IPL 2022 Retention : கேஎல் ராகுலை முறைகேடாக வாங்க முயலும் லக்னோ, ஆத்திரத்தில் பஞ்சாப்

ஐபிஎல் 2022 தொடரின் மெகா ஏலத்திற்கு முன்பாக ஏற்கனவே உள்ள பழைய 8 அணிகள் தக்க வைத்துள்ள முழு வீரர்களின் பட்டியல் நேற்று வெளியானது. அந்த அறிவிப்பில் அதிகபட்சமாக மும்பை, டெல்லி, சென்னை ஆகிய அணிகள் முறையே ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 16 கோடிகளுக்கு அதிகபட்சமாக தக்க வைத்தன.

Photo Credits : BCCI/IPL


ஆச்சரியப்படுத்தும் பஞ்சாப்:

இதில் மிகவும் குறைவாக பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் வெறும் 2 வீரர்களை மட்டுமே தக்க வைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது, அதில் மேலும் ஆச்சரியமாக அந்த அணிக்கு கேப்டனாக இருந்த நட்சத்திர வீரர் கேஎல் ராகுலை அந்த அணி தக்க வைக்காமல் விடுவித்தது.

மயங் அகர்வால் மற்றும் இளம் வீரர் அர்ஷிதீப் சிங் ஆகிய இருவரை மட்டும் முறையே 12 மற்றும் 4 ஆகிய கோடிகளுக்கு தக்க வைத்தது, இதனால் மற்ற அணிகளை காட்டிலும் 72 கோடிகளுடன் காலத்தில் அதிக தொகையுடன் களமிறங்கும் அணியாக பஞ்சாப் விளங்குகிறது.

அதிர்ச்சி பின்னணி:

இந்த நிலையில் கேஎல் ராகுல் தக்கவைக்க பஞ்சாப் அணி விரும்பியதாகவும் ஆனால் அவருக்கு அதில் விருப்பம் இல்லாத காரணத்தினாலேயே அவர் வெளியேறி விட்டார் எனவும் அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் அனில் கும்ப்ளே திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளார்.

  • கடந்த 2020 ஆம் ஆண்டு கேப்டனாக இருந்த ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக கேஎல் ராகுல் பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார், கேப்டனாக பொறுப்பேற்ற பின்னர் கடந்த 2 வருடங்களாக பஞ்சாப் அணிக்கு மலை போல ரன்கள் குவித்த போதிலும் அவரால் அந்த அணியை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.

இருப்பினும் கூட பஞ்சாப் அணி நிர்வாகம் அவருக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்கவில்லை என தெரிகிறது ஆனாலும் பேட்டிங்கில் நல்ல பார்மில் இருக்கும் காரணத்தால் தன்னுடைய மவுசு கூடி இருப்பதை உணர்ந்து உள்ள அவர் மெகா ஏலத்தில் பங்கேற்று இன்னும் அதிக தொகையை சம்பளமாக பெற்று விளையாட விரும்புகிறார் என தெரிகிறது.

புதிய அணிகளின் முறைகேடு:

இந்த நிலையில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட லக்னோ அணி நிர்வாகம் பஞ்சாப் கொடுக்கும் தொகையை விட அதிக தொகை கொடுப்பதாகவும் அதை ஏற்றுக் கொண்டு தங்கள் அணிக்கு கேப்டன்ஷிப் செய்ய வேண்டும் எனவும் கேஎல் ராகுலை முறைகேடாக தொடர்பு கொண்டதாக பஞ்சாப் அணி நிர்வாகம் தற்போது குற்றம் சாட்டியுள்ளது. இதுபற்றி பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர் நெஸ் வாடியா அளித்துள்ள பேட்டியில்,

ராகுலை தக்க வைப்பதற்கு நாங்கள் விரும்பினோம் ஆனால் அவர் மெகா ஏலத்தில் பங்கேற்க முடிவு எடுத்துவிட்டார் ஆனால் அதற்கு முன்பாக அவரை வேறு அணி நிர்வாகம் தொடர்பு கொண்டிருந்தால் அது ஒழுக்கமற்ற தன்மையாகும், மேலும் இது பிசிசிஐ கட்டமைத்துள்ள ஐபிஎல் விதிமுறைகளுக்கு எதிரானது

என தெரிவித்த அவர் இது பற்றி பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகத்திடம் புகார் அளிக்க உள்ளதாகவும் பிடிஐ நிறுவனத்தில் தெரிவித்தார். அத்துடன் முகமது சமி, ரவி பிஷ்னோய் போன்ற கடந்த சீசனில் விளையாடிய முக்கிய வீரர்களை மீண்டும் ஏலத்தில் தேர்வு செய்ய உள்ளதாகவும் கூறினார்.

ராகுலுக்கு தடை:

பஞ்சாப் உரிமையாளர் கூறுவது போல ஏலத்திற்கு முன்பாக கேஎல் ராகுலை லக்னோ அணி நிர்வாகம் தொடர்பு கொண்டது நிரூபிக்கப்பட்டால் அவருக்கு தடை விதிக்க வாய்ப்புள்ளது ஏனெனில் கடந்த 2010ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணியில் இடம் பெற்றிருந்த நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா இதேபோல ஏலத்திற்கு முன்பாக மற்ற அணிகளிடம் தொடர்பு கொண்டு பேசினார். ராஜஸ்தான் அணி நிர்வாகம் தக்க வைப்பதற்கு முன்பாகவே அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதன் காரணமாக ஐபிஎல் நிர்வாகம் 1 வருடம் விளையாட தடை செய்தது.

  • புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள. லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் அதிகபட்சமாக 3 வீரர்களை தேர்வு செய்ய வரும் டிசம்பர் 25ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த வரிசையில் லக்னோ அணி நிர்வாகம் ஏலத்தில் தக்க வைக்கப் படாத வார்னர், சஹால், அஷ்வின் உள்ளிட்ட பல முன்னணி வீரர்களை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளது, அதில் கேஎல் ராகுல் முதல் வீரராக தேர்வு செய்து கேப்டன் பொறுப்பை ஒப்படைக்க உள்ளதாகவும் தெரியவருகிறது.

மொத்தத்தில் இந்த விஷயம் சிறிய அளவில் முடிந்து விடுமா அல்லது ராகுலுக்கு தடை விதிக்கும் அளவுக்கு செல்லுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Previous Post Next Post

Your Reaction