விராட் கோலியின் அனுபவத்துக்கு ஈடாகுமா இந்திய தேர்வு குழு - முன்னாள் இந்திய வீரர் சுளீர் கேள்வி

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது, இதற்கான இந்திய அணியினர் ஏற்கனவே தென்னாப்பிரிக்காவிற்கு சென்றடைந்து வலைப் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

Photo Credits : Getty Images


இந்த சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடருக்கு பின் நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி நீக்கப்பட்டு ரோகித் சர்மா நியமிக்கப்பட்டது கடந்த ஒரு வாரமாக இந்திய கிரிக்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

வலுக்கட்டாய நீக்கம்:

ஏனென்றால் சமீபத்தில் 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து கேப்டனாக செயல்பட விரும்புவதாக தெரிவித்திருந்தார் ஆனால் ஒரு உலக கோப்பையை கூட வெல்ல காரணத்தால் அவரின் ஒருநாள் கேப்டன்ஷிப் பதவி வலுக்கட்டாயமாகப் பறிக்கக்கப்பட்டு ரோஹித் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் விராட் கோலியிடம் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என கேட்டுக்கொண்டதாகவும் ஆனால் அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை என தெரிவித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி கூறினார், அத்துடன் 2 வெள்ளை பந்து கிரிக்கெட்டுக்கு 2 தனித்தனி கேப்டன்கள் தேவையற்ற ஒன்று என இந்திய தேர்வு குழுவினர் கருதியதால் இந்த முடிவு எடுத்ததாக கடந்த வாரம் தெரிவித்தார்.

வெடித்த சர்ச்சை:

ஆனால் சௌரவ் கங்குலி தம்மைத் தொடர்பு கொண்டு டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று கூறவில்லை என தென் ஆப்பிரிக்காவுக்கு புறப்படும் முன்பாக விராட் கோலி தெரிவித்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

  • அத்துடன் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது பற்றி தென்னாபிரிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்ய வெறும் 1.5 மணி நேரம் முன்பாகவே தேர்வு குழுவினர் தம்மிடம் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மொத்தத்தில் இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டதில் இந்திய தேர்வு குழுவினரின் பெரிய அளவில் பங்காற்றியுள்ளது இதிலிருந்து தெரிய வந்துள்ளது.

கங்குலியின் பங்கு:

இந்நிலையில் விராட் கோலியின் அனுபவத்திற்கு கூட இந்திய தேர்வுக்குழுவினர் ஈடாக மாட்டார்கள் என முன்னாள் இந்திய வீரர் க்ரிதி ஆசாத் கடுமையாக விமர்சித்துள்ளார். இது பற்றி நியூஸ் 18 தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் அவர் பேசுகையில்,

இந்த முடிவை தேர்வு குழுவினர் எடுத்திருந்தால் அவர்கள் நிச்சயம் சௌரவ் கங்குலியிடம் சென்றிருப்பார்கள். பொதுவாக ஒரு அணியை தேர்வு செய்யும் வேளையில் அந்த அணியை தேர்வு செய்துவிட்டு அது பற்றி விவாதிக்க பிசிசிஐ தலைவரிடம் செல்வோம், நான் இந்திய தேர்வு குழு தலைவராக இருந்தபோது கூட அதுதான் நடந்தது. அதை அவர் பார்த்து படித்த பின்னர் கையெழுத்து இட்ட பிறகே அந்த அணியானது வெளியில் அறிவிக்கப்படும், எப்போதுமே அணி தேர்வு செய்த பின் அது தலைமையின் பார்வைக்கு செல்லும்.

என தெரிவித்த கிரித்தி ஆசாத் விராட் கோலியின் ஒருநாள் கேப்டன் பதவி பறிக்கப்படுவது பற்றி முன்கூட்டியே கங்குலிக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும் எனவும் அவர் கையொப்பம் இட்ட பின்னரே அவர் அனுமதியுடன் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கும் எனவும் கூறினார்.

அனுபவத்துக்கு ஈடாகுமா:

எப்போதுமே ஒரு கேப்டனை மாற்றும் போது அது பிசிசிஐ தலைவருக்கு தெரிவிக்கப்படும், இந்த விஷயத்தில் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது விராட் கோலிக்கு வலித்திருக்காது ஆனால் கேப்டன் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்ட விதம் நிச்சயமாக அவருக்கு வலியை கொடுத்திருக்கும். அவரின் கேப்டன் பதவி பற்றி கங்குலிக்கு தெரிந்ததும் அவர் விராட் கோலியிடம் பேசியிருப்பார் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம், மேலும் இந்திய தேர்வு குழுவினர் அனைவரும் சிறப்பானவர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் விளையாடிய ஒருநாள் போட்டிகளை கணக்கிட்டு அதை விராட் கோலி விளையாடிய ஒரு நாள் போட்டிகளுடன் ஒப்பிட்டால் அதில் பாதி அளவு கூட வராது

என இது பற்றி மேலும் தெரிவித்த ஆசாத் இந்திய தேர்வுக் குழுவில் இடம் வகிக்கும் சேத்தன் சர்மா, சுனில் ஜோஷி, அபய் குருவிலால் ஆகியோர் ஒட்டுமொத்தமாக விளையாடிய போட்டிகளை விட விராட் கோலி அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர் என இந்திய தேர்வுக்குழுவினர் மறைமுகமாக சாடியுள்ளார்.

Previous Post Next Post

Your Reaction