கேப்டன் பதவியை துறக்கும் விராட் கோலி - டி20 கேப்டனாக படைத்துள்ள சாதனைகள்

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக தற்போதைய கேப்டன் விராட் கோலி அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று அறிவித்துள்ளார், வரும் அக்டோபரில் ஐக்கிய அரபு நாடுகளில் துவங்க இருக்கும் ஐசிசி டி20 உலகக்கோப்பை 2021 தொடருடன் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Virat Kohli (Getty Images)


இதுபற்றி தனது டுவிட்டரில் அவர்,

"எனது நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பு மட்டும் கிடைக்காமல் தலைமை தாங்கவும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, கேப்டனாக எனது பயணத்தில் ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அணி வீரர்கள், உதவியாளர்கள், பயிற்சியாளர்கள், தேர்வுக் குழுவினர் மற்றும் ரசிகர்கள் இல்லாமல் இவை அனைத்தும் சாத்தியமாகி இருக்காது"

"பணிச்சுமை என்பது முக்கியமான ஒன்றாகும், கடந்த 8 - 9 வருடங்களாக அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதுடன் கடந்த 5 - 6 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் கேப்டனாக செயல்பட்டு வருகிறேன், எனவே ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் முழுமையாக கேப்டனாக செயல்பட எனக்கு நானே ஒரு இடைவெளி கொடுக்க நினைக்கிறேன். டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக இருந்தபோது என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்தேன், இருப்பினும் தொடர்ந்து டி20 போட்டிகளில் பேட்ஸ்மேனாக விளையாட உள்ளேன்"

என கூறிய விராட் கோலி பணிச்சுமை காரணமாக டி20 போட்டிகளில் பேட்ஸ்மேனாக மட்டும் செயல்பட உள்ளதாகவும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து கேப்டனாக செயல்பட்ட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

அடுத்த கேப்டன் :

இந்த முடிவு நீண்ட ஆலோசனைக்கு பின் எடுத்துள்ளேன், இதுபற்றி நெருங்கி இருக்கும் ரவிசாஸ்திரி ரோகித் சர்மா போன்றவர்களிடம் விவாதித்த பின் துபாயில் வரும் அக்டோபரில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலகக்கோப்பைக்கு பின் கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். இதுபற்றி பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி செயலாளர் ஜெய் ஷா மற்றும் தேர்வுக் குழுவினரிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டேன், தொடர்ந்து என்னால் முடிந்த அளவுக்கு இந்திய கிரிக்கெட் அணிக்காக பாடுபட உள்ளேன்

என விராட் கோலி அறிவித்துள்ளார். இதை அடுத்து இந்தியாவின் அடுத்த டி20 கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


சாதனைகள் : 

கடந்த 2014 முதல் டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து வரும் விராட் கோலி கடந்த 2017இல் தோனி கேப்டனாக ஓய்வு பெற்ற பின் 3 வகையான கிரிக்கெட்டிலும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். 

விராட் கோலி தலைமையில் இந்தியா டி20 போட்டிகளில்:

  • போட்டிகள் - 45
  • வெற்றிகள் - 27
  • தோல்விகள் - 14
  • டை - 2
  • முடிவு இல்லை - 2
  • வெற்றி விகிதம் - 65.11


  1. சவால் மிகுந்த நாடுகளான தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளில் டி-20 தொடரை வென்ற ஒரே கேப்டன் என்ற அபார சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
  2. மேலும் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, அயர்லாந்து ஆகிய நாடுகளிலும் இவர் தலைமையில் இந்தியா டி20 தொடர்களை வென்றுள்ளது.
  3. இவர் கேப்டன்ஷிப் செய்த 17 தொடர்களில் இந்தியா 12 முறை வெற்றி பெற்றுள்ளது, வெறும் 2 முறை மட்டுமே தோல்வியடைந்துள்ளது.
  4. 1502 ரன்களுடன் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த ஆசிய கேப்டன் என்ற சாதனையும் படைத்துள்ளார்.
  5. அதேபோல் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக அரை சதங்கள் (12 அரை சதங்கள்) விளாசிய கேப்டன் என்ற சாதனையையும் செய்துள்ளார்.

இதிலிருந்தே இந்திய 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி ஒரு வெற்றிகரமான கேப்டனாக இருந்துள்ளார் என தெரிகிறது. வரும் அக்டோபரில் நடைபெறும் டி20 உலக கோப்பையை வென்று கேப்டனாக வெற்றியுடன் விடைபெற வேண்டும் என்பதே விராட் கோலி மற்றும் இந்திய ரசிகர்களின் விருப்பமாகும. 


Search Tags : Virat Kohli to Step Down as T20 Captain, ICC T20 World Cup 2021, Indian Cricket Team.

Previous Post Next Post

Your Reaction