கேப்டன் கிங் கோலி இல்லாத நேரம் பார்த்து இந்தியாவை சாய்த்த தென்ஆப்பிரிக்கா ! வியக்கவைக்கும் ரிப்போர்ட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2வது போட்டியில் தென்னாபிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1 - 1 என தொடரை சமன் செய்துள்ளது.

Photo Credits : Getty Images


முன்னதாக இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் சரித்திர வெற்றி பெற்ற இந்தியா 1 - 0 என தொடரில் முன்னிலை வகித்த போதிலும் 2வது போட்டியில் போராடித் தோல்வி அடைந்துள்ளது.

கேப்டன் கோலி:

இந்த போட்டியில் இந்தியாவின் கேப்டன் விராட் கோலி முதுகுப் பிடிப்பு காரணமாக ஓய்வு எடுத்தார், அவருக்கு பதில் இதற்கு முன் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டன்ஷிப் செய்த அனுபவம் இல்லாத கேஎல் ராகுல் இந்தியாவிற்கு தலைமை ஏற்று நடத்தினார்.

அவரும் தன்னால் முடிந்த அளவுக்கு மிகச் சிறப்பாகவே கேப்டன்ஷிப் செய்தார் என்று கூறலாம், இருப்பினும் மோசமான பேட்டிங் புஜாரா, ரகானே, ரிஷப் பண்ட் போன்ற ஒரு சில வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டம் காரணமாக இந்தியா வேறு வழியின்றி தோல்வியைத் தழுவியது.

கிங் கேப்டன் கோலி:

இந்த போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி இல்லாத நேரத்தைப் பயன்படுத்திய தென்னாப்பிரிக்கா மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவை சாய்த்து விட்டது என்றே கூறலாம் ஏனெனில் இதுவரை 67* டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவிற்கு கேப்டன்ஷிப் செய்துள்ள விராட் கோலி அதில் 40* வெற்றிகளை குவித்து வரலாற்றின் வெற்றிகரமான இந்திய டெஸ்ட் கேப்டன் என்ற சாதனை படைத்துள்ளார்.

ஒருநாள், டி20 போட்டிகளில் அவரின் கேப்டன்ஷிப் விமர்சனங்களை சந்தித்தாலும் நவீன கால டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரின் கேப்டன்ஷிப்புக்கு ஈடு இணை யாருமே கிடையாது என்பதே நிதர்சனம், அவர் கடந்த 2 வருடங்களாக பேட்டிங்கில் ரன்கள் குவிக்க முடியாமல் பார்ம் இல்லாமல் தவித்தாலும் தனது ஆக்ரோஷமான கேப்டன்ஷிப் காரணமாக இந்தியாவிற்காக பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார் என்றே கூறலாம்.

கோலி இருந்திருந்தால்:

நேற்றைய போட்டியில் அனுபவம் வாய்ந்த அவர் இல்லாத காரணத்தால் இதர இந்திய வீரர்கள் குறிப்பாக பந்து வீச்சாளர்கள் சோர்வுடன் காணப்பட்டனர், இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 240 ரன்களை எளிதாக எட்டிப்பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஒருவேளை இந்த போட்டியில் விராட் கோலி கேப்டனாக இருந்திருந்தால் இந்தியா கண்டிப்பாக வெற்றி பெற்றிருக்கும் அல்லது குறைந்தபட்சம் என்ற டிரா செய்திருக்கும் என்று கூறலாம்.

  • ஏனென்றால் விராட் கோலி தலைமையில் குறைந்தபட்சம் 150 ரன்களை எதிரணிக்கு இலக்காக நிர்ணயித்த போட்டிகளில் இந்தியா தோற்றதே கிடையாது

ஆம் அவர் தலைமையில் இதற்கு முன் 150 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எதிர் அணிக்கு வெற்றி இலக்காக 27 போட்டிகளில் இந்தியா நிர்ணயித்துள்ளது, அதில் 25 போட்டிகளில் விராட் கோலி தலைமையில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது, 2 போட்டிகளில் டிரா செய்தது, ஒரு போட்டியில் கூட தோற்றதே கிடையாது.

  • இது மட்டுமல்லாமல் இதேபோல 150+ ரன்களை எதிர் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்த கடைசி 46 டெஸ்ட் போட்டிகளில் 33 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது (தோனி, கோலி தலைமையில்) 13 போட்டிகளில் டிரா செய்துள்ளது, ஒரு போட்டிகளில் தோற்றதே கிடையாது.
அத்துடன் கடந்த 15 வருடங்களில் இந்தியாவுக்கு எதிராக 4வது இன்னிங்சில் வெற்றிகரமாக சேஸிங் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் (240 ரன்கள்) இதுவாகும்.

1. 240* தென்ஆப்பிரிக்கா, ஜொஹானஸ்பேர்க், 2021/22*.

2. 211 தென்ஆப்பிரிக்கா, கேப் டவுன், 2006/07.

இந்த நிலையில் வரும் ஜனவரி 11ஆம் தேதி நடைபெறும் இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது டெஸ்ட் போட்டிக்கு கேப்டன் விராட் கோலி திரும்ப உள்ளார் என ராகுல் டிராவிட் உறுதிப்படுத்தியுள்ளது இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 

Previous Post Next Post

Your Reaction