சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் டபுள் ஹாட்ரிக் எடுத்த பவுலர்களின் பட்டியல்

பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் நிறைந்த டி20 கிரிக்கெட்டில் ஒரு பவுலர் அடுத்தடுத்த 2 விக்கெட்டுகளை எடுப்பதே கடினமான ஒன்று என்ற நிலைமையில் ஹாட்ரிக் அதாவது 3 பந்துகளில் தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை எடுப்பதெல்லாம் அரிதினும் அரிதான நிகழ்வாகும். அதிலும் 2 விக்கெட்டுகள் எடுத்த பின் 3-வது விக்கெட்டை விடக்கூடாது என்பதற்காக புதிதாக களமிறங்கும் பேட்ஸ்மேன் எப்படியாவது தடுத்த நிறுத்த முயற்சிப்பார்.

Lasith Malinga (Photo : ICC)


அத்தோடு 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்து எடுத்த பவுலர் 3-வது விக்கெட்டை எடுப்பாரா என்ற மைதானத்தில் இருக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அந்த பலருக்கு இயற்கையான பதற்றத்தை கொடுத்து சுமாராக பந்துவீச்சு வைக்கும். அவை அனைத்தையும் தாண்டி 3-வது பந்திலும் தொடர்ச்சியாக விக்கெட் எடுத்தால் தான் ஒரு பவுலர் சரித்திரத்தில் தனது பெயரை எழுத முடியும். அப்படி ஹாட்ரிக் எடுப்பதே ஒரு பலருக்கு சிம்ம சொப்பனம் என்ற நிலையில் டபுள் ஹாட்ரிக் எடுப்பதெல்லாம் குதிரைக் கொம்பாகும்.


அதென்ன டபுள் ஹாட்ரிக் என்கிறீர்களா? அது வேறு ஒன்றுமில்லை ஹாட்ரிக் எடுக்கும் பவுலர்கள் அதோடு நிற்காமல் 4-வது பந்திலும் மீண்டும் ஒரு விக்கெட்டை எடுத்து 4 பந்துகளில் 4 விக்கெட்டுகள் எடுப்பதுதான் வல்லுநர்கள் டபுள் ஹாட்ரிக் என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். அந்த வகையில் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் டபுள் ஹாட்ரிக் எடுத்த பவுலர்களை பற்றி பார்ப்போம்:


1. ரசித் கான்: கடந்த 2019இல் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் இந்தியாவில் உள்ள டேராடூன் மைதானத்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதின. அதில் முதல் 2 போட்டிகளில் ஏற்கனவே வென்ற ஆப்கானிஸ்தான் சம்பிரதாயத்துக்காக களமிறங்கிய 3-வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 210/7 ரன்களை குவித்தது அதிகபட்சமாக முகமது நபி 81 (36) ரன்களை தெறிக்கவிட்டார்.


அதை துரத்தி அயர்லாந்துக்கு கெவின் ஓ'பிரையன் 74 (47) ஆண்டி பல்பரின் 47 (33) என டாப் ஆர்டர் பார்டர் பேட்ஸ்மேன்கள் நல்ல ரன்கள் எடுத்து வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர். அப்போது 74 ரன்கள் எடுத்து மிரட்டிக்கொண்டிருந்த ஓ'பிரையனை 15-வது ஓவரின் கடைசி பந்தில் காலி செய்து போட்டியை திருப்பிய ரசித் கான் 17-வது ஓவரில் ஜார்ஜ் டாக்றேல் 18 (10) ஷேன் கெட்கேட் 2 (4) சிமி சிங் 0 (1) என அடுத்தடுத்த 3 பந்துகளில் 3 விக்கெட்டுகளை எடுத்தார். மொத்தம் தொடர்ச்சியாக வீசிய 4 பந்துகளில் 4 விக்கெட்டுக்களை எடுத்து அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் டபுள் ஹாட்ரிக் எடுத்த முதல் பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனை படைத்தார். அதனால் 32 ரன் வித்தியாசத்தில் வென்ற ஆப்கானிஸ்தான் 3 - 0 என கோப்பையை முத்தமிட்டது.


2. லசித் மலிங்கா: வித்தியாசமான சிலிங்கா ஆக்சனால் பேட்ஸ்மேன்களை எப்போதுமே திணறடிக்க கூடிய இலங்கை ஜாம்பவான் லசித் மலிங்கா சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஹாட்ரிக் எடுத்த பவுலராக சாதனை படைத்துள்ளார். அப்படிப்பட்ட அவர் கடந்த 2019இல் பல்லேக்கேள் நகரில் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த 3-வது டி20 போட்டியில் கேப்டனாக இலங்கையை வழிநடத்தினார்.


அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை வெறும் 175 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் சுலபமாக வென்று விடும் என கருதப்பட்ட நியூசிலாந்துக்கு 3-வது ஓவரை வீசிய அவர் 3-வது பந்தில் கோலின் முன்றொவை 12 (12) ரன்களில் காலிசெய்து அதோடு நிற்காமல் அடுத்து 3 பந்துகளில் அடுத்து வந்த ருத்தர்போர்ட் 0 (1), கோலின் டீ கிராண்ட்ஹோம் 0 (1), ராஸ் டெய்லர் 0 (1) என தரமான பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து 3 பந்துகளில் அதுவும் கோல்டன் டக் அவுட் செய்து எரிமலையாக பந்து வீசி 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை எடுத்து டபுள் ஹாட்ரிக் எடுத்த முதல் இலங்கை பவுலராக சரித்திரம் படைத்தார். அவரின் மிரட்டலால் மேற்கொண்டு மீளமுடியாத நியூசிலாந்து வெறும் 28 ரன்களுக்கு சுருண்டு 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.


3. குர்ட்டிஸ் கேம்பேர்: கடந்த 2021 ஐசிசி டி20 உலக கோப்பையில் நடைபெற்ற முதல் சுற்றின் 3-வது போட்டியில் நெதர்லாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய கத்துக்குட்டிகள் மோதின. அதில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து ஒரு கட்டத்தில் 51/2 என்ற நிலையில் இருந்தது. அப்போது 10-வது ஓவரை வீசிய அயர்லாந்து பவுலர் குர்ட்டிஸ் கேம்பர் 2, 3, 4, 5 ஆகிய அடுத்தடுத்து 4 பந்துகளில் கோலின் அக்கர்மன் 11 (16) ரியான் டென் டோஎஸ்ட் 0 (1) ஸ்காட் எட்வர்ட்ஸ் 0 (1) வேன் டெர் மெர்வே 0 (1) என 3 கோல்டன் டகவுட் உட்பட அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தார் அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.


அதன் வாயிலாக டி20 உலகக் கோப்பை வரலாற்றில் டபுள் ஹாட்ரிக் எடுத்த முதல் பந்து வீச்சாளர் என்ற வரலாற்றையும் அவர் படைத்தார். அதனால் வெறும் 106 ரன்களுக்கு சுருண்ட நெதர்லாந்து இறுதியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.


4. ஜேசன் ஹோல்டர்: கடந்த ஜனவரியில் சொந்த மண்ணில் இங்கிலாந்தை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் எதிர்கொண்டது. அதில் 4 போட்டிகளின் முடிவில் 2 - 2 என இரு அணிகளும் சமநிலை பெற்றதால் வெற்றியாளரை தீர்மானிக்க பிரிட்ஜ்டவுன் நகரில் நடைபெற்ற கடைசி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 179/4 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பொல்லார்ட் 41* (25) ரன்கள் எடுத்தார்.


பின்னர் 180 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு ஜேம்ஸ் வின்ஸ் 55 (35) சாம் பில்லிங்ஸ் 41 (28) என முக்கிய பேட்ஸ்மேன்கள் தேவையான ரன்கள் எடுத்ததால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது அதை வீசிய ஜேசன் ஹோல்டர் 2 ஒய்ட்களுடன் ஆரம்பித்தாலும் 2, 3, 4, 5 ஆகிய பந்துகளில் கிறிஸ் ஜோர்டான் 7 (10) சாம் பில்லிங்ஸ் 41 (28) அடில் ரசித் 0 (1) சக்கிப் மஹ்மூத் 0 (1) என அடுத்தடுத்து 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை எடுத்து இங்கிலாந்தை 162 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தார். அதனால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் டபுள் ஹாட்ரிக் எடுத்த முதல் முதல் பந்து வீச்சாளர் என்ற சாதனை படைத்த அவர் தனது அணிக்கு 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியுடன் கோப்பையையும் வென்று கொடுத்தார்.

Previous Post Next Post

Your Reaction