CPL 2021 : டுவைன் ப்ராவோவின் செயின்ட் கிட்ஸ் முதல் முறையாக சாம்பியன்

வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடர் 9வது முறையாக கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி துவங்கியது, மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த நடப்பு சாம்பியன் த்ரிபாகோ நைட் ரைடர்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் பட்ரியொட்ஸ், செயின்ட் லூசியா கிங்ஸ் ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின, ஜமைக்கா தள்ளவாஹ்ஸ் மற்றும் பார்படாஸ் கிங்ஸ் ஆகிய அணிகள் லீக் சுற்று விட்டு வெளியேறினே.

CPL 2021 Winners Saint Kitts & Nevis Patriots (CPL T20 | Getty)

அரை இறுதி : 

இதை அடுத்து நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் புள்ளி பட்டியலில் 1 மற்றும் 4 ஆகிய இடங்களை பிடித்த த்ரிபாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் ஆகிய மோதின, அதில் செயின்ட் லூசியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் அணியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

அதன்பின் 2 மற்றும் 3வது இடங்களை பிடித்த கயானா மற்றும் செயின்ட் கிட்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நடந்த 2வது அரையிறுதிப் போட்டியில் செயின்ட் கிட்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

மாபெரும் பைனல் :

இதை அடுத்து நேற்று இரவு நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் பட்ரியொட்ஸ் ஆகிய அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற செயின்ட் லூசியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து செயின்ட் கிட்ஸ் பவுலர்களின் நேர்த்தியான பந்துவீச்சால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 159/7 ரன்கள் எடுத்தது, அதிகபட்சமாக ராகீம் கார்ன்வால் மற்றும் ராஸ்டன் சேஸ் ஆகியோர் தலா 43 ரன்களும் கீமோ பால் 39 ரன்களும் எடுத்தனர். செயின்ட் கிட்ஸ் சார்பில் நசீம் ஷா மற்றும் பாவத் அஹ்மத் ஆகியோர் தலா 3 விக்கெட் எடுத்தனர்.

செயின்ட் கிட்ஸ் சாம்பியன் : 

இதை அடுத்து 160 என்ற இலக்கை துரத்திய செயின்ட் கிட்ஸ் அணிக்கு நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்ல் 0, எவின் லெவிஸ் 6 என சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். இதனால் 26/2 என தடுமாறிய அந்த அணியை ஜோஸ்வா டி சில்வா 37 ரன்களும், ரூதர்போர்ட் 25 ரன்களும் எடுத்து ஓரளவு மீட்டனர், அடுத்து வந்த கேப்டன் ட்வயன் ப்ராவோ 8 ரன்களில் அவுட் ஆக ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

இறுதியில் டாமினிக் ப்ராக்ஸ் 24 பந்துகளில் 48* ரன்களும் பாபின் ஆலன் 20* ரன்கள் எடுக்க மிகச்சரியாக 19.6வது பந்தில் 160 ரன்களை எட்டிப்பிடித்த செயின்ட் கிட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது, இதையடுத்து பிராவோ தலைமையிலான செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் பட்ரியொட்ஸ் அணி கரீபியன் லீக் டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது, 48 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்ட டாமினிக் பிராக் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Previous Post Next Post

Your Reaction