ஐசிசி டி20 உலககோப்பை 2021 : முழு அட்டவணை வெளியீடு

 

ஐசிசி 20 ஓவர் உலக கோப்பை 2021 தொடரின் முழு அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டுள்ளது, வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெறும் இந்தத் தொடரை இந்திய கிரிக்கெட் வாரியம் தனது உரிமையில் நடத்துகிறது, இதில் முதல் சுற்று, சூப்பர் 12 சுற்று, நாக்அவுட் சுற்று என 3 வகையான சுற்றுகள் நடைபெற உள்ளன.


முதல் சுற்று : இந்த உலக கோப்பையின் முதல் போட்டியில் வரும் அக்டோபர் 17ல் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள போட்டியை நடத்தும் ஓமன் தனது சொந்த மண்ணில் பப்புவா நியூ கினியாவை எதிர்கொள்கிறது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த சுற்றில் மொத்தம் 12 போட்டிகள் நடைபெற உள்ளன, அதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற உள்ளது. முதல் சுற்று அட்டவணை முழு இதோ :

Photo : ICC


சூப்பர் 12 சுற்று : வரும் அக்டோபர் 23 முதல் துபாயில் சூப்பர் 12 சுற்று தொடங்குகிறது, இந்த சுற்றின் முதல் போட்டியில் குரூப் 1 பிரிவில் இடம் பிடித்துள்ள ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. 6 அணிகள் இடம் பிடித்துள்ள இந்த பிரிவில் மொத்தம் 15 போட்டிகள் நடைபெற உள்ளன, அதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். குரூப் 1 முழு அட்டவணை இதோ :

Photo By ICC


இந்தியா - பாகிஸ்தான் : அதே போல குரூப் 2 பிரிவில் இடம் பிடித்துள்ள பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டி வரும் அக்டோபர் 24ம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இந்தியா உட்பட 6 அணிகள் இடம் பிடித்துள்ள இந்த பிரிவில் மொத்தம் 15 போட்டிகள் நடைபெற உள்ளன, அதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும், குரூப் 2 முழு அட்டவணை இதோ :

Photo By ICC


நாக் அவுட் சுற்று : சூப்பர் 12 சுற்றில் 2 பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றான அரையிறுதி சுற்றுக்கு முன்னேற உள்ளன, இந்த நாக் அவுட் சுற்றில் நடைபெறும் முதல் அரையிறுதி 2வது அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி ஆகிய போட்டிகள் மலையால் பாதிக்கப்படும் பட்சத்தில் அதற்கு ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 10, முதல் அரை இறுதி போட்டி, அபுதாபி.

நவம்பர் 11, 2வது அரையிறுதிப் போட்டி, துபாய்.

நவம்பர் 14, இறுதி போட்டி, துபாய்.


இந்தியாவின் போட்டிகள் :

அக்டோபர் 24, பாகிஸ்தானுக்கு எதிராக, துபாய்.

அக்டோபர் 31, நியூசிலாந்துக்கு எதிராக, துபாய்.

நவம்பர் 3, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, அபுதாபி.

நவம்பர் 5, குரூப் பி தகுதிச்சுற்றில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு எதிராக, துபாய்.

நவம்பர் 8, குரூப் ஏ தகுதி சுற்றில் 2வது இடம் பிடிக்கும் அணிக்கு எதிராக, துபாய்.

இந்தியா பங்கேற்கும் அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துவங்க உள்ளது, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி மட்டும் அபுதாபியில் நடைபெறுகிறத போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெற உள்ளது.

Previous Post Next Post

Your Reaction