2021 டி20 உலகக்கோப்பைக்கான நியூஸிலாந்து அணி அறிவிப்பு


ரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள 2021 டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணியை முதல் ஆளாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது, அதையும் சேர்த்து இந்த உலகக் கோப்பைக்கு முன்பாக இந்தியாவுக்கு எதிராக இந்தியாவில் நடைபெற இருக்கும் டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newzeland | Getty


அது மட்டுமல்லாமல் 18 வருடங்கள் கழித்து முதல் முறையாக வரும் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் நியூசிலாந்து அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது, பாகிஸ்தான் தொடருக்கு முன்பாக வங்கதேசத்திற்கு எதிராக நடைபெறவிருக்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அணியையும் சேர்த்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.


ராஸ் டைய்லர் இல்லை : டி20 உலகக் கோப்பை உட்பட இந்தியா,பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கான நியூசிலாந்து அணியில் அந்நாட்டு நட்சத்திர அனுபவ வீரர் ராஸ் டைலர் சேர்க்கப்படவில்லை, இருப்பினும் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மட்டும் அவரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தொடரில் சிக்கல் : செப்டம்பர் மாதத்தில் துபாயில் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், டிரென்ட் போல்ட் போன்ற முக்கியமான நட்சத்திர வீரர்கள் பங்கேற்க இருக்கிறார்கள், எனவே அந்த சமயத்தில் நடைபெறும் பாகிஸ்தான் தொடரில் அவர்கள் பங்கேற்கவில்லை, குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விளக்கியுள்ளார், அவருக்கு பதில் டாம் லாதம் கேப்டனாக செயல்பட உள்ளார்.


2021 டி20 உலககோப்பை மற்றும் இந்திய டி20 தொடருக்கான நியூஸிலாந்து அணி :

கேன் வில்லியம்சன் (கேப்டன்), டோட் அஸ்லே, ட்ரெண்ட் போல்ட், மார்க் சாப்மேன், டேவோன் கோன்வே, லோக்கி பெர்குசன், மார்ட்டின் குப்தில், கையில் ஜேமிசன், டார்ல் மிட்சேல், ஜிம்மி நீசம், கிளென் பில்லிப்ஸ், மிட்செல் சாண்ட்னெர், டிம் ஷைபெர்ட், இஸ் சோதி, டிம் சௌதீ, ஆடம் மில்னே (காயம் நிலுவை).


பாகிஸ்தான் டி20 தொடருக்கான நியூஸிலாந்து அணி :

டாம் லாதாம் (கேப்டன்), பின் ஆலன், டோட் அஸ்லே, கமீஸ் பென்னட், டாம் ப்ளுண்டேல்,மார்க் சாப்மேன், கோலின் டீ க்ராந்கோம், மார்ட்டின் குப்தில், மாட் ஹென்றி, டார்ல் மிட்செல், அஜஸ் படேல், பென் சியர்ஸ், இஷ் சோதி, பிளேர் டிக்னெர், வில் எங்.


பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் வங்கதேச டி20 தொடருக்கான நியூஸிலாந்து அணி :

டாம் லாதாம் (கேப்டன்), பின் ஆலன், கமீஸ் பென்னட், டாம் ப்ளுண்டேல், டக் ப்ரஸ்வல், கோலின் டி க்ராந்ஹோம் ஜேக்கப் டுபி, மாட் ஹென்றி (ஒருநாள் தொடரில் மட்டும்), ஸ்காட் குக்கெளிஜன், காலே மிக்கோன்ச்சி, ஹென்றி நிகோலஸ், அஜஸ் படேல், ரசின் ரவீந்திரா, பென் சியர்ஸ் (டி20ல் மட்டும்), பிளேர் டிக்னெர், வில் எங்.

Previous Post Next Post

Your Reaction