Vijay Hazare Trophy 2021 : நூலிழையில் காப்பாற்றிய ரன் ரேட் அதிர்ஷ்டம், தப்பிய தமிழ்நாடு - காலிறுதிக்கு தகுதி

இந்தியாவில் கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி துவங்கிய விஜய் ஹசாரே கோப்பை 2021 தொடரின் லீக் சுற்று போட்டிகள் இன்று முடிந்துள்ளன, மொத்தம் 38 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்றில் அனைத்து அணிகளும் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணிகளும் தலா 5 போட்டிகளில் மோதின.

Photo Credits : ESPN


இதில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற தமிழக கிரிக்கெட் அணி எலைட் குரூப் பி பிரிவில் இடம் பிடித்து இருந்தது.

தமிழ்நாடு:

இதை அடுத்து துவங்கிய இந்த தொடரின் முதல் 3 போட்டிகளில் நடப்புச் சாம்பியன் மும்பை, கர்நாடகா மற்றும் பெங்கால் ஆகிய அணிகளுக்கு எதிராக அபாரமாக விளையாடிய தமிழ்நாடு முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.

  • இருப்பினும் அண்டை மாநிலமான பாண்டிச்சேரிக்கு எதிராக நடைபெற்ற 4வது போட்டியில் வெறும் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றியை கோட்டை விட்ட தமிழ்நாடு தனது கடைசி லீக் போட்டியில் இன்று பரோடாவை திருவனந்தபுரத்தில் உள்ள கேசிஏ கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொண்டது.

கடைசி போட்டியில் தோல்வி:

இந்த முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற பரோடா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது,  இதையடுத்து களமிறங்கிய பரோடா அணி தமிழகத்தின் சிறப்பான பந்துவீச்சு ஈடுகொடுக்க முடியாமல் வெறும் 39 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 114 ரன்கள் மட்டுமே எடுத்தது.

  • அதிக பட்சமாக க்ருனால் பாண்டியா 38 ரன்கள் எடுத்தார். தமிழகத்தின் சார்பில் பந்துவீச்சில் அசத்திய வாசிங்டன் சுந்தர், சித்தார்த், சந்திப் வாரியர், சஞ்சய் யாதவ் அகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

இதனால் மிக சுலபமாக வெற்றி பெற்றுவிடும் என எதிர்பார்த்த தமிழ்நாடு பேட்டிங் செய்ய களமிறங்கியதும் சீட்டுக்கட்டு சரிவது போல தங்களது விக்கெட்டுகளை இழந்தது. தினேஷ் கார்த்திக், ஷாருக்கான் உள்ளிட்ட எந்த ஒரு முக்கிய வீரரும் பெரிய அளவில் ரன்கள் எடுக்கத் தவறியதால் 20.2 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தமிழையும் வெறும் 74 ரன்களுக்கு சுருண்டது.

  • அதிக பட்சமாக சஞ்சய் யாதவ் 19 ரன்கள் எடுத்தார், இதன் காரணமாக பரோடா 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

காப்பாற்றிய ரன் ரேட்:

இந்த போட்டியுடன் லீக் சுற்று முடிந்த நிலையில் எலைட் குரூப் பி பிரிவில் புள்ளி பட்டியலில் அதிர்ஷ்டவசமாக தமிழ்நாடு நூலிழையில் முதலிடத்தை பிடித்தது.

ஏனெனில் 1, 2, 3, 4 ஆகிய முதல் 4 இடங்களை, பிடித்த தமிழ்நாடு, கர்நாடகா பெங்கால் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய 4 அணிகளுமே பங்கேற்ற 5 போட்டிகளில் தலா 3 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் பதிவு செய்து தலா 12 புள்ளிகளுடன் முதல் 4 இடங்களைப் பிடித்தன.

நல்ல வேளையாக ரன் ரேட் அடிப்படையில் தமிழ்நாடு நூலிழையில் முதலிடத்தை பிடித்து குரூப் பி பிரிவின் வின்னர் என்ற பெருமை பெற்றது, அத்துடன் பெங்கால் அணிக்கு எதிரான முக்கிய போட்டியில் கர்நாடகா 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது தமிழகத்திற்கு சாதகமாக மாறியது.

எலைட் குரூப் பி பிரிவு புள்ளி பட்டியலின் ரன் ரேட்:

  • தமிழ்நாடு : +1.047
  • கர்நாடகா : +0.784
  • பெங்கால் : - 0.123
  • பாண்டிசேரி : - 1.602

இதன் காரணமாக காலிறுதிச் சுற்றுக்கு நேரடியாக தமிழ்நாடு தகுதி பெற்ற அசத்தியுள்ளது, ஒருவேளை 2வது இடத்தை பிடித்து இருந்தால் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மீண்டும் விளையாடி அதில் வெற்றி பெற்றால் மட்டுமே காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்க முடியும்.

காலிறுதி சுற்று:

  • இதை தொடர்ந்து டிசம்பர் 21இல் துவங்கும் காலிறுதி சுற்றில் தமிழ்நாடு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெற்றி பெறும் அணிகளில் ஏதேனும் ஒரு அணியுடன் மோத உள்ளது.

Previous Post Next Post

Your Reaction