IND vs NZ 2021 : ட்ராவில் முடிந்த பரபரப்பான முதல் டெஸ்ட் நிகழ்ந்த சாதனைகளின் பட்டியல்

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதிய 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த நவம்பர் 25ஆம் தேதி கான்பூரில் துவங்கியது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமான இப்போட்டியில் விராட் கோலி ரோகித் சர்மா உள்ளிட்ட இந்திய முக்கிய வீரர்கள் ஓய்வு எடுத்தனர்.

Photo Credits : Getty images 

இதனால் ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட சில இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்திய டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

ஷ்ரேயாஸ் ஐயர் சதம்:

இதை அடுத்து களமிறங்கிய இந்தியாவிற்கு சுப்மன் கில் 52 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்த போதிலும் புஜாரா, ரகானே போன்ற அனுபவ வீரர்கள் மீண்டும் ஏமாற்றியதால் 145/4 என தடுமாறியது.

அந்த வேளையில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் தனது முதல் போட்டியிலேயே பொறுப்புடனும் நிதானத்துடனும் விளையாடி அபார சதமடித்தார், இவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய ரவீந்திர ஜடேஜா 50 ரன்கள் எடுக்க இந்தியா முதல் இன்னிங்சில் 375 ரன்கள் எடுத்தது, நியூசிலாந்து சார்பில் சௌதீ 5 விக்கெட்டுகளும் கமிஷன 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

மீண்டும் ஜொலித்த ஷ்ரேயாஸ்:

பின நியூசிலாந்துக்கு தொடக்க வீரர்கள் லாதம் 95 ரன்களும், வில் எங் 89 ரன்களும் எடுத்து அபார தொடக்கம் கொடுத்த போதிலும் ஏனைய வீரர்கள் இந்தியாவின் சிறப்பான பந்து வீச்சில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் அந்த அணி முதல் இன்னிங்சில் 296 ரன்கள் மட்டுமே எடுத்தது, இந்தியா சார்பில் அக்ஷர் பட்டேல் 5 விக்கெட்டுகளும் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

இதை அடுத்து 49 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 51/5 என தடுமாறியபோது மீண்டும் அசத்திய ஸ்ரேயாஸ் அய்யர் 65 ரன்களும் கழுத்து வலியுடன் விளையாடிய சஹா 61* ரன்களும் எடுக்க இந்தியா 234/7 ரன்களில் டிக்ளேர் செய்தது.

ட்ராவில் முடிந்த டெஸ்ட்:

இதனால் 284 என்ற கடினமான இலக்கை துரத்திய நியூசிலாந்து டாம் லாதம் 52 ரன்கள் எடுத்து அவுட் ஆன பின் மற்ற பேட்ஸ்மேனகள் அடுத்தடுத்து அவுட் ஆனதால் தோல்வியை தடுக்க மெதுவாக விளையாடியது, இருப்பினும் இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி 9 விக்கெட்டுகளை சாய்த்த போதிலும் கடைசி நாளின் கடைசி ஒரு மணி நேரத்தில் ஒரு விக்கெட்டை எடுக்க முடியாத காரணத்தால் போட்டி டிராவில் முடிவடைந்தது.

  • நியூஸிலாந்தின் ரச்சின் ரவீந்திரா மற்றும் அஜாஸ் பட்டேல் ஆகியோர் இந்தியாவின் வெற்றியை தடுத்து நிறுத்தினர் என்றே கூறலாம்.

சரி பரபரப்பான இந்த போட்டியில் நிகழ்ந்த முக்கியமான சாதனைகள் பற்றி பார்ப்போம்:

1. இந்த போட்டியில் அறிமுமாக களமிறங்கிய முதல் போட்டியிலயே ஷ்ரேயஸ் ஐயர் முதல் இன்னிங்ஸ்ஸில் 105 ரன்கள் குவித்து சதம் விளாசி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த 16வது இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார்.

2. அதேபோல டெஸ்ட் போட்டிகளில் சொந்த மண்ணில் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த 10வது இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

3. முதல் இன்னிங்சில் 105 ரன்கள் 2வது இன்னிங்சில் 65 ரன்கள் என 2 இன்னிங்ஸ்களிலும் அசத்திய ஸ்ரேயாஸ் அய்யர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியிலேயே சதம் மற்றும் அரை சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற புதிய வரலாற்றை படைத்தார்.

4. அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே அதிக ரன்கள் அடித்த 3வது இந்திய பேட்டர் என்ற பெருமையையும் பெற்றார்.

  • ஷிகர் தவான் - 187
  • ரோஹித் சர்மா - 177
  • ஷ்ரேயாஸ் ஐயர் - 170

5. இது மட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது வெல்லும் 7வது இந்திய வீரர் என்ற பெருமையையும் ஸ்ரேயாஸ் அய்யர் அடைந்தார்.

6. இப்போட்டியில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய அக்ஷர் பட்டேல் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக வருடத்திலேயே அதிக முறை 5 விக்கெட்கள் எடுத்த ஆசிய பவுலர் என்ற புதிய சாதனையை படைத்தார்.

  • கடந்த மார்ச் 2021இல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான அவர் இதுவரை வெறும் 4 போட்டிகளில் பங்கேற்று 5 முறை 5 விக்கெட் ஹால் எடுத்து இந்த சாதனை படைத்துள்ளார்.

7. இப்போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்த தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய 3வது இந்திய பவுலர் என்ற ஹர்பஜன்சிங் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்தார்.

ஹர்பஜன் சிங் 103 போட்டிகளில் எடுத்த 417 விக்கெட்டுகளை அஸ்வின் வெறும் 80 போட்டிகளிலேயே முந்தி அசத்தியுள்ளார்.

  • அனில் கும்ப்ளே - 619
  • கபில் தேவ் - 434
  • ரவிச்சந்திரன் அஷ்வின் - 419*
  • ஹர்பஜன் சிங் - 417

8. அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 80 போட்டிகளுக்கு பின் அதிக விக்கெட்டுகள் எடுத்த 2வது பவுலர் என்ற சாதனையையும் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்தார்.

  • முத்தையா முரளிதரன் - 450 விக்கெட்கள்.
  • ரவிச்சந்திரன் அஷ்வின் - 419 விக்கெட்கள்.

9. இப்போட்டியின் 2வது இன்னிங்சில் 4 வருடங்கள் கழித்து முக்கியமான அரைசதம் அடித்த 61* ரன்கள் எடுத்த ரித்திமான் சஃகா டெஸ்ட் போட்டிகளில் அதிக வயதில் அரை சதம் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையைப் பெற்றார்.

  • சஹா 37 வயது 35 நாட்கள்
  • பரூக் என்ஜினீயர் 35 வயது 305 நாட்கள்

10. கடந்த சில வருடங்களாக பாரம் இல்லாமல் தவித்து வரும் புஜாரா இந்த போட்டியில் மீண்டும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றினார், இதன் வாயிலாக சதம் அடிக்காமல் அதிக இன்னிங்ஸ்கள் விளையாடிய இந்திய பேட்ஸ்மேன் என்ற அஜித் வடேகரின் மோசமான சாதனையை அவர் சமன் செய்தார்.

  • புஜாரா - 39* இன்னிங்ஸ் (2019 - 2021)
  • அஜித் வடேகர் - 39 இன்னிங்ஸ்  (1968 -74)
  • புஜாரா - 37 இன்னிங்ஸ் (2013 - 2016)

Previous Post Next Post

Your Reaction