AUSW vs INDW: ஒருநாள் தொடர் முன்னோட்டம், இந்தியா வெல்லுமா

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 3 ஒருநாள், 1 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் அடங்கிய கிரிக்கெட தொடர்களில் பங்கேற்க உள்ளது, இதில் முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் துவங்குகிறது.

Mithali Raj | Alyssa Healy (Photo By Cricket Australia)


இந்த ஒருநாள் தொடர் முழுவதும் ஆஸ்திரேலியாவில் உள்ள மெக்காய் நகரில் உள்ள ஹாரூப் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஒருநாள் தொடர் அட்டவணை :

முதல் ஒருநாள் போட்டி, காலை 5.35, செப்டம்பர் 21, ஹாரூப் பார்க்,மெக்காய்.

2-வது ஒருநாள் போட்டி, காலை 8.40, செப்டம்பர் 24, ஹாரூப் பார்க், மெக்காய்.

3வது ஒருநாள் போட்டி, செப்டம்பர் 26,காலை 5.35, ஹாரூப் பார்க், மெக்காய்.

முதல் ஒருநாள் போட்டி :

இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டி நாளை அதிகாலை இந்திய நேரப்படி அதன் 5.35 மணிக்கு துவங்குகிறது.

முன்னோட்டம் :

ஆஸ்திரேலியா :

இந்த 2 அணிகளை பொருத்தவரை மட்டுமல்லாது ஒட்டுமொத்த மகளிர் கிரிக்கெட் வரலாற்றிலேயே ஆஸ்திரேலியா மிகவும் வலுவான அணியாக கருதப்படுகிறது.

  • கடந்த 2011க்கு பின் இந்தியாவுக்கு எதிராக கடைசியாக ஆஸ்திரேலியா மகளிர் அணி களமிறங்கிய 12 ஒருநாள் போட்டிகளில் 10 வெற்றிகளை பெற்று வலுவான அணியாக உள்ளது.

அத்துடன் ஆஸ்திரேலியா அலிசா ஹீலி, பெத் மூனி, அஷ் கார்ட்னர் என ஒரு பெரிய நட்சத்திர வீராங்கனைகளை கொண்ட அணியாகும், மேலும் ஆல்ரவுண்டர் வீராங்கனை எலிஸ் பெரி காயத்திலிருந்து குணமடைந்தது அணியில் சேர்ந்து உள்ளது மேலும் வலுவை சேர்க்கிறது.

  • இவை அனைத்தையும் விட கடந்த 24 ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று தோல்வியே அடையாத அணியாக ஆஸ்திரேலிய மகளிர் உலக சாதனை படைத்து வருகிறது.

எனவே சொந்த மண்ணில் நடைபெறும் இந்தத் தொடரை ஆஸ்திரேலியா மகளிரணி வெல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று கண்டிப்பாக கூறலாம். 

இந்தியா : மறுபுறம் மித்தாலி ராஜ் தலைமையிலான இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா, ஜெனிமா ரோட்ரிகஸ், ஹர்மன்பிரீத் கொர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் உள்ளனர், இருப்பினும் கடைசியாக கடந்த மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்தியா தோல்வி அடைந்தது.

இதில் அனுபவம் வாய்ந்த மிதாலி ராஜ் எப்போதுமே இந்தியாவிற்காக சிறப்பாக கேப்டன்ஷிப் மற்றும் பேட்டிங் செய்யக் கூடியவராக உள்ளார்.

ஜெமிமா ரோட்ரிக்ஸ் சமீபத்தில் நடைபெற்ற தி ஹண்டர்ட் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி நல்ல பார்மில் உள்ளார், அவரை தவிர இதர இந்திய வீராங்கனைகள் பெரிய அளவு பார்ம் இல்லாதது இந்தியாவிற்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது, அனுபவ வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் காயம் காரணமாக இப்போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

பந்துவீச்சில் இந்தியாவின் பூனம் யாதவ் போன்ற சுழல் பந்துவீச்சாளர்கள் பலமாக உள்ளனர்.

பிட்ச் - வெதர் ரிப்போர்ட் :

மெக்காய் நகரில் போட்டி நடைபெறும் நாளன்று மழைக்கான வாய்ப்புகள் இல்லை, இங்கு பிட்ச் பிளாட்டாக இருக்குமென்பதால் பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன்களை குவிக்கலாம், மற்ற ஆஸ்திரேலிய மைதானங்களை விட இம்மைதானம் சற்று மந்தமாக இருக்கும் என்பதால் பந்து வீச்சாளர்களுக்கு சுமாரான உதவிகள் கிடைக்கும்.

இந்த மைதானத்தில் 220 என்பது ஒரு நல்ல ஸ்கோர் ஆகும், எனவே டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்வது வெற்றிக்கு உதவும்.

எதில் பார்க்கலாம் :

இந்தியாவில் இருக்கும் ரசிகர்கள் இந்த தொடரை சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் சோனி லிவ் மொபைல் ஆப் வாயிலாக நேரடியாக கண்டு களிக்கலாம்.

Previous Post Next Post

Your Reaction