IND vs SA 2nd Test 2022 : காலம் கடந்த புஜாரா - ரகானே, பொறுப்பில்லா பண்ட் ! இந்தியா தோல்வியடைய 4 காரணங்கள்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று ஜொகனஸ்பர்க் நகரில் நடைபெற்று முடிந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா போராடி அடைந்தது, முன்னதாக கடந்த டிசம்பர் 26 அன்று துவங்கிய 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று 1 - 0 என முன்னிலை பெற்றது.

Photo Credits : Getty Images


அந்த வேளையில் கடந்த ஜனவரி 3ஆம் தேதி அன்று இந்தியாவுக்கு ராசியான ஜோகனஸ்பர்க் மைதானத்தில் துவங்கிய 2வது டெஸ்ட் போட்டியில் முடிந்த வரை போராடிய போதிலும் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது, மறுபுறம் சொந்த மண்ணில் மிகச் சிறப்பாக விளையாடிய தென் ஆப்பிரிக்காவின் கேப்டன் டீன் எல்கர் 96* ரன்கள் குவித்து இந்தியாவிற்கு பதிலடி கொடுத்து தொடரை 1 - 1 என சமன் செய்து அசத்தியுள்ளார்.

தோல்விக்கான காரணங்கள்:

உலகின் நம்பர் ஒன் அணி, பல தரமான வீரர்கள், மிகச் சிறப்பான பந்துவீச்சு என அனைத்தும் அமைந்த போதிலும் இந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர். சரி இந்த போட்டியில் இந்தியா தோற்க வித்திட்ட 4 காரணங்கள் பற்றி பார்ப்போம்:

1. காலம் கடந்த புஜாரா - ரகானே:

இப்போட்டியின் முதல் இன்னிங்சில் வழக்கம்போல தொடக்க வீரர் கேஎல் ராகுல் சிறப்பாக பேட்டிங் செய்து 50 ரன்கள் குவித்து நல்ல தொடக்கம் கொடுத்தார் ஆனால் அந்த நல்ல தொடக்கத்தை 2 வருடங்களாக பார்மின்றி திணறி வரும் அனுபவ வீரர்களான புஜாரா 3 ரன்கள் எடுத்தும் ரகானே டக் அவுட்டாகி வீணடிடித்தார்கள் என்றே கூறலாம்.

  • இவர்களின் இந்த மோசமான பேட்டிங் அடுத்து வந்த வீரர்கள் மீது தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தியதால் இறுதியில் இந்தியா 202 ரன்களுக்கு சுருண்டது, ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டும் 46 ரன்கள் எடுக்க வில்லை என்றால் 200 ரன்களைக் கூட எட்டி இருக்க முடியாது.

இருப்பினும் இதே ஜோடி காலம் கடந்த பின்னர் தங்களது கிரிக்கெட் வாழ்க்கை பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் 2வது இன்னிங்சில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து 111 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியா 240 ரன்களை இலக்காக நிர்ணயிக்க உதவிய போதிலும் அது பயனிலலாமல் போனது, மொத்தத்தில் இந்த ஜோடியின் மோசமான பேட்டிங் இப்போட்டியில் இந்தியாவிற்கு தோல்வியை பரிசளிக்க முக்கிய காரணமாகும்.

2. பொறுப்பில்லாத பண்ட்:

இப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது அந்த அணியின் கீகன் பீட்டர்சன் 20 ரன்களை தாண்டுவதற்கு முன்னரே கேட்ச் கொடுத்தார் ஆனால் அதை இந்திய விக்கெட் கீப்பர் பண்ட் தவறவிட இறுதியில் அவர் 62 ரன்கள் அடித்து அசத்தினார்.

  • ஒருவேளை அந்த கேட்ச் பிடித்து இருந்தால் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 27 ரன்கள் முன்னிலை பெற்று இருக்காது, இது கூட பரவாயில்லை விடுங்கள் ஆனால் 2வது இன்னிங்சில் அவர் டக் அவுட் ஆனது தான் புஜாரா - ரஹானேவையும் தாண்டி இந்தியாவின் தோல்விக்கு வித்திட்டது என நான் கூறுவேன்.

ஆம் 2வது இன்னிங்சில் திண்டாடிக் கொண்டிருந்த இந்தியாவை புண்ணியமாய் போகும் என்ற அளவுக்கு புஜாரா மற்றும் ரகானே 111 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தனர் ஆனால் முக்கிய நேரத்தில் அவர்கள் அவுட் ஆனதும் அடுத்து வந்த ரிஷப் பண்ட் 3 பந்ததுகள் சந்தித்து டக் அவுட் ஆனார்.

அவர் சந்தித்த 2வது பந்திலேயே ஒரு கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பினார் அப்போது ஷார்ட் லெக் பகுதியில் நின்று கொண்டிருந்த தென்ஆப்பிரிக்க வீரர் ராசி வேன் டேர் டுஷன் அவரின் விக்கெட்டை எடுப்பதற்காக ஸ்லெட்ஜிங் செய்தார், உடனே அதற்காக கோபப்பட்ட பண்ட் அடுத்த பந்திலேயே இறங்கி சிக்ஸர் அடிக்க முயன்று 3-வது பந்தில் பொறுப்பில்லாமல் அவுட் ஆகி இந்தியாவின் தோல்விக்கு முக்கிய பங்காற்றினார் என்று கூறலாம்.

3. ஹீரோ பும்ரா:

அந்த மோசமான நேரத்தில் இந்தியாவை தாங்கிப் பிடிக்க நினைத்த ஹனுமா விஹாரி ஒருபுறம் நிலைத்து நின்று இந்தியாவை காப்பாற்ற முயன்றார், குறிப்பாக எதிர்புறம் அஷ்வின் மற்றும் ஷமி ஆகியோர் அவுட் ஆனதும் அடுத்து வந்த பும்ராவை வைத்துக்கொண்டு ரன்கள் குவிக்கலாம் என அவர் நினைத்தார்.

குறிப்பாக ஓவரின் முதல் 3, 4 பந்துகளை சந்தித்து ரன்களை எடுத்து விட்டு கடைசி ஒரு சில பந்துகளில் பும்ராவிடம் ஸ்ட்ரைக் கொடுத்து அவரை சிங்கிள் எடுக்க கேட்டார் ஆனால் அதை மதிக்காத பும்ரா ரபாடா போன்ற பந்துவீச்சாளர்களை சிக்ஸர் அடிக்க முயன்றார், அந்த வேளையில் தென் ஆப்பிரிக்க வீரர் மேக்ரோ ஜென்சென் வேண்டுமென்றே வம்பிழுக்க அதற்காக கோபப்பட்ட பும்ரா இறுதியில் ஒரு சிக்சர் மட்டுமே அடித்து விக்கெட்டை கோட்டை விட்டார்.

மேற்கூறிய தருணம் பற்றி லைவாக போட்டியை பார்த்தவர்கள் மட்டுமே புரியும், ஒருவேளை விஹாரியின் பேச்சைக் கேட்டு அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து இருந்தால் இன்னும் 30 ரன்கள் இந்திய அதிகமாக எடுத்திருந்திருக்கும்.

4. கேப்டன் ராகுல்:

இவை அனைத்தையும் விட இந்த போட்டியில் இந்தியா தோற்பதற்கு இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் வெற்றிகரமான கேப்டனாக இருக்கும் விராட் கோலி இல்லாததே மிக மிக முக்கிய காரணமாகும், அவரின் ஆக்ரோஷமான கேப்டன்சிப் இல்லாத காரணத்தால் குறிப்பாக 4வது இன்னிங்சில் இந்திய பவுலர்கள் சோர்வுடன் பந்து வீசினார்கள்.

மறுபுறம் தனது முதல் போட்டியில் கேப்டன்ஷிப் செய்த கேஎல் ராகுல் பற்றி எந்தவித குறையும் கூறுவதற்கு இல்லை.

Previous Post Next Post

Your Reaction