தற்போது இங்கிலாந்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அந்த சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு எஞ்சிய 2021 ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு நாடுகளுக்கு செல்ல உள்ளனர், அதன்பின் வரும் அக்டோபர் 17ஆம் தேதி துவங்க இருக்கும் 2021 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கின்றனர்.
![]() |
| India Tour of SA | Getty |
தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் : அதன் பிறகு நாடு திரும்பும் இந்தியா தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு அந்த அணிக்கு எதிராக 3 டெஸ்ட் 3 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க உள்ளது, இதற்கான முழு அட்டவணையை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரிய தலைவர் மற்றும் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் நேற்று அறிவித்தார்.
இதில் முதலாவதாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலக கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெற இருக்கும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 17ஆம் தேதி துவங்குகிறது, டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா பங்கேற்கும் 2வது வெளிநாட்டு டெஸ்ட் தொடர் இதுவாகும்.
2022 ஜனவரி 7 வரை நடைபெறும் இந்த டெஸ்ட் தொடருக்குப் பின் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 16 வரை நடைபெற உள்ளது, அதைத்தொடர்ந்து ஜனவரி 19ஆம் தேதி துவங்கும் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடருடன் ஜனவரி 26ஆம் தேதியுடன் இந்த சுற்றுப் பயணம் நிறைவுக்கு வருகிறது.
இந்த சுற்றுப் பயணத்தில் நடைபெறும் அனைத்து போட்டிகளும் ஜோகனஸ்பர்க், கேப் டவுன்,சென்சூரியன் மற்றும் பார்ல் ஆகிய 4 நகரங்களில் நடைபெற உள்ளது.
இந்தியாவின் தென்னாபிரிக்கா சுற்றுப்பயணம் 2021/22 அட்டவணை :
டெஸ்ட் தொடர் :
முதல் டெஸ்ட், டிசம்பர் 17 - 21, 1.30 PM, ஜொஹன்ஸ்பேர்க்.
2வது டெஸ்ட், டிசம்பர் 26 - 30, 1.30 PM, கேப் டவுன்.
3வது டெஸ்ட், ஜனவரி 3 - 7, 1.30 PM, ஜொஹன்ஸ்பேர்க்.
ஒருநாள் தொடர் :
முதல் ஒருநாள் போட்டி, ஜனவரி 11, 2.00 PM, பார்ல்.
2வது ஒருநாள் போட்டி, ஜனவரி 14, 2.00 PM, கேப் டவுன்.
3வது ஒருநாள் போட்டி, ஜனவரி 16, 2.00 PM, கேப் டவுன்.
டி20 தொடர் :
முதல் டி20, ஜனவரி 19, 7.30 PM, கேப் டவுன்.
2வது டி20, ஜனவரி 21, 7.30 PM, கேப் டவுன்.
3வது டி20, ஜனவரி 23, 7.30 PM, பார்ல்.
4வது டி20, ஜனவரி 26, 7.30 PM, பார்ல்.
இந்தியா ஏ அணி : இந்த சுற்றுப்பயணத்தின் போது இந்தியா ஏ அணியும் தென் ஆப்பிரிக்காவிற்கு பயணம் செய்து அங்கு தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக 4 நாட்கள் கொண்ட 3 போட்டிகளில் பங்கேற்க உள்ளது. அதற்கான அட்டவணை:
நவம்பர் 26 - 29, ப்ளூம்போய்ட்டன்.
டிசம்பர் 3 - 6, ப்ளூம்போய்ட்டன்.
டிசம்பர் 10 - 13, ப்ளூம்போய்ட்டன்.
