யார்க்கர் கிங் லசித் மலிங்காவின் டி20 கிரிக்கெட் சாதனைகள்

இலங்கையின் நட்சத்திர ஜாம்பவான் கிரிக்கெட் பந்து வீச்சாளர் லசித் மலிங்கா அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.

Lasith Malinga | Getty Images

ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கடந்த சில வருடங்களுக்கு முன்பே ஓய்வு பெற்றிருந்த இவர் டி20 கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வந்தார், தற்போது அதில் இருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார்.

கூடை போன்ற ஹேர்ஸ்டைல் உடன் மற்ற எந்த பவுலராலும் வீசமுடியாத வித்தியாசமான சிலிங்கா என்னும் பௌலிங் ஆக்சன் கொண்ட மலிங்கா யார்க்கர் பந்துகளை வீசுவதில் கிங் என்றே கூறலாம், சரி டி20 கிரிக்கெட்டில் அவர் படைத்துள்ள சில முக்கியமான சாதனைகளைப் பற்றி பார்ப்போம்:

1. சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பந்துவீச்சாளர் என உலக சாதனையை லசித் மலிங்கா 107 விக்கெட்களுடன் படைத்துள்ளார். 

  • லசித் மலிங்கா - 107 விக்கெட்கள்.
  • சாகிப் அல் ஹசன் - 106 விக்கெட்கள்.

2. சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கடந்த முதல் பவுலர் என்ற பெருமையையும் மலிங்காவை சேரும். இவர் கடந்த 2019ல் நியூசிலாந்துக்கு எதிராக இந்த மைல்கல்லை தொட்டார்.

3. சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 2 முறை ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்த ஒரே பந்துவீச்சாளர் லசித் மலிங்கா என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.

4. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 2வது பவுலர் என்ற பெருமையையும் மலிங்கா பெற்றுள்ளார்.

  • ஷாகித் அப்ரிடி - 39 விக்கெட்கள்.
  • லசித் மலிங்கா - 38 விக்கெட்கள்.

5. அத்துடன் 2014 ஆம் ஆண்டு இலங்கை முதல் முறையாக வென்ற டி20 உலகக் கோப்பையின் கேப்டன் லசித் மலிங்க ஆவார்.

6. அதேபோல் உலகின் முன்னணி பிரீமியர் லீக் தொடரான ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற அபார சாதனையையும் மலிங்காவை படைத்துள்ளார்.

  • லசித் மலிங்கா - 170 விக்கெட்கள்.
  • அமித் மிஸ்ரா - 166 விக்கெட்கள்.

7. அதேபோல ஐபிஎல் போட்டிகளில் 100 மற்றும் 150 விக்கெட்டுகளை எடுத்த முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையும் இவரையே சேரும்.

8. ஒட்டுமொத்தமாக 390 விக்கெட்டுகள் எடுத்துள்ள மலிங்கா டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்து வீச்சாளர்களின் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார், மேலும் டி20 போட்டிகளில் 300 விக்கெட்டுகளை கடந்த முதல் பவுலர் இவராகும்.

9. டி20 போட்டிகளில் ஒரு குறிப்பிட்ட அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் மலிங்காவை சேரும் இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வரலாற்றில் மொத்தம் 195 விக்கெட்டுகள் (ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் சேர்த்து) எடுத்து இந்த சாதனை படைத்துள்ளார்.

10. ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பிபிஎல் டி20 தொடரில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்தவராக இன்றும் லசித் மலிங்கா ஜொலிக்கிறார்.

  • 6/7 பெர்த் அணிக்கு எதிராக, 2013.

11. டி20 கிரிக்கெட்டில் மலிங்கா எடுத்துள்ள 390 விக்கெட்டுகளில் 152 வெட்டுகள் போல்டாகும், வரலாற்றிலேயே இந்த முறையில் மலிங்கா தான் அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

Previous Post Next Post

Your Reaction