என் வழி தோனி வழி,அவரை மிஸ் செய்கிறேன் - ரவீந்திர ஜடேஜா

இந்திய அணியைச் சேர்ந்த ரவீந்திர ஜடேஜா கடந்த சில வருடங்களாக இந்திய அணியின் முக்கிய முன்னணி ஆல் ரவுண்டராக இருந்து வருகிறார். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே இவர் அசத்தி வருவதால் அது அணிக்கு மிகப் பெரிய அளவில் உதவி வருகிறது, இதன் காரணமாக நடைபெற்று முடிந்த இங்கிலாந்து தொடரில் கேப்டன் விராட் கோலி இவரை 4 போட்டிகளிலும் களமிறங்கி வெற்றியும் கண்டார்.

MS Dhoni | Ravindra Jadeja (Getty)


கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தியாவிற்காக ஒருநாள் போட்டிகளில் களமிறங்கிய இவர் கடந்த 2012-இல் டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு பெற்றார், முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் கீழ் முதல் முறையாக அறிமுகமான இவர் அவரின் அதிகமான ஆதரவால் இன்று ஒரு தரமான ஆல்-ரவுண்டராக ஜொலிக்கிறார்.

கடந்த 2017க்கு பின் 24 டெஸ்ட் போட்டிகளில் 1009 ரன்களும் 72 விக்கெட்டுகளும் எடுத்துள்ள அவர் 32 ஒருநாள் போட்டிகளில் 497 ரன்களையும் 33 விக்கெட்டுகளையும் எடுத்து ஒரு தேர்ச்சியான ஆல்-ரவுண்டராக தன்னைத் தானே மெருகேற்றியுள்ளார்.


தோனி வழி : இந்நிலையில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழிலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் ஜடேஜா கூறுகையில்,

"எனது அணிக்காக நின்று விளையாடி போட்டிகளை பினிஷ் செய்ய விரும்புகிறேன், தற்போது முன்பை விட என் மீது நான் அதிக நம்பிக்கை வைத்து அதிக வாய்ப்புகளையும் வழங்கி அதிக நேரம் நின்று விளையாட விரும்புகிறேன். ஒரு போட்டியை பினிஷ் செய்யும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் நான் போட்டியை இறுதிவரை எடுத்துச் செல்கிறேன்"

என கூறினார். இந்தியா மட்டுமல்லாது ஐபிஎல் தொடரிலும் பல கடந்த பல வருடங்களாக எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவீந்திர ஜடேஜா நீண்ட காலமாக விளையாடி வருகிறார், இதனால் ஜடேஜாவின் வளர்ச்சியில் டோனியின் பங்கு அதிகமாக உள்ளது என்றே கூறலாம்.


இது பற்றி ஜடேஜா பேசுகையில்,

"மஹி பாய் எப்போதும் என்னிடம் உனக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நீ அழுத்தத்தை உணர்வது போல எதிரில் பந்துவீசும் பவுலரும் அழுத்தத்தை உணர்வார் என்று நினைக்க வேண்டும், உன்னைப் பற்றி மட்டும் நினைக்காதே பவுலரை பற்றியும் நினைத்துக் கொண்டு விளையாட வேண்டும் என கூறுவார். அவர் எனது கிரிக்கெட் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்"

என கூறிய ஜடேஜா ஐபிஎல் கிரிக்கெட்டில் 2290 ரன்களும் 120 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

மிஸ் செய்கிறேன் : கிரிக்கெட்டில் எத்தனையோ பல இன்னிங்சில் விளையாடிய தோனி கடைசியாக ரவீந்திர ஜடேஜா உடன் தான் கடந்த 2019 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் விளையாடினார். அதன்பிறகு ஓய்வு பெற்ற அவர் இல்லாத இந்தியாவில் விளையாடுவது பற்றி ஜடேஜா கூறுகையில்,

"ஆம் நான் தோனியை மிகவும் மிஸ் செய்கிறேன் ஏனெனில் அவர் எப்போதும் என்னை சரியான வழியில் நடத்தினார். ஏதேனும் ஒரு இடத்தில் நான் சரியாக விளையாடாவிட்டால் உடனே அவர் என்னிடம் வந்து எப்படி விளையாட வேண்டும் என கூறுவார். அவருடன் நான் 12 வருடங்களாக விளையாடினேன், அவர் மிகவும் மிஸ் செய்கிறேன்"

என கூறிய ஜடேஜா தற்போதைய கேப்டன் விராட் கோலி தோனியை போல் அமைதியாக இல்லாமல் மிகவும் ஆக்ரோசமாக விளையாடக்கூடிய கேப்டன் எனவும் இருவருக்கும் வித்தியாசமான கேப்டன்ஷிப் ஸ்டைல்கள் உள்ளதாகவும் பெருமையாக கூறினார்.

Previous Post Next Post

Your Reaction