இங்கிலாந்தை இந்தியா தலைகுனிய வைத்துவிட்டது - குற்றம்சாட்டும் இங்கிலாந்து

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதி வந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 5வது போட்டி இன்று மான்செஸ்டர் நகரில் தொடங்குவதாக இருந்தது ஆனால் ரவிசாஸ்திரி உள்ளிட்ட தலைமை பயிற்சியாளர் குழுவுக்கு ஏற்கனவே தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் இந்திய உடல்தகுதி பயிற்சியாளருக்கும் தொற்று ஏற்பட்டதால் அது அணியில் உள்ள இதர வீரர்களையும் பாதித்து விடுமோ என்ற பயத்தால் இந்திய அணி இன்றைய போட்டியில் பங்கேற்க மறுத்துவிட்டது.

India - England Tests | Getty

இதை தொடர்ந்து இந்த பிரச்சனையை விவாதித்த இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியங்கள் 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுவதாக கூட்டாக அறிவித்துள்ளன, இந்தப் போட்டியை வரும் காலத்தில் நடத்துவதற்கு இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் கலந்தாலோசித்து முடிவு எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தன.

இதை அடுத்து 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரானது இந்தியா முன்னிலையுடன் 2 - 1 என்ற கணக்கில் நிறுத்தப்பட்டுள்ளது.


இந்தியா தான் காரணம் : இந்நிலையில் 5வது போட்டி ரத்து செய்யப்பட்ட சில நிமிடங்களில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், 


"தென்ஆப்பிரிக்க கிரிக்கெட்டை இங்கிலாந்து கிரிக்கெட் தலை குனிய வைத்தது போல இங்கிலாந்து கிரிக்கெட்டை இந்திய கிரிக்கெட் தலைகுனிய வைத்துவிட்டது"

என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இந்தியாவை குற்றம் சாட்டினார். அதே சமயம் கடந்த 2020 தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது இதே காரணத்தை காட்டி இங்கிலாந்து கிரிக்கெட் அணி நாடு திரும்பியதையும் ஒப்புக்கொண்டார்.

ஐபிஎல் காரணம் : அதேபோல் இங்கிலாந்தின் மற்றொரு முன்னாள் கேப்டன் நாசர் ஹுசேன் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்ட செய்தியை தெரிவித்த போது,


"இந்த போட்டி நடைபெற வேண்டும் என்று பிசிசிஐ மிகுந்த அக்கறையுடன் இருந்தது ஏனெனில் அவர்கள் அதிகபட்ச பொருளாதாரத்தை ஈட்டும் ஐபிஎல் தொடரை டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் இந்திய கிரிக்கெட்டை மீறி எந்தவித தடையுமின்றி நடத்த வேண்டும் என நினைக்கிறார்கள். எனவே அவர்கள் ஏற்கனவே இந்த தொடரை விட்டு வெளியே நடக்க தொடங்கி விட்டார்கள், இவை அனைத்தும் ஐபிஎல் தொடருக்காக நடைபெறுகிறது"


என கூறிய ஹுசைன் ஐபிஎல் தொடர் இல்லாமல் இருந்திருந்தால் ஒரு சில நாட்கள் கழித்து இந்த 5வது டெஸ்ட் போட்டியை தாமதமாக நடத்தியிருக்கலாம் என கூறினார்.


என்ன செய்ய போறீங்க : இந்த செய்தியை கேட்ட ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் ஷேன் வார்னே, 

"இது மிகப்பெரிய அவமானம், இந்த தொடர் அற்புதமாக இருந்தது"

என தனது டுவிட்டரில் தெரிவித்தார்.

கெவின் பீட்டர்சன் : தற்போதைய நிலைமையில் இங்கிலாந்தில் இருக்கும் வீரர்கள் அடுத்த 10 நாட்களுக்கு நோய் தடுப்பு கட்டுப்பாட்டு வளையத்திற்குள் சென்றுவிட்டால் இன்னும் 9 நாட்களில் துவங்க இருக்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் எப்படி பங்கேற்க முடியும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Previous Post Next Post

Your Reaction