பொறுப்பில்லாத ரிஷப் பண்ட்க்கு ராகுல் டிராவிட் மூங்கில் அடி கொடுக்க வேண்டும் - சுனில் கவாஸ்கர் கருத்து

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்றுவரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேற்று ஜோகனஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்று முடிந்த 2வது போட்டியில் தென்னாபிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Photo Credits : Getty Images


இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய போதிலும் மோசமான பேட்டிங் காரணமாக போராடி தோல்வி அடைந்த இந்தியா இந்த தொடரில் 1 - 1 என சமனில் உள்ளது.

பொறுப்பில்லாத பண்ட்:

இந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைவதற்கு விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட் மோசமாக பேட்டிங் செய்தது ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது, முதல் இன்னிங்சில் வெறும் 17 ரன்கள் மட்டும் எடுத்து அவர் 2வது இன்னிங்சில் திண்டாடிக் கொண்டிருந்த இந்தியாவை புண்ணியமாய் போகும் என்ற அளவுக்கு புஜாரா மற்றும் ரகானே 111 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தனர் ஆனால் முக்கிய நேரத்தில் அவர்கள் அவுட் ஆனதும் அடுத்து வந்த ரிஷப் பண்ட் 3 பந்ததுகள் சந்தித்து டக் அவுட் ஆனார்.

குறிப்பாக அவர் சந்தித்த 2வது பந்துக்கு பின் ஷார்ட் லெக் பகுதியில் நின்று கொண்டிருந்த தென் ஆப்பிரிக்க வீரர் ராசி வன் டுஷன அவரின் விக்கெட்டை எடுப்பதற்காக ஸ்லெட்ஜிங் செய்தார், அதற்காக கடுப்பான பண்ட் அடுத்த பந்திலேயே இறங்கி சென்று சிக்ஸர் அடிக்க முயன்று எதிரணியிடம் தனது விக்கெட்டை தாரை வார்த்தார்.

கவாஸ்கர் கேள்வி:

இந்நிலையில் ரிஷப் பண்ட் பேட்டிங் பற்றி இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுபற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர்,

ரிஷப் பண்ட் 30 அல்லது 40 ரன்களுக்காக பேட்டிங் செய்கிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் ஆனால் ஆஸ்திரேலியாவில் அவர் இவ்வாறு செயல்படவில்லை, அங்கு ஆரம்பக்கட்டத்திலேயே மிகவும் கடினமான சூழ்நிலை இருக்கும் என்பதை புரிந்து கொண்டு நிதானத்துடன் பிட்ச்க்கு ஏற்றார் போல விளையாடும் யுக்தியை கையாண்டார்.

 

இதே யுத்தியை கையில் எடுத்து இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் ஆரம்ப கட்டத்தில் விளையாடினார், அதாவது பிட்சில் இறங்கி சென்று ஜேம்ஸ் ஆண்டர்சனை அடிக்க முயன்றார், அந்த சமயத்தில் அவர் அதை சிறப்பாக செய்தார் ஆனால் எல்லா நேரமும் நான் அவ்வாறு தான் விளையாடுவேன் என தற்போது அவர் அடம்பிடிக்கிறார், எல்லா நேரமும் இவ்வாறு விளையாடுவது முற்றிலும் தவறானது, என்னைக்கேட்டால் உடைமாற்றும் அறையில் ராகுல் டிராவிட் கண்டிப்புடன் பேசவேண்டும் அல்லது கிரிக்கெட்டில் கூறுவதுபோல ரிஷப் பண்ட்க்கு டிராவிட் "மூங்கில்" கொடுக்க வேண்டும்

என ரிஷப் பண்ட் விளையாடி வரும் விதம் மிகவும் தவறானது என சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். ஆஸ்திரேலிய தொடரில் அவர் அதிரடியாக விளையாடி இந்தியாவிற்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது சிறப்பான அம்சம் என்றாலும் எல்லா நேரங்களிலும் அந்த உத்தி இந்தியாவிற்கு சாதகத்தை அளிக்காது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அனைவரும் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் ரன்கள் அடிக்க வில்லை என கூறுகிறார்கள் ஆனால் 2021 பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கு பின்னர் ரிஷப் பண்ட் பெரிய அளவில் அடிக்கவில்லை என தெரிவித்துள்ள கவாஸ்கர் இவரின் பொறுப்பில்லாத போக்கை இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள ராகுல் டிராவிட் கண்டிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.



Previous Post Next Post

Your Reaction