இந்தியாவின் நியூஸிலாந்து சுற்றுப்பயணம் 2022க்கு தள்ளிவைப்பு

நியூசிலாந்துக்கு அந்நாட்டின் கோடைகாலத்தில் மேற்கொள்வதாக இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் சுற்றுப்பயணம் அடுத்த வருடம் 2022 ஆம் ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது, ஐசிசியின் வருங்கால சுற்றுப்பயண அட்டவணை (எப்டிபி) படி இந்த ஆண்டு விராட் கோலி தலைமையிலான இந்தியா நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதாக இருந்தது.

Kane Williamson | Virat Kohli (Getty Images)


2023ஆம் ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி உலக கோப்பையில் பங்கேற்க உள்ள அணிகளைத் தேர்வு செய்யும் "ஐசிசி ஒன்டே சூப்பர் லீக்" தொடரின் ஒரு அங்கமாக இந்த கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. இந்த நிலையில் நியூசிலாந்து நாட்டில் தற்போது புதிதாக பிரகடன படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு விதிமுறைகளின்படி அந்த நாட்டிற்கு வரும் எந்த ஒரு நபரும் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதன் காரணமாக இந்தியாவின் இந்த சுற்றுப் பயணம் அடுத்த வருடத்திற்கு தள்ளி வைக்கப்படுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய செய்தி தொடர்பாளர் டேவிட் ஒயிட் உறுதிப்படுத்தியுள்ளார், இதையடுத்து இந்த தொடர் வரும் 2022ஆம் ஆண்டு அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பைக்கு பின்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் வங்கதேசம், நெதர்லாந்து மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களையும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அடுத்த வருடம் இறுதிக்கு ஒத்திவைத்துள்ளது.

  • இருப்பினும் வரும் 2022 மார்ச் 4 ஆம் தேதி தங்கள் நாட்டில் நடக்க இருக்கும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை திட்டமிட்டபடி நடைபெறும் என அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்திய சுற்றுப்பயணம் :

தற்போது நியூஸிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் 18 வருடங்கள் கழித்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் பங்கேற்று வருகிறது, இதை முடித்துக்கொண்டு அக்டோபரில் துவங்க இருக்கும் 2021 டி20 உலக கோப்பையில் அந்த அணி பங்கேற்க உள்ளது.

  • அதன்பின் வரும் நவம்பரில் இந்தியாவிற்கு வரும் நியூசிலாந்து 2 டெஸ்ட் மற்றும் 3 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post

Your Reaction