IPL 2022 : மெகா ஏலத்தில் வீரர்களை தக்கவைப்பதற்கான விதிகள் அறிவிப்பு

ஐபிஎல் 2021 தொடர் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில் 2022ஆம் ஆண்டு 15வது ஐபிஎல் சீசனை இன்னும் கோலகலமாக நடத்துவதற்கு பிசிசிஐ பல முயற்சிகளை எடுத்து வருகிறது, அதில் முக்கிய அம்சமாக அடுத்த வருடம் முதல் மேலும் 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

IPL 2022 Season
Photo Credits : BCCI/IPL


லக்னோ - அஹமதாபாத்:

இந்த 2 புதிய அணிகளை தேர்வு செய்வதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு துபாயில் நடைபெற்ற ஏலத்தில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய முக்கிய நகரங்களை மையமாகக் கொண்ட புதிய அணிகள் முறையே 7090 மற்றும் 5600 கோடி ரூபாய்களுக்கு ஏலத்தில் விலை போனது.

இதை தொடர்ந்து அடுத்த வருடம் முதல் 10 அணிகள் மற்றும் 74 போட்டிகளுடன் ஐபிஎல் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது, இந்த 2 புதிய அணிகள் தோற்றுவிக்கக்க பட்டுள்ளதால் அடுத்த வருடம் வீரர்களைத் தேர்வு செய்வதற்கு சிறிய அளவில் அல்லாமல் மெகா ஏலத்தை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் 2022 தொடருக்காக நடைபெறும் ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை ஒப்பந்த அடிப்படையில் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது பற்றிய முழு விதிமுறைகள் இன்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரபல கிரிக்கெட் இணையதளமான "இஎஸ்பிஎன்கிரிக்இன்போ" நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய விதிமுறைகள்:

1. அதன்படி ஏற்கனவே ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் சென்னை, மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், பஞ்சாப்,டெல்லி,  பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய 8 அணிகளும் அதிகபட்சமாக தாங்கள் விரும்பும் தலா 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம்.

2. அந்த 4 வீரர்களில் 3 பேர் இந்திய வீரர்களாக இருக்கலாம், 1 வெளிநாட்டு வீரராக இருக்கலாம் அல்லது 4 வீரர்களில் 2 பேர் இந்தியர்களாக இருக்கலாம், 2 பேர் வெளிநாட்டவர்களாக இருக்கலாம்.

IPL Trophy
Photo : BCCI/IPL


3. மெகா ஏலம் தொடங்குவதற்கு முன்பாக அதிகபட்சமாக தாங்கள் விரும்பும் 3 வீரர்களை தேர்வு செய்வதற்கு புதியதாக தோற்றுவிக்கப்பட்ட லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

  • அந்த 3 வீரர்களில் 2 பேர் இந்தியர்களாக இருக்க வேண்டும், ஒருவர் வெளி நாட்டவராக இருக்க வேண்டும்.

4. அதேபோல் இதற்கு முந்தைய சீசன்களில் வழங்கப்பட்ட ஆர்டிஎம் கார்டு முறை இந்த முறை அனுமதிக்கப்பட மாட்டாது.

  • ஆர்டிஎம் கார்டு என்பது ஒரு அணி தனக்காக ஏற்கனவே விளையாடிய அதே சமயம் அந்த ஏலத்தில் தக்க வைக்காத வீரரை இதர அணிகளை விட அதிக விலை கொடுத்து வாங்கும் முறையாகும்.

5. பின்னர் நடைபெறும் மெகா ஏலத்தில் வீரர்களை எடுக்க ஒவ்வொரு அணிகளுக்கும் அதிகபட்சமாக ரூபாய் 90 கோடிகள் மட்டுமே அனுமதிக்கப்படும், போன சீசனில் இது 85 கோடிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

6. மேலும் ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்களுக்காக செலவிட வேண்டிய தொகை அதிகபட்சமாக 33 கோடிகளாக மட்டுமே இருக்க வேண்டும்.

7. எடுத்துக்காட்டாக ஒரு அணி 3 வீரர்களை தக்க வைத்துக் கொண்டால் முதலில் தக்கவைக்கும் வீரருக்கு 15 கோடியும் இரண்டாவதாக தக்கவைத்து கொள்ளும் வீரருக்கு 11 கோடியும் மூன்றாவதாக தக்கவைக்கும் வீரருக்கு 7 கோடி வரை செலவிடலாம் - ஏற்கனவே விளையாடும் வீரருக்கு இதைவிட அதிக பட்சமான தொகை வழங்கப்படுவதைப் தவிர.

8. மேலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வீரர்களுக்கான அதிகபட்ச ஏலத்தொகை 3 கோடிகளாகும்.

இதை அடுத்து ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்கின்றன மற்றும் எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்கின்றன போன்ற முழு விவர பட்டியல் வருகின்ற மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதேபோல ஐபிஎல் 2022 மெகா ஏலம் நடைபெறும் தேதி மற்றும் எங்கு நடைபெறுகிறது போன்ற விபரங்களும் விரைவில் வெளியாகலாம்.

Previous Post Next Post

Your Reaction