தவறான நேரம் - RCB கேப்டன் பதவி விலகும் விராட் கோலியை சாடும் ஜாம்பவான்கள்

துபாயில் 2021 ஐபிஎல் தொடரின் கிரிக்கெட் எஞ்சிய போட்டிகள் நேற்று முதல் கோலாகலமாக தொடங்கியது, இந்த 2வது பாகத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது.

Virat Kohli (Pic : BCCI/IPL)


இந்த வேளையில் தற்போது நடைபெற்று வரும் 2021 ஐபிஎல் தொடருடன் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி நேற்று இரவு திடீரென அறிவித்ததார். இருப்பினும் பேட்ஸ்மேனாக தொடர்ந்து ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடுவேன் எனவும் அவர் கூறியது அந்த அணியின் ரசிகர்களுக்கு ஓரளவு ஆறுதல் அளித்துள்ளது.

கடந்த 2013 முதல் கடந்த 7 வருடங்களாக பெங்களூர் அணிக்கு கேப்டன் செய்துவரும் விராட் கோலி இதுவரை ஒரு கோப்பையை கூட வெல்ல முடியவில்லை, கடந்த 2016 ஐபிஎல் தொடரில் மட்டும் பைனல் வரை அவர் தலைமையிலான பெங்களூர் அணி முன்னேறி தோற்றது. முன்னதாக இந்தியாவின் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்தும் வருகின்ற 2021 20 ஓவர் உலகக் கோப்பையுடன் விலகுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக விராட் கோலியை அறிவித்திருந்தார்.


இந்நிலையில் பெங்களூரு அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்துள்ள இந்த நேரம் மிகவும் தவறானது என்று பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

கெளதம் கம்பீர் :

இதுபற்றி முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில்,

இந்த முடிவை நீங்கள் எடுப்பதாக இருந்தால் இந்த ஆண்டு ஐபிஎல் முடிந்த பிறகு எடுத்திருக்க வேண்டும், ஏனெனில் இந்த முடிவு அணியை அமைதியற்றதாக மாற்றுவதுடன் உணர்ச்சி வசப்படுத்தும்

என கூறினார். விராட் கோலி ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை என்பதால் பதவி விலக வேண்டுமென கௌதம் கம்பீர் பலமுறை இதற்கு முன் விமர்சனம் வைத்திருந்தார் ஆனால் தற்போது அவர் பதவி விலகுவதாக அறிவித்த பின்பும் கூட இப்படியான கருத்தை தெரிவிக்கிறார்.

சஞ்சய் மஞ்ரேக்கர் :

தொடர் தொடங்குவதற்கு முன்பாக இந்த 2 முடிவுகளையும் எதற்காக அவர் அறிவித்தார் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்

என கூறிய முன்னாள் இந்திய வீரர் மஞ்ச்ரேக்கர் டி20 உலகக் கோப்பை மற்றும் ஐபிஎல் முடிந்தபின் கேப்டன் பதவி பற்றிய அறிவிப்புகளை வெளியிடாமல் முன்பாகவே எதற்காக வெளியிட்டார் என்பதைப் பற்றி புரிந்துகொள்ள முடியவில்லை என தெரிவிக்கிறார்.

டேல் ஸ்டைன் :

வாழ்க்கை பயணம் தொடரும் போது நீங்கள் சொந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியுள்ளது, அவருக்கு தற்போது குடும்பம் ஏற்பட்டுள்ளது எனவே கேப்டன்ஷிப் அவரை அதிகமாக பாதிக்க கூடும், ஒருவேளை அவரின் பொறுப்பை உணர்ந்து பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவை எடுத்திருக்கலாம்

என தென்ஆபிரிக்காவின் நட்சத்திர முன்னாள் வீரர் டேல் ஸ்டைன் விராட் கோலிக்கு ஆதரவை தெரிவித்து உள்ளார்.

எது எப்படியானாலும் இந்திய அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் விராட் கோலி கேப்டன்ஷிப் செய்வது இதுவே கடைசியாகும். ஒரு பேட்ஸ்மேனாக தன்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்து ரன்களை மழைபோல் குவித்த போதிலும் கேப்டனாக ஒரு கோப்பையை அவரால் வெல்ல முடியவில்லை என்பது வருத்தமான ஒன்றாகும், எனவே குறைந்தபட்சம் இந்த முறையாவது தனது கடைசி முயற்சியிலாவது அவர் கோப்பையை வெல்வாரா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

Previous Post Next Post

Your Reaction