IND vs SA 2nd Test 2022 : புத்தாண்டில் இந்தியா சரித்திர படைக்க மழை வழிவிடுமா ! பிட்ச் - வெதர் ரிப்போர்ட், முழு விவரம்

தென்ஆப்பிரிக்காவில் அங்கு அந்த அணிக்கு எதிராக இந்தியா பங்கு பெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது, இதில் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி அன்று நடந்த முதல் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா அந்த போட்டி நடந்த செஞ்சுரியன் மைதானத்தில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்த ஆசிய அணி என்ற சரித்திரம் படைத்தது.

Photo Credits : Getty Images


இதை அடுத்து இந்தத் தொடரின் 2வது போட்டி ஜனவரி 3ஆம் தேதியன்று தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் இருக்கும் வான்ட்ரஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது.

முன்னோட்டம்:

தென்ஆப்பிரிக்கா: தென்னாபிரிக்க அணியை பொறுத்தவரை சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டியில் பேட்டிங் மோசமாக இருந்தது, அந்த அணி கேப்டன் டீன் எல்கர் மற்றும் தெம்பா பவுமா ஆகியோரைத் தவிர ஏனைய வீரர்கள் ரன்கள் குவிக்க திணறுகிறார்கள்.

போதாக்குறைக்கு அந்த அணி விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக் திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளது அந்த அணிக்கு மேலும் பின்னடைவை கொடுத்துள்ளது. பந்து வீச்சில் லுங்கி நிகிடி, ரபாடா போன்றவர்கள் இருந்தாலும் முக்கியமான நேரத்தில் சிறப்பாக பந்து வீச தவறியது அந்த அணிக்கு தோல்வியை கொடுத்தது.

  • இருப்பினும் முதல் போட்டியில் பெற்ற தோல்விகளிலிருந்து அந்த அணி மீண்டும் எழுந்து முடிந்தவரை தோல்வியை தவிர்க்க போராடும் என நம்பலாம்.

இந்தியா : இந்திய அணியைப் பொறுத்தவரை மிகச் சிறப்பான வேகபந்து வீச்சு காரணமாக கடந்த சில வருடங்களாகவே உலகின் எந்த ஒரு இடத்திலும் வெற்றி பெறும் வல்லமை பெற்றுள்ளது, இந்த தொடரின் முதல் போட்டியிலும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அதிரடியாக பந்து வீசியதால் இந்தியாவின் வெற்றி வசமாகியது.

பேட்டிங்கில் கேஎல் ராகுல் இடம் வகிக்கும் ஓப்பனிங் வீரர்கள் இந்தியாவைக் காப்பாற்றி வருகிறார்கள் என்றாலும் அவர்களுக்கு கீழ் வரும் விராட் கோலி, புஜாரா ஆகியோர் அடங்கிய மிடில் ஆர்டர் படுமோசமான பார்மில் உள்ளது கவலையளிக்கும் விஷயமாகும்.

முதல் போட்டியில் கூட 278/3 என நல்ல நிலையில் இருந்து 327 ஆல் அவுட்டான போதிலும் சிறப்பான பந்துவீச்சால் தோல்வியில் இருந்து இந்தியா தப்பியது, எனவே 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய மிடில் ஆர்டர் பேட்டர்கள் பொறுப்புடன் செயல்பட்டால் இந்தியாவின் வெற்றி நிச்சயம்.

புத்தாண்டில் சரித்திரம்:

1992 முதல் இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரை கூட வெற்றி பெற முடியவில்லை எனவே இந்த 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று புதிதாகப் பிறந்துள்ள இனிய 2022 புத்தாண்டில் அந்த வரலாற்றை மாற்றி எழுதி புதிய சரித்திரத்தை இந்தியா படைக்குமா என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் இப்போட்டிக்காக காத்திருக்கின்றனர்.

வழிவிடுமா மழை:

செஞ்சூரியனில் நடந்த முதல் போட்டியின் 2வது நாள் மழை காரணமாக முற்றிலும் ரத்து செய்யப்பட்டது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம் இருப்பினும் அந்த போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டதால் இந்தியா வெற்றியை உறுதி ஆக்கியது.

  • .அந்த வகையில் 2வது போட்டி நடைபெறும் ஜொகனஸ்பர்க் நகரிலும் போட்டி நாட்களின் போது மழை வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக 1, 2 ஆகிய நாட்களில் மதிய நேரத்திற்கு பின் மழைக்கான வாய்ப்பு 40% உள்ளது, 3வது நாளில் மழை பெய்வதற்கு வாய்ப்பு மிகமிகக் குறைவாக காணப்பட்டாலும் 4 மற்றும் 5வது நாட்கள் முழுவதும் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு அதிகமாக உள்ளது.

  • எனவே இந்தப் போட்டி முழுமையாக நடைபெறுமா என சந்தேகம் எழுகிறது, இருப்பினும் மழையின் இடையூருக்கு மத்தியில் முதல் டெஸ்ட் போட்டி போல இந்தப் போட்டியின் முடிவு கிடைக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பிட்ச் ரிப்போர்ட்:

இந்த போட்டி நடைபெறும் வாண்ட்ரர்ஸ் மைதானம் வரலாற்றில் பேட்டிங் மற்றும் பவுலின் என இரண்டுக்குமே சாதகமாக இருந்து வருகிறது, இருப்பினும் இந்த மைதானத்தில் காணப்படும் சற்று அதிகப்படியான பவுன்ஸ் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக கைகொடுக்கும்.

எனவே முதல் போட்டி போலவே இந்த மைதானத்திலும் ஆரம்ப கட்டத்தில் பேட்டர்கள் நிதானத்துடன் விளையாடினால் மட்டுமே பெரிய ஸ்கோர்கள் அடிக்க முடியும், சுழல் பந்து வீச்சாளர்களுக்கு இம்மைதானம் கணிசமான அளவு மட்டுமே சாதகமாக காணப்படும்.

வரலாற்றில் இங்கு 84% விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர்கள் எடுத்துள்ளதால் இந்தப் போட்டியிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என நம்பலாம், மேலும் இங்கு கடைசியாக நடந்த 5 போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 207 ஆகும், எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச தீர்மானிப்பது நல்லது.

Previous Post Next Post

Your Reaction