2017 போல 2021 டி20 உலககோப்பையில் இந்தியாவை வீழ்த்துவோம் - ஹசன் அலி

ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் 7வது முறையாக வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது. நடப்புச் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், இந்தியா உட்பட உலகின் 16 அணிகள் இந்த உலக கோப்பையில் மோத உள்ளன.


Hasan Ali Appeals in Champions Trophy Final 2017 | Getty


இந்த உலக கோப்பையில் பங்கேற்கும் அணிகளை அந்தந்த நாடுகள் ஏற்கனவே அறிவித்துள்ளன, இந்தியாவை பொருத்தமட்டில் விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பாக மும்பையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - பாக் மோதல் :

இந்த உலக கோப்பையில் இந்தியா தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை வரும் அக்டோபர் 24ஆம் தேதி துபாயில் எதிர்கொள்கிறது, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் எல்லை பிரச்சனை காரணமாக கடந்த பல வருடங்களாக இவ்விரு அணிகள் கிரிக்கெட் தொடர்களில் நேருக்கு நேர் மோதாமல் இருந்து வருகிறது.

இருப்பினும் ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை போட்டிகளில் மட்டும் வேறுவழியின்றி மோதி வருகின்றன, வரலாற்றில் இதுவரை நடைபெற்ற 20 மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தானால் ஒருமுறைகூட வீழ்த்த முடியவில்லை என்ற குறை அந்த அணிக்கு இருந்து வருகிறது.

2017 போல வீழ்த்துவோம் :

இந்நிலையில் வருகின்ற 20 ஓவர் உலக கோப்பையில் இந்தியாவை தங்களால் வீழ்த்த முடியும் என பாகிஸ்தானின் ஆல்ரவுண்டர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர்,

"நாங்கள் சாம்பியன்ஸ் கோப்பையை (2017ல்) வென்று உள்ளோம். அது எங்களுக்கு மிகவும் சிறப்பான தருணமாக அமைந்தது, அதேபோல் டி20 உலக கோப்பையிலும் அவர்களை மீண்டும் வீழ்த்த முயற்சிப்போம். இரு நாடுகளை சேர்ந்த ரசிகர்களுக்கு மத்தியில் எதிர்பார்ப்பு அதிகம் என்பதால் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது எப்போதுமே அழுத்தமான ஒன்றாகும். கிரிக்கெட்டை பார்க்காத மக்கள் கூட இந்தியா - பாகிஸ்தான் போட்டியை பார்ப்பார்கள், எனவே அந்தப் போட்டியில் எங்களின் சிறந்த செயல்பாட்டை அளிக்க முயற்சிப்போம் "

என கூறினார். கடந்த 2017 ஆம் ஆண்டு லண்டன் ஓவலில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா பாகிஸ்தானிடம் பரிதாப தோல்வி அடைந்தது, அதேபோல 2021 டி20 உலகக் கோப்பை இந்தியாவை வீழ்த்துவோம் என ஹசன் அலி நம்பிக்கையுடன் கூறுகிறார்.

இருப்பினும் அதன்பின் கடந்த 2018 ஆம் ஆண்டு இதே துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பையிலும் 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி உலக கோப்பையிலும் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏமாற்றம் : 20 ஓவர் உலகக்கோப்பை தொடங்க இன்னும் ஒரு மாத காலமே இருக்கும் நிலையில் திடீரென்று பயிற்சியாளராக இருந்த மிஸ்பா உல் ஹக் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக ஹசன் அலி தெரிவித்துள்ளார், மேலும் புதிய பந்து வீச்சாளராக நியமிக்கப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்காவின் வெர்னோன் பிளாண்டர் ஒரு மிகச்சிறந்த மனிதர் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Search Tags : Ind Vs Pak 2021, India Vs Pakistan T20 World Cup 2021.

Previous Post Next Post

Your Reaction