அபுதாபியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2021 தொடரின் 31வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா அபார வெற்றி பெற்றது, முன்னதாக இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணிக்கு கேப்டன் விராட் கோலி 5 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
![]() |
Virat Kohli | Venkatesh Iyer (Photo : BCCI/IPL) |
சிறப்பாக ஆட முயன்ற தேவூத் படிக்கல் 22, பரத் 16 ரன்களில் அவுட் ஆனார்கள், பின்னர் களமிறங்கிய பெங்களூர் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஏபி டிவிலியர்ஸை கொல்கதாவின் அன்ரே ரசல் அற்புதமான யார்கர் பந்து வாயிலாக டக் அவுட் செய்து பெரிய அதிர்ச்சி கொடுக்க அடுத்து வந்த கிளன் மேக்ஸ்வெல் 10 ரன்களில் நடையை கட்டினார்.
இந்த அடுத்தடுத்த அதிர்ச்சியில் இருந்து கடைசி வரை மீளமுடியாத பெங்களூர் அணி 19 ஓவர்களில் வெறும் 92 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுபோல பெங்களூர் அணி 100 ரன்களுக்கு கீழே ஆல் அவுட் ஆவது இது 6வது முறை ஆகும்.
கொல்கத்தா சார்பில் பந்துவீச்சில் கலக்கிய தமிழகத்தைச் சேர்ந்தவரும் சக்கரவர்த்தி மற்றும் ரசல் தலா 3 விக்கெட் சாய்த்தனர, பின் சேசிங் செய்த கொல்கத்தா கில் 48 ரன்களும், ஐயர் 41* ரன்களும் எடுக்க வெறும் 10 ஓவர்களில் 1 விக்கெட் மட்டும் இழந்து எளிதாக வெற்றி பெற்றது.
என்ன செய்யலாம் :
இந்தியாவில் நடந்த இந்த ஐபிஎல் தொடரின் முதல் பகுதியில் சிறப்பாக விளையாடிய புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் இருக்கும் பெங்களூரு நேற்றைய போட்டியில் படுதோல்வி அடைந்தது அந்த அனி ரசிகர்களுக்கிடையே பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அந்த அணி தனது அடுத்தப் போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வரும் செப்டம்பர் 24-ஆம் தேதி எதிர்கொள்கிறது. சார்ஜாவில் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு பெங்களூரு செய்ய வேண்டிய மாற்றங்களை பற்றி பார்ப்போம்:
1. பவர்பிளேயில் ஹஸரங்கா :
பாதியில் வெளியேறிய ஆடம் ஜாம்பாவுக்கு பதில் ஒப்பந்தம் செய்யப்பட்ட இலங்கையின் இளம் சுழல்பந்து வீச்சாளர் வணிந்து ஹசரங்காவுக்கு நேற்றைய போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்டது, இருப்பினும் அவர் ஓவர் மட்டுமே வீசினார்.
சமீபத்தில் இலங்கையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான நடைபெற்ற டி20 தொடரில் கலக்கிய இவருக்கு சென்னைக்கு எதிரான அடுத்த போட்டியில் குறைந்த பட்சம் பவர் பிளேயில் 2 ஓவர்களை வழங்க வேண்டும் ஏனெனில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான சார்ஜா மைதானத்தில் பவர் பிளே ஓவர்களில் விக்கெட் எடுக்கும் பட்சத்தில் ஆரம்பத்திலேயே எதிரணிக்கு பெங்களூருவால் அழுத்தத்தைக் கொடுக்க முடியும்.
2. சிங்கப்பூர் டிம் டேவிட் :
சமீபத்தில் நடைபெற்ற கரிபியன் பிரீமியர் லீக் உட்பட உள்ளூர் போட்டி அபாரமாக விளையாடி நல்ல பார்மில் உள்ள சிங்கப்பூரைச் சேர்ந்த டிம் டேவிட் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் இடம் பிடித்துள்ளார்.
ஒரு சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான இவரை சுழல் பந்து வீச்சு எடுபட கூட அரபு நாட்டு மைதானங்களில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான நியூஸிலாந்தின் கையில் ஜமிசனுக்கு பதிலாக உபயோகப்படுத்தி பார்க்கலாம்.
3. ஏபி டீ வில்லியர்ஸ் :
பொதுவாகவே பெங்களூரு அணி பேட்டிங்கில் விராட் கோலி மற்றும் ஏபி டிவிலியர்ஸ் ஆகிய இருவரை அதிகம் சார்ந்துள்ளது நமக்கு தெரியும் ஆனால் நேற்றைய போட்டியில் எதிர்பாரா வண்ணம் ஆன்ட்ரே ரசல் வீசிய ஒரு அபாரமான யார்க்கர் பந்தில் டிவில்லியர்ஸ் துரதிருஷ்டவசமாக அவுட்டானார்.
அவரை போன்ற ஒரு தரமான பேட்ஸ்மேன் செட்டிலாக நேரம் கிடைத்து விட்டால் அதன்பிறகு மழைபோல ரன்களை பொழிவார், எனவே அடுத்த போட்டியில் அவரை 4வது பேட்ஸ்மேனாக களம் இறக்க வேண்டும் ஆனால் நேற்றைய போட்டியில் மேக்ஸ்வெல் 4வது இடத்திலும் டிவிலியர்ஸ் 5வது இடத்திலும் களம் இறங்கினார்கள்.
4. கிளென் மேக்ஸ்வேல் :
போட்டி நடைபெறும் ஐக்கிய அரபு நாடுகளில் சுழல் பந்துவீச்சு எடுபடும் என தெரியும் வேளையில் கிளன் மேக்ஸ்வெலை குறைந்தபட்சம் 2 - 3 ஓவர்கள் பந்துவீச செய்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும், குறிப்பாக சென்னை அணியில் தடுமாறி வரும் சுரேஷ் ரெய்னா போன்ற பேட்ஸ்மென்கள் பேட்டிங் செய்யும்போது அவரை பந்துவீச வைக்கலாம்.
அந்த 2 - 3 ஓவர்களில் ஒரு சில விக்கெட்டுகள் விழுந்தால் அது பெங்களூர் அணிக்கு நன்மையைப் பயக்கும் என்பதில் சந்தேகமில்லை.