MI vs PBKS : வாழ்வா சாவா போட்டியில் வெல்லப்போவது யார் - முழுவிவரம்

ஐபிஎல் 2021 தொடரின் 42 வது லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Mumbai Indians | Punjab Kings (Photo : BCCI/IPL)


செப்டம்பர் 28இல் நடைபெறும் 2 போட்டிகளின் 2வது போட்டியாக இப்போட்டி அபுதாபியில் நடைபெற உள்ளது. 

போட்டி விவரம் :

செப்டம்பர் 28, போட்டி 42, மும்பை இந்தியன்ஸ் V பஞ்சாப் கிங்ஸ், இரவு 7.30 மணி, அபுதாபி.

நேரடி ஒளிபரப்பு :

ஸ்டார் ஸ்போர்ட் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்.

முன்னோட்டம் :

மும்பை :

வரலாற்றில் 5 முறை கோப்பைகளை வென்று சாதனை படைத்த நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் இந்த வருடம் இதுவரை பங்கேற்ற 10 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே வெற்றி புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் திணறி வருகிறது.

துபாயில் நடைபெற்று வரும் இந்த வருடம் ஐபிஎல் தொடரின் 2வது பாகத்தில் அந்த அணி பங்கேற்ற 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளதால் மும்பை வீரர்கள் மனதளவில் சோர்ந்து போய் உள்ளார்கள்.

மும்பை பவுலர்கள் சிறப்பாக செயல்பட்ட போதிலும் அந்த அணியின் பேட்ஸ்மேன்களின் மோசமான பார்ம் காரணமா அடுத்தத்த தோல்விகளை சந்தித்து வருகிறது.

Mumbai Indians (Photo : BCCI/IPL)


குறிப்பாக பெங்களூருக்கு எதிரான கடைசி போட்டியில் வெறும் 111 ரன்களுக்கு முதல் முறையாக ஆல் அவுட்டாகி படுதோல்வி அடைந்தது.

  • பிளே ஆப் ஆப் சுற்றுக்கு முன்னேற இந்த போட்டி உட்பட இனி வரும் அனைத்துப் போட்டிகளிலும் வென்றாக வேண்டும் என்ற நிலைமை அந்த அணிக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே முக்கியமான முக்கியமான இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் மும்பை வீரர்கள் போராடி வெற்றியை காண தயாராக உள்ளனர்.

பஞ்சாப் :

மறுபுறம் தோற்க முடியாத போட்டிகளை கூட கடைசி ஓவரில் தோற்று வந்த பஞ்சாப் கிங்ஸ் அணி கடைசியாக ஹைதராபாத் அணிக்கு எதிராக த்ரில் வெற்றி பெற்றது.

அதன் காரணமாக புள்ளிப் பட்டியலில் 8 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் 5வது இடத்தில் உள்ளது.

மும்பையை போலவே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டுமானால் இந்த போட்டி உட்பட எஞ்சிய 3 போட்டிகளையும் பஞ்சாப் வென்றாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

Photo By BCCI/IPL

பஞ்சாப்புக்கும் பவுலர்கள் தொடர்ந்து கை கொடுத்து வரும் வேளையில் பேட்டிங் தான் பிரச்சனையாக இருந்து வருகிறது, எனவே இந்த முக்கியமான போட்டியில் குறைகளை சரி செய்து கொண்டு நடப்பு சாம்பியன் எதிர்கொள்ள பஞ்சாப் தயாராக உள்ளது.

இரு அணிகளுக்குமே இது வாழ்வா சாவா போட்டி என்பதால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

புள்ளி விவரங்கள் :

வரலாற்றில் இந்த 2 அணிகளும் இதுவரை மொத்தம் 27 போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடி உள்ளன.

  • அதில் மும்பை 14 போட்டிகளில் வென்றுள்ளது, பஞ்சாப் 13 போட்டிகளில் வென்றுள்ளது.
  • இந்த 2 அணிகள் கடைசியாக மோதிய 7 போட்டிகளில் மும்பை 4 முறையும் பஞ்சாப் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

பிட்ச் விவரங்கள் :

போட்டி நடைபெறும் அபுதாபி மைதானம் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டுக்குமே சாதகமாக இருந்து வருகிறது.

இந்த மைதானத்தில் கடைசியாக நடந்த 4 டி20 போட்டிகளில் 3 முறை சேசிங் செய்த அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச தீர்மானிப்பது நல்லது.

உத்தேச அணிகள்:

மும்பை இந்தியன்ஸ்:

மும்பையில் இருக்கும் அனைவருக்கும் தரமான வீரர்கள் சிறப்பாக செயல்பட்டாலே வெற்றியை பெறலாம்.

ரோஹித் சர்மா (கேப்டன்), குயின்டன் டீ காக் (கீப்பர்), சூரியகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்டிக் பாண்டியா, கிரன் பொல்லார்ட் க்ருனால் பாண்டியா, அடம் மில்னே, ராகுல் சஹர், ஜஸ்பிரிட் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்.

பஞ்சாப் கிங்ஸ்:

தோல்விகளுக்கு பின் வெற்றி பெற்றுள்ள பஞ்சாப் அணியிலும் பெரிய மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கலாம்.

கேஎல் ராகுல் (கேப்டன் - கீப்பர்), மயங் அகர்வால், கிறிஸ் கெயில், ஐடெண் மார்க்ரம், நிக்கோலஸ் பூரான், தீபக் ஹூடா, ஹார்ப்ரீத் ப்ரார், முகமத் ஷமி, ரவி பிஷ்ணோய், நாதன் எல்லிஸ் , அர்ஷிதீப் சிங்.

Previous Post Next Post

Your Reaction