Pak Vs NZ : 18 வருடங்கள் கழித்து நியூஸிலாந்தை சந்திக்கும் பாகிஸ்தான்

பாகிஸ்தானுக்கு 18 வருடங்களுக்கு பின் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது, கடைசியாக கடந்த 2003ஆம் ஆண்டு பாகிஸ்தான் மண்ணில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து பங்கேற்றது.

Babar Azam | Tom Latham By Pakistan Cricket


18 வருடங்கள் கழித்து நடைபெறும் இந்த தொடர் நடைபெறும் காரணத்தால் இரு நாட்டு ரசிகர்களுக்கிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது, இதில் முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் செப்டம்பர் 17 முதல் துவங்குகிறது, இன்றைய முதல் போட்டி பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி நகரில் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு துவங்க உள்ளது.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அனைத்தும் லாகூர் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு துவங்க உள்ளது.

ஒருநாள் தொடர் :

செப்டம்பர் 17, ராவில்பிண்டி.

செப்டம்பர் 19, ராவில்பிண்டி.

செப்டம்பர் 21, ராவில்பிண்டி.

டி20 தொடர் :

செப்டம்பர் 25, லாகூர்.

செப்டம்பர் 26, லாகூர்.

செப்டம்பர் 29, லாகூர்.

அக்டோபர் 1, லாகூர்.

அக்டோபர் 3, லாகூர்.

முன்னோட்டம் :

சொந்த மண்ணில் நடைபெறும் இந்தத் தொடருக்காக பாபர் அசாம் தலைமையிலான வலுவான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது, இதனால் சொந்த மண்ணில் நடைபெறும் இந்தத் தொடரை கைப்பற்ற பாகிஸ்தான் தயாராக உள்ளது.

மறுபுறம் கேன் வில்லியம்சன் போன்ற முக்கியமான நட்சத்திர நியூசிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளதால் டாம் லாதம் தலைமையில் 2வது தர நியூசிலாந்து அணி பாகிஸ்தானை தயாராகி உள்ளது.

புள்ளிவிவரம் :

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் இதுவரை மொத்தம் 107 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.

  • அதில் 55 போட்டிகளில் பாகிஸ்தானும் 48 போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளன.

போட்டி நடைபெறும் பாகிஸ்தான் மண்ணில் இவ்விரு அணிகளும் மோதிய 20 போட்டிகளில் 17 முறை பாகிஸ்தான் வெற்றி பெற்று வலுவாக உள்ளது, வெறும் 3 போட்டிகளில் மட்டுமே நியூசிலாந்து வென்றுள்ளது.

  • போட்டி நடக்கும் ராவல்பிண்டி மைதானத்தில் பாகிஸ்தான் இதுவரை களமிறங்கிய 20 போட்டிகளில் 14 வெற்றி பெற்றுள்ளது, மறுபுறம் நியூசிலாந்து இந்த மைதானத்தில் களமிறங்கிய 3 ஒருநாள் போட்டிகளிலும் தோற்று போனது.

கடைசியாக இவ்விரு அணிகள் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் மோதின, அதில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

சூப்பர் லீக் தகுதி இல்லை :

இந்த தொடருக்காக டிஆர்எஸ் எனப்படும் அம்பையர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்யத் தவறியது, இதனால் இந்த தொடரானது ஐசிசியின் "ஒன்டே சூப்பர் லீக்" தொடர் அந்தஸ்தை பெறும் வாய்ப்பை இழந்துள்ளது.

Previous Post Next Post

Your Reaction