ரோஹித் - கோலி இடையே பனிப்போர் ! ஓய்வு எடுக்கும் நேரம் சந்தேக பட வைக்கிறது - முன்னாள் கேப்டன் அசாருதீன் கேள்வி

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் டிசம்பர் 26ஆம் தேதி முதல் 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட தொடர்களில் பங்கேற்க உள்ளது.

Photo Credits : BCCI


இதில் முதலில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

ரோஹித் புதிய கேப்டன்:

இருப்பினும் அதன்பின் நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார், சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையுடன் 20 ஓவர் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விடை பெற்றதை அடுத்து அவருக்கு பதில் ரோகித் சர்மா நியமிக்கப்பட்டிருந்தார்.

ஆனால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து கேப்டனாக செயல்பட விராட் கோலி விரும்பிய போதிலும் உலக கோப்பை வெல்ல முடியாத காரணத்தால் அவரை அதிரடியாக நீக்கிய பிசிசிஐ ரோகித் சர்மாவை இந்திய வெள்ளை பந்து கிரிக்கெட்டின் முழுநேர கேப்டனாக நியமித்துள்ளது.

காயம் மற்றும் ஓய்வு:

இந்த வேளையில் வரும் டிசம்பர் 26 ஆம் தேதி துவங்கும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து புதிய துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோகித் சர்மா காயம் காரணமாக விலகுவதாக நேற்று பிசிசிஐ அறிவித்தது, இந்த டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வண்ணம் மும்பையில் அவர் பயிற்சி மேற்கொண்டிருந்த போது காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதில் இளம் வீரர் பிரியங் பஞ்சல் சேர்க்கபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

  • இந்த செய்தி வெளியான அடுத்த ஒரு சில மணி நேரங்களில் வரும் ஜனவரி மாதம் துவங்க இருக்கும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற விரும்புவதாக செய்திகள் வெளியாகின.

சந்தேகம்:

வரும் ஜனவரி மாதம் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட விராட் கோலி விரும்புவதாக பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளார், இதனால் தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடரில் அவர் பங்கேற்க மாட்டார்.

என இந்த முடிவு பற்றி விராட் கோலி ஏற்கனவே பிசிசிஐயிடம் தெரிவித்து விட்டதாக முக்கிய பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கேப்டன் பதவி மாற்றப்பட்ட இந்த முக்கியமான நேரத்தில் இந்தியாவின் 2 கேப்டன்களாக இருக்கும் இந்த 2 முக்கிய வீரர்கள் இவ்வாறு அறிவித்துள்ளது இவர்களிடையே மனக்கசப்பு இருப்பதை வெளிப்படுத்துவதாக இந்திய ரசிகர்கள் நேற்று சமூக வலைத்தளங்களில் சலசலத்தனர்.

  • ஆனால் வரும் ஜனவரி மாதம் தன் குழந்தையான "வாமிகா" வின் பிறந்தநாள் வருவதால் அதை கொண்டாடும் வகையிலேயே விராட் கோலி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இடையே எந்தவித சண்டையும் இல்லை என விராட் கோலியின் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

பனிப்போர்:

இந்நிலையில் தென்ஆப்பிரிக்க தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் நிலைப்பாடு தெளிவாக இல்லை என இந்தியாவின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கூறியுள்ளார். இதுபற்றி டுவிட்டர் பக்கத்தில் அவர்,

தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடரில் விராட் கோலி பங்கேற்க போவதில்லை என தெரிவித்துள்ளார் மறுபுறம் ரோகித் சர்மா டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை, ஓய்வு எடுப்பது எந்த தவறும் இல்லை ஆனால் அதற்கான நேரம் சிறந்ததாக இருக்க வேண்டும். இது இருவருக்கும் இடையே பிளவு இருப்பதற்கான ஆதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது அல்லது மற்றொரு வகையான (ஒருநாள்) கிரிக்கெட்டில் இருந்து விடுபடுவதை காட்டுகிறது

என பதிவிட்டுள்ளார். விராட் கோலி ஓய்வு எடுத்துள்ள நேரமானது இருவருக்கும் இடையே பிளவு இருப்பதை காட்டுகிறது எனவும் கேப்டன்ஷிப் பதவி பறிக்கப்பட்டதால் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து மொத்தமாக முழுக்க போடும் விராட் கோலியின் எண்ணத்தை பிரதிபலிப்பதாகவும் முகமது அசாருதீன் வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

பிளவு உறுதியா:

தனது மகளின் பிறந்தநாளை கொண்டாடும் வகையிலேயே விராட் கோலி ஒருநாள் தொடரில் இருந்து ஓய்வு எடுக்க உள்ளார் என விராட் கோலியின் ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள் ஆனால் அவர்கள் கூறுவது போல விராட் கோலியின் மகள் வாமிகாவின் பிறந்தநாள் வரும் ஜனவரி 11 ஆகும்.

அந்த நாளில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி கேப் டவுன் நகரில் தொடங்க உள்ளது, அதன்பின் ஜனவரி 19ஆம் தேதி தான் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் துவங்க உள்ளது, அதிலிருந்து தான் விராட் கோலி ஓய்வு எடுக்க உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

  • ஒருவேளை மகளின் பிறந்தநாளை கொண்டாட அவர் ஓய்வெடுத்தால் டெஸ்ட் தொடரின் பாதியில் அல்லவா ஓய்வு எடுக்க வேண்டும் மாறாக மகளின் பிறந்தநாள் முடிந்த பின்னர் தொடங்கும் ஒருநாள் தொடரில் ஓய்வு பெற தேவையே இல்லை என்ற விஷயம் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்குமிடையே கேப்டன்ஷிப் மாற்றப்பட்டதன் காரணமாக பனிப்போர் உள்ளதை தெளிவாக காட்டுகிறது என்றே கூற வேண்டும்.

Previous Post Next Post

Your Reaction