CSK vs KKR : கொல்கத்தா சவாலை சமாளிக்குமா சென்னை - முழு விவரம்

ஐபிஎல் 2021 தொடரின் 38ஆவது லீக் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

MS Dhoni | Dinesh Karthik (Photo : BCCI/IPL)


ஞாயிற்றுக்கிழமை நாளில் நடைபெறும் 2 போட்டிகளில் முதல் போட்டியாக இந்தப் போட்டி மதியம் 3.30 மணிக்கு நடைபெற உள்ளது.

போட்டி விவரம் :

செப்டம்பர் 26, போட்டி 38, சென்னை சூப்பர் கிங்ஸ் V கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மதியம் 3.30 மணி, அபுதாபி.

நேரடி ஒளிபரப்பு :

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்.

முன்னோட்டம் :

நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான அனுபவம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பாக செயல்பட்டு பங்கேற்ற 9 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 2வது இடம் பிடித்து அசத்தி வருகிறது.

சென்னை அணியில் கடைசி 2 போட்டிகளில் டுவைன் பிராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சஹர் ஆகியோரால் பந்துவீச்சு சிறப்பாக உள்ளது.

அதே போல ருத்துராஜ், டுப்லஸ்ஸிஸ், ராயுடு என அந்த அணி பேட்ஸ்மேன்களும் தேவையான ரன்களை குவித்து வருகின்றனர்.

முதல் பாகத்திலும் 2வது பாகத்திலும் சிறப்பாக செயல்படும் வரும் அந்த அணியின் வெற்றி பயணம் இந்த போட்டியிலும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.

மறுபுறம் முதல் பாகத்தில் சொதப்பிய கொல்கத்தா ஐக்கிய அரபு நாடுகளில் தொடங்கிய 2வது ஐபிஎல் பாகத்தின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்று வாய்ப்பை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு வருகிறது.

பேட்டிங்கில் இளம் வெங்கடேஷ் ஐயர் கொல்கத்தாவின் கடைசி 2 போட்டிகளில் வெற்றிக்கு வித்திட்டார். ராகுல் திரிபாதி, கில், ராணா என அந்த அணியின் பேட்டிங்கும் சிறப்பாக உள்ளது.

பந்துவீச்சில் தமிழகத்தின் வருன் சக்ரவர்த்தி, சுனில் நரேன் ஆகியோருடன் அதிரடி ஆல்-ரவுண்டர் ஆண்ட்றே ரசல் துருப்புச் சீட்டாக செயல்பட்டு வருகிறார்.

இந்த 2 அணிகளுமே கடைசியாக மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய 2 அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்றுள்ளது.

எனவே நல்ல பார்மில் உள்ள இந்த 2 அணிகள் மோதும் போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.

புள்ளிவிவரம் :

ஐபிஎல் வரலாற்றில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் இதுவரை மொத்தம் 23 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன.

  • அதில் சென்னை 15 போட்டிகளில் வென்றுள்ளது,கொல்கத்தா 8 போட்டிகளில் வெற்றி பெற்றது.
  • கடைசியாக இந்தக் 2 அணிகள் மோதிய 5 போட்டிகளில் சென்னை 4 முறை வெற்றி பெற்று வலுவாக திகழ்கிறது, கொல்கத்தா 1 முறை வென்றுள்ளது.
  • போட்டி நடைபெறும் ஐக்கிய அரபு நாடுகளில் இவ்விரு அணிகளும் இதுவரை மோதிய 2 போட்டிகளில் தலா 1 வெற்றி பெற்றுள்ளன.

இன்னும் குறிப்பாக போட்டி நடைபெறும் அபுதாபி மைதானத்தில் இதற்கு முன் இந்த 2 அணிகள் மோதிய போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்றது.

பிட்ச் விவரங்கள் :

போட்டி நடைபெறும் அபுதாபியில் பேட்டிங் பவுலிங் இரண்டுமே சமமாக எடுபட்டு வருகிறது.

திறமையை வெளிப்படுத்தும் யாராயினும் இங்கே வெற்றி பெறுபவர்களாக இருக்கிறார்கள், எனவே பேட்டிங் மற்றும் பவுலிங் என 2க்கும் கை கொடுக்க கூடிய பிட்ச்சை மீண்டும் இந்த போட்டியில் காணலாம்.

  • இந்த மைதானத்தில் கடைசி 25 போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 159 ஆகும்.
  • கடைசி 25 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி 10 முறையும் சேசிங் செய்த அணி 15 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச தீர்மானிப்பது நல்லது.

உத்தேச அணிகள் :

இந்த 2 அணிகளுமே தற்போதைய நிலைமையில் வெற்றிப் பாதையில் பயணித்து வருவதால் அணிக்குள் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் :

ருதுராஜ் கைக்வாட், பப் டு பிளெஸ்ஸிஸ், மொயின் அலி, அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, எம்எஸ் தோனி (கேப்டன் - கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ட்வயன் ப்ராவோ, ஷர்டுல் தாகூர், தீபக் சஹர், ஜோஸ் ஹேசல்வுட். 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் :

சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, ஈயன் மோர்கன் (கேப்டன்), தினேஷ் கார்த்திக் (கீப்பர்), அண்றே ரசல், சுனில் நரேன், லோக்கி பெர்குசன், வருண் சக்ரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா.

Previous Post Next Post

Your Reaction