KKR vs DC : கடைசி வாய்ப்பில் வெல்லுமா கொல்கத்தா - முழுவிவரம்

ஐபிஎல் 2021 தொடரின் 41வது லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் டெல்லி ஆகிய அணிகள் மோதுகின்றன.

Varun Chakravarthy | Rishap Pant (Photo : BCCI/IPL)


செப்டம்பர் 28இல் நடைபெறும் 2 போட்டிகளில் முதல் போட்டியாக இந்த போட்டி நாளை மதியம் 3.30 மணிக்கு நடைபெறுகிறது.

போட்டி விவரம் :

செப்டம்பர் 28, போட்டி 41, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் V டெல்லி கேப்பிடல், மதியம் 3.30 மணி, ஷார்ஜா.

நேரடி ஒளிபரப்பு :

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்.

முன்னோட்டம் :

கொல்கத்தா:

ஈயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணி இதுவரை பங்கேற்ற 10 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது.

இன்னும் 4 போட்டிகள் எஞ்சியிருக்கும் நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை அந்த அணியால் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

கடைசியாக சென்னைக்கு எதிராக கடைசி ஓவரின் கடைசி பந்து வரை போராடிய கொல்கத்தா வெறும் 2 விக்கெட் வித்தியாசத்தில் நூலிழையில் வெற்றியை விட்டது.

  • ஒருவேளை டெல்லிக்கு எதிரான இந்த போட்டியில் கொல்கத்தா தோற்கும் பட்சத்தில் அந்த அணியின் பிளே ஆப் கனவு 90% கலைந்து விடும், எனவே கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற நிலைமையில் டெல்லிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா களமிறங்க உள்ளது.

டெல்லி:

எதிர்புறம் 10 போட்டிகளில் 8 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் டெல்லி கேப்பிடல் ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது.

பேட்டிங், பவுலிங் என அனைத்து துறைகளிலும் கலக்கி வரும் டில்லி ராஜஸ்தானுக்கு எதிராக கடைசி போட்டியில் பெற்ற வெற்றியால் புத்துணர்ச்சியாக காணப்படுகிறது.

இருப்பினும் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் சென்னையை முந்தி முதல் இடத்தைப் பெற வேண்டும் என்ற நோக்கில் அந்த அணி இந்த போட்டியில் களமிறங்க தயாராகி உள்ளது.

புள்ளிவிவரங்கள் :

வரலாற்றில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் இதுவரை மொத்தம் 27 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.

  • அதில் கொல்கத்தா 14 போட்டிகளில் வென்று முன்னிலை வகிக்கிறது, டெல்லி 12 முறை வெற்றி பெற்றுள்ளது ஒரு போட்டி மழையால் முடிவின்றி போனது.

போட்டி நடைபெறும் ஐக்கிய அரபு நாடுகளில் இவ்விரு அணிகளும் இதுவரை 3 போட்டிகளில் மோதியுள்ளன, அதில் டெல்லி 2 போட்டிகளில் வென்றுள்ளது கொல்கத்தா 1 போட்டியில் வெற்றி பெற்றது.

பிட்ச் விவரங்கள் :

போட்டி நடைபெறும் சார்ஜா மைதானம் 2020இல் 100% பேட்டிங்க்கு கைகொடுத்து சிக்சர் மழை பொழிய வைத்தது ஆனால் இந்த வருடம் அப்படியே தலைகீழாக மாறி பிட்ச் பந்து வீச்சுக்கு மிகவும் மெதுவாக காணப்படுகிறது.

இங்கு இந்த வருடம் நடைபெற்ற 2 போட்டிகளிலும் பேட்டிங் பெரிய அளவில் எடுபடவில்லை, எனவே இந்தப் போட்டியிலும் பவுலர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம், பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாட வேண்டும்.

  • இந்த இந்த வருடம் நடைபெற்ற 2 போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதலில் ஸ்கோர் 141 ஆகும்.

அந்த 2 போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணி ஒரு முறையும் சேசிங் செய்த அணி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

உத்தேச அணிகள் :

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

கொல்கத்தா அணியில் சென்னைக்கு எதிரான போட்டியில் 19வது ஓவரில் வெற்றியை நழுவ விட்ட பிரசித் கிருஷ்ணாவுக்கு பதில் கமலேஷ் நாகர்கோட்டி சேர்க்கப்படலாம்.

சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, ஈயன் மோர்கன் (கேப்டன்), தினேஷ் கார்த்திக் (கீப்பர்), ஆண்ட்ரே ரசல், சுனில் நரேன், லோக்கி பெர்குசன், வருண் சக்ரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா/கமலேஷ் நாகர்கோட்டி.

டெல்லி கேபிட்டல்ஸ்:

டெல்லி அணில் பெரிய மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கலாம்.

பிரிதிவி ஷா, ஷிகர் தவான், ஷரேயஸ் ஐயர், சிம்ரோன் ஹெட்மயேர், ரிஷப் பண்ட் (கேப்டன்-கீப்பர்), லலித் யாதவ், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சார் படேல், காகிஸோ ரபாடா, அன்றிச் நோர்ட்ஜெ, அவேஷ் கான்.



Previous Post Next Post

Your Reaction