ஐபிஎல் 2021 கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
![]() |
Axar Patel | Rashid Khan (Photo - BCCI/IPL) |
இந்த தொடரின் 33வது லீக் போட்டியில் டெல்லி அணி ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.
போட்டி விவரம் :
டெல்லி கேபிட்டல்ஸ் V சன் ரைசர்ஸ் ஹைதெராபாத்.
இரவு 7.30 மணி, துபாய்.
நேரடி ஒளிபரப்பு :
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்.
முன்னோட்டம் :
டெல்லி : இளம் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி இதுவரை நடைபெற்ற போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் ரன் ரேட் அடிப்படையில் 2வது இடத்தில் உள்ளது, முதல் பகுதியில் காயம் காரணமாக விலகி இருந்த அந்த அணியின் முந்தைய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் அணிக்கு திரும்பி உள்ளது அந்த அணிக்கு பலத்தைக் கொடுக்கிறது.
ஷிகர் தவான், பிரிதிவி ஷா,ஹெட்மயர், ஸ்டோனிஸ், ரபாடா, அஷ்வின் என திறமையான வீரர்களை கொண்ட அந்த அணி இந்த போட்டியிலும் வெற்றிபயணத்தை தொடர தயாராகி வருகிறது.
ஹைதெராபாத் : முதல் பகுதியில் களமிறங்கிய 7 போட்டிகளில் வெறும் ஒரு வெற்றியை மட்டுமே பெற்ற ஹைதராபாத் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் பாதாளத்தில் உள்ளது, முதல் பகுதியில் கேப்டனாக செயல்பட்டு வந்த நட்சத்திர வீரர் டேவிட் வார்னரை அந்த அணி நிர்வாகம் நீக்கியது.
அவருக்கு பதில் கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்ட போதிலும் அந்த அணியால் வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியவில்லை, அந்த அணியை பொறுத்தவரை நடராஜன், புவனேஸ்வர் குமார் உட்பட இந்திய வேகப்பந்து வீச்சாளர்களும் ரஷித் கான், முகமது நபி உட்பட ஆப்கானிஸ்தான் சுழல் பந்துவீச்சாளர்கள் வலு சேர்க்கிறார்கள் ஆனால் பேட்டிங் தான் அந்த அணிக்கு பிரச்சனையாக இருந்து வருகிறது.
எனவே முதல் பகுதியை மறந்துவிட்டு 2வது பகுதியில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே புள்ளிப் பட்டியலில் அந்த அணியால் மேலே ஏற முடியும்.
பிட்ச் ரிப்போர்ட் :
துபாய் மைதானத்தில் வேகப்பந்து வீச்சு அற்புதமாக எடுபடும் இதற்கு எடுத்துக்காட்டாக சென்னை - மும்பை அணிகள் மோதிய போட்டியை கூறலாம், அதேசமயம் சுழல் பந்து வீச்சுக்கு பெரிய அளவில் இங்கு சாதகம் அமையவில்லை எனவே பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று விளையாட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
இங்கு 200 ரன்கள் என்பது மிகப்பெரிய ஸ்கோர் என்றாலும் 150 - 160+ ரன்கள் என்பதே வெற்றியைப் பெற்றுத் தரக்கூடிய இலக்காகும்.
புள்ளிவிவரங்கள் :
வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை மொத்தம் நேருக்குநர் 19 போட்டிகளில் பலப்பரிட்சை நடத்தியுள்ளன.
- அதில் ஹைதராபாத் அதிகபட்சமாக 11 முறை வெற்றி பெற்று அசத்தியுள்ளது, 8 போட்டிகளில் மட்டும் டெல்லி வெற்றி பெற்றுள்ளது.
இருப்பினும் கடந்த 2019க்கு பின் இவ்விரு அணிகள் மோதிய 7 போட்டிகளில் டெல்லி 4 முறை வென்றுள்ளது.
கடைசியாக இவ்விரு அணிகள் மோதிய போட்டியில் டெல்லி கேப்பிடல் பரபரப்பான சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.
உத்தேச அணிகள் :
டெல்லி கேபிட்டல்ஸ் :
ஷிகர் தவான், ப்ரித்வி ஷா, ஸ்டீவன் ஸ்மித், ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட் (கேப்டன் - கீப்பர்), மார்கஸ் ஸ்டோனிஸ், அக்சார் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், காகிஸோ ரபாடா, அன்றிச் நோர்ட்ஜெ, அவேஷ் கான்.
சன் ரைசர்ஸ் ஹைதெராபாத்:
டேவிட் வார்னர், சஹா (கீப்பர்), கேன் வில்லியம்சன் (கேப்டன்), மனிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், விஜய் சங்கர், ஜேசன் ஹோல்டர், ரஷீத் கான், புவனேஸ்வர் குமார், சந்தீப் சர்மா, தங்கராசு நடராஜன்.