வெளிநாடுகளில் இந்தியாவின் வெற்றி நாயகன் - ஜஸ்பிரித் பும்ரா

இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது, இதையடுத்து இவ்விரு அணிகள் மோத இருக்கும் 5வது போட்டி நாளை மதியம் துவங்குகிறது.

Jasprit Bumra | Getty


லண்டன் ஓவலில் நடைபெற்ற 4வது போட்டியின் கடைசி நாளில் 368 என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது, அந்த நேரத்தில் பிட்ச் தார் சாலை போல மிகவும் பிளாட்டாக இருந்த காரணத்தாலும் வேகப்பந்து வீச்சுக்கு கை கொடுக்காத காரணத்தாலும் இங்கிலாந்து குறைந்தபட்சம் போட்டியை டிரா செய்து விடும் என பலரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் அந்த நேரத்தில் ஓலி போப் மற்றும் ஜானி பைரஸ்ட்டோ ஆகியோரை அடுத்தடுத்த ஓவர்களில் இன்ஸ்விங் யார்கர் பந்துகளை அபாரமாக வீசி அவுட் செய்த ஜஸ்பிரித் பும்ரா இந்தியாவின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

பும்ராவின் அந்த ஸ்பெல் தான் போட்டியில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி இங்கிலாந்துக்கு தோல்வியை கொடுத்ததாக அந்த அணி கேப்டன் ஜோ ரூட் போட்டி முடிந்த பின் வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார்.


100 விக்கெட் : இந்த டெஸ்ட் தொடரில் நடைபெற்று முடிந்த 4வது போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற முன்னாள் ஜாம்பவான் கபில் தேவின் சாதனையை முறியடித்து புதிய சாதனையை ஜஸ்பிரித் பும்ரா படைத்தார்.

  • ஜஸ்பிரித் பும்ரா - 24* போட்டிகள்.
  • கபில் தேவ் - 25 போட்டிகள்.


சேனா நாயகன் : டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 24 போட்டிகளில் பங்கேற்றுள்ள மொத்தம் 101 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

அதில் 97 விக்கெட்டுகள் இந்தியா அல்லாத வெளி நாடுகளில் எடுத்து நம்மை ஆச்சரிய படுத்துகிறார், வெறும் 4 விக்கெட்டுகள் மட்டுமே இந்திய மண்ணில் எடுத்துள்ளார்.

இந்த நிலையில் சேனா நாடுகள் எனப்படும் தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 சவால் மிக்க நாடுகளில் இந்தியா வெற்றி பெற்ற போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பவுலராகவும் ஜஸ்பிரித் பும்ரா சாதனை படைத்துள்ளார்.


சேனா நாடுகளில் இந்தியா வென்ற போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பவுலர்கள்:


1. ஜஸ்பிரித் பும்ரா : போட்டிகள் - 7,  விக்கெட்கள் - 42, சராசரி - 17.45.

2. இரப்பள்ளி பிரசன்னா : போட்டிகள் - 6, விக்கெட்கள் - 38, சராசரி - 15.57.

3. பி சந்திரசேகர் : போட்டிகள் - 4, விக்கெட்கள் - 34, சராசரி - 15.05.

4. இஷாந்த் சர்மா : போட்டிகள் - 9, விக்கெட்கள் - 34, சராசரி - 27.55.

5. அனில் கும்ப்ளே : போட்டிகள் - 5,  விக்கெட்கள் - 28, சராசரி - 25.10.


பொதுவாக சொந்த மண்ணில் சிங்கமாய் விளங்கும் வீரர்களுக்கு மத்தியில் அயல்நாடுகளில் வெளிநாட்டு அணிகளுக்கு எதிராக ஜஸ்பிரித் பும்ரா ஜொலிப்பது மற்ற பவுலர்களை விட அவர் திறமையானவர் என்பதை நமக்கு காட்டுகிறது.

Previous Post Next Post

Your Reaction