CSK வின் அடுத்த நட்சத்திரம் ருதுராஜ் கைக்வாட் - தக்கவைக்க தயாராகும் நிர்வாகம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் துவங்கிய 2021 ஐபிஎல் எஞ்சிய தொடரின் முதல் போட்டியில் சென்னை 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது, முன்னதாக அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்த சென்னைக்கு கேப்டன் தோனி உட்பட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மும்பையின் அதிரடி பந்து வீச்சில் அடுத்தடுத்து அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்கள்.

Ruturaj Gaikwad (Photo : BCCI/IPL)


இதனால் 24/4 என தள்ளாடிய சென்னைக்கு மும்பையிடம் மீண்டும் ஒரு தோல்வி உறுதி என ரசிகர்கள் மனம் உடைந்தனர், அந்த நேரத்தில் மறுபுறம் தொடக்க வீரராக களமிறங்கிய இளம் ருதுராஜ் கைக்வாட் கடைசிவரை நிலைத்து நின்று விளையாடி வெறும் 58 பந்துகளில் 88* ரன்கள் விளாசினார். 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் அவரின் இந்த பொறுப்பான இன்னிங்ஸ் மற்றும் ப்ராவோவின் அதிரடி 23 ரன்கள் காரணமாக சென்னை 20 ஓவர்களில் 156/6 ரன்கள் எடுத்தது.

பின் சென்னை பந்து வீச்சாளர்களின் நேர்த்தியான பந்து வீச்சு காரணமாக மும்பையை வீழ்த்திய சென்னை புள்ளி பட்டியலில் முதலிடத்தையும் பிடித்தது, மும்பைக்கு எதிராக வரலாற்றில் அதிக ரன்கள் விளாசிய சென்னை பேட்ஸ்மேன் என்ற சாதனையுடன் (88* ரன்கள்) வெற்றிக்கு வித்திட்ட ருத்ராஜ் ஆட்டநாயகன் விருது வென்றார்.

நட்சத்திரம் ருத்துராஜ்:

இப்போட்டியில் வலுவான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக எதிர்ப்புறம் இருந்த சென்னை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட் ஆன வேலையில் ருத்ராஜ் மட்டும் கடைசி வரை நின்று விளையாடிய விதம் அவரை முதிர்ச்சி அடைந்த ஒரு பேட்ஸ்மேனாக உருவாகியுள்ளதை காட்டுகிறது.

  • குறிப்பாக ஜஸ்பிரித் பும்ரா வீசிய 20வது ஓவரின் கடைசி பந்தில் அசால்டாக ஸ்வீப் ஷாட் வாயிலாக சிக்ஸர் அடித்த தருணம் அவர் சென்னை சூப்பர் கிங்ஸின் வருங்கால நட்சத்திரமாக தன்னை முத்திரை பதிக்க உள்ளதை உணர்த்துகிறது.

அந்த இன்னிங்ஸ் பற்றி போட்டி முடிந்த பின் அவர்,

இதுவரை நான் விளையாடியதில் இது டாப் இன்னிங்ஸ், ஆரம்பத்தில் நாங்கள் தடுமாறிய நிலையில் இருந்து 10 - 12 ஓவர்கள் பேட்டிங் செய்து 120 - 130 ரன்கள் வரை கொண்டு செல்ல நினைத்தேன். ஒருமுறை எம்எஸ் தோனி மற்றும் அணி நிர்வாகம் உங்களுக்கு ஆதரவு அளித்து விட்டால் பின்னர் எதைப்பற்றியும் சிந்திக்க வேண்டியதில்லை, இலங்கை சுற்றுப்பயணம் மற்றும் தற்போதைய பயிற்சி ஆகியவை எனக்கு உதவின

என கூறினார். கடந்த 2020 ஐபிஎல் தொடரில் முதல் முறையாக களமிறங்கும் வாய்ப்பைப் பெற்ற இவர் ஆரம்பக்கட்டத்தில் தொடர்ந்து 3 - 4 போட்டிகளில் மோசமாக விளையாடினார்.அந்தத் தொடரில் ஒட்டுமொத்தமாக சென்னை அணி மோசமாக விளையாடியதால் பிளே ஆப் சுற்று வாய்ப்பை முதல் முறையாக இழந்தது.

தோனி ஆதரவு :

இருப்பினும் கேப்டன் எம்எஸ் தோனி தொடர்ந்து இவருக்கு வாய்ப்பு அளிக்கவே அந்த தொடரின் கடைசி 3 போட்டிகளில் அபாரமாக விளையாடிய ருத்ராஜ் 3 போட்டிகளிலும் முறையே 65*, 72, 62* என அடுத்தடுத்து 3 அரை சதங்கள் அடித்து சென்னையை வெற்றி பெற செய்து ஹாட்ரிக் ஆட்ட நாயகன் விருதுகளை வென்றார்.

இதன் வாயிலாக அந்த ஐபிஎல் தொடரில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்குத் தள்ளப்படுவதால் இருந்து மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் 7வது இடத்தை பிடித்தது.

  • இதுவரை 14 பேர் போட்டிகளில் களமிறங்கியுள்ள அவர் 6 அரை சதங்கள் உட்பட 488 ரன்கள் குவித்துள்ளார், இந்த ஐபிஎல் தொடரில் மட்டும் இதுவரை 284 ரன்கள் அடித்து உளளார். இந்த 14 போட்டிகளில் 5 ஆட்ட நாயகன் விருதுகளை வென்று 25 வயதிலேயே தன்னை நிரூபித்துள்ளார்.

ஐபிஎல் மெகா ஏலம் :

அடுத்த 2022 வருடம் ஐபிஎல் மெகா ஏலத்தில் 2 வீரர்கள் மட்டுமே ஒரு அணி தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை அணியில் கேப்டன் எம்எஸ் தோனி உட்பட 90 சதவீத வீரர்கள் 30 வயதை தாண்டிய காரணத்தால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு தற்போது 25 வயதில் கலக்க தொடங்கியுள்ள ருத்ராஜ் வருகின்றன ஏலத்தில் தக்க வைக்கப்படுவார் என எதிர்பார்க்கலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற சிறப்பான அணியை கட்டமைத்த எம்எஸ் தோனி மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஆகியோரின் ஆதரவு பெற்ற ருத்ராஜ் கண்டிப்பாக அடுத்த பெரிய நட்சத்திரமாக ஜொலிப்பார் என நம்பலாம்.

Previous Post Next Post

Your Reaction