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தக்க வைத்தது. மொத்தம் அனுமதிக்கப்பட்ட 90 கோடி ரூபாயை ஏலத்தொகை இந்த 4 வீரர்களுக்கு செலவிட்ட தொகை மீதி 48 கோடிகளுடன் சென்னை அணி நிர்வாகம் இந்த ஏலத்தில் களமிறங்கியது.

1. பேட்டர்கள்: பேட்டிங் துறையில் எம்எஸ் தோனி, ருதுராஜ் கைக்வாட் ஆகியோருடன் ஏற்கனவே கடந்த சீசனில் விளையாடிய அனுபவம் வீரர்கள் அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா ஆகியோரை சென்னை அணி முதல் 2 வீரர்களாக வாங்கியது. அதேபோல் நியூசிலாந்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர் டேவோன் கான்வேயை 2வது நாளில் வாங்கிய அந்த அணி கடைசி நேரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நாராயண் ஜெகதீசன் மற்றும் ஹரி நிஷாந்த் ஆகியோரை கடைசி நாளில் வாங்கியது. அதேபோல் இளம் வீரர் சுபாஷ் சேனாதிபதியையும் கடைசி நேரத்தில் வாங்கியது.

ஆல் ரவுண்டர்கள்: மெகா ஏலத்துக்கு முன்பாக தேர்வு செய்யப்பட்ட மொயின் அலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஆல்ரவுண்டர் பிரிவில் இடம் வகிக்க அவர்களுடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ட்வயன் ப்ராவோ, தென்னாபிரிக்காவின் ட்வயன் பீட்ரஸ், இங்கிலாந்தின் கிறிஸ் ஜோர்டான், நியூசிலாந்தின் மிட்செல் சான்ட்னர் போன்ற வெளிநாட்டு ஆல்ரவுண்டர்களையும் சென்னை நிர்வாகம் வளைத்துப் போட்டது. அத்துடன் ஷிவம் துபேவையும் சமீபத்தில் நடந்த அண்டர்-19 உலக கோப்பையில் ராஜ்வர்தன் ஹங்கேர்க்கர் ஆகியோரையும் வாங்கிய சென்னை இளம் வீரர் பகத் வர்மாவையும் கடைசி கட்ட பரபரப்பான நேரத்தில் வாங்கியது.

3. பவுலர்கள்: மெகா ஏலத்துக்கு முன்பாக எந்த பந்து வீச்சாளர்களின் தக்கவைக்க சென்னை அணி நிர்வாகம் இந்தியாவின் தீபக் சஹரை கடுமையான போட்டிக்கு பின் 14 கோடிகள் என்ற மிகப்பெரிய தொகைக்கு வாங்கியது. மேலும் 2வது நாளில் இலங்கையின் மகேஷ் தீக்சனா நியூசிலாந்தின் ஆடம் மில்னே ஆகிய வெளிநாட்டு பந்துவீச்சாளர்களையும் சென்னை அணி அசத்தலாக வாங்கியது. அத்துடன் கேஎம் ஆசிப், துஷார் தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங், முகேஸ்க் சௌத்ரி, பிரசாந்த் சலோங்கி போன்ற இளம் பந்து வீச்சாளர்களும் சென்னை அணி நிர்வாகம் இம்முறை யோசிக்காமல் வாங்கியது.

ஐபிஎல் 2022 தொடரில் விளையாடப் போகும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதோ:

எம்எஸ் தோனி (கேப்டன்/கீப்பர்), ருதுராஜ் கைக்வாட், ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு (கீப்பர்), டேவோன் கான்வே, சுப்ரான்சு சேனாதிபதி, ஹரி நிஷாந்த், நாராயன் ஜெகதீசன்(கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, டுவைன் பிராவோ, சிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ட்வயன் பீட்ரஸ், மிட்செல் சான்ட்னர், கிறிஸ் ஜோர்டான், பகத் வர்மா, தீபக் சஹர், கே எம் ஆசிப், துசார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்சனா, ஆடம் மில்னே, சிமர்ஜீத் சிங், முகேஷ் சவுத்ரி, பிரசாந்த் சலோங்கி.


இந்த வீரர்களை வாங்க செலவிட்ட 45.05 கோடிகள் போக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் இன்னும் கூட 2.95 கோடிகள் மீதம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post

Your Reaction