MrJazsohanisharma

MI Vs RCB : தோல்வியில் இருந்து மீள போவது யார் - முழு விவரம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 39வது போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Virat Kohli | Rohit Sharma (Photo : BCCI/IPL)


இன்று நடைபெறும் 2 போட்டிகளில் 2வது போட்டியாக இப்போட்டி துபாயில் இரவு 7.30 மணி துவங்க உள்ளது.

போட்டி விவரம் :

போட்டி 39, மும்பை இந்தியன்ஸ் V ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, இரவு 7.30 மணி, துபாய்.

முன்னோட்டம் :

மும்பை :

நடப்பு சாம்பியன் மும்பையை பொருத்தவரை இதுவரை பங்கேற்ற 9 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டும் பெற்று புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.

பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற இனி வெற்றிப்பாதையில் பயணிக்க அந்த அணிக்கு நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா, அடம் மில்னே, டிரென்ட் போல்ட் ஆகியோர் சிறந்து விளங்குகிறார்கள். இருப்பினும் சுழல் பந்துவீச்சாளர்களான ராகுல் சஹர், க்ருனால் பாண்டியா விக்கெட்டுக்கள் எடுக்க திண்டாடி வருகிறார்கள்.

இவர்களுடன் சூரியகுமார் யாதவ், இஷான் கிசான் உட்பட அந்த அணியின் பேட்ஸ்மேன்களும் தடுமாறி வருகின்றனர்.

எனவே பெங்களூருக்கு எதிரான இந்த போட்டியில் இவர்கள் அனைவரும் பொறுப்புடன் விளையாடினாலே வெற்றி கிடைக்கும்.

பெங்களூரு :

மறுபுறம் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ஐக்கிய அரபு நாடுகளில் கடைசியாக பங்கேற்ற 7 ஐபிஎல் போட்டிகளில் தொடர் தோல்விகளை பெற்று மோசமாக விளையாடி வருகிறது.

இதுவரை 9 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தை பெற்றுள்ள அந்த அணி மும்பையை போலவே பிளே ஆப் சுற்றுக்கு வெற்றிப்பாதையில் பயணிக்க அவசியம் ஏற்பட்டுள்ளது.

விராட் கோலி, தேவுத் படிக்கல் என அந்த அணியின் டாப் ஆர்டர் ஓரளவு ரன்கள் குவிக்கும் போதிலும் ஏபி டிவில்லியர்ஸ், கிளன் மேக்ஸ்வேல் போன்ற மிடில் ஆர்டர் பேட்டர்கள் தடுமாறுவது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது.

பந்து வீச்சிலும் புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஹசரங்கா உட்பட அனைவரும் தடுமாறி வருகிறார்கள்.

எனவே இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சிறப்பாக பாடுபட்டால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.

இந்த 2 அணிகளுமே கடைசியாக கொல்கத்தா மற்றும் சென்னை அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து 2 தோல்விகளை பெற்றுள்ளது என்பதால் தொடர் தோல்வியில் இருந்து இந்த போட்டியில் வெல்லப்போவது யார் என பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

புள்ளிவிவரம் :

ஐபிஎல் வரலாற்றில் இந்த 2 அணிகளும் இதுவரை மொத்தம் 28 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்தியுள்ளன.

  • அதில் மும்பை 17 போட்டிகளில் வென்று முன்னிலை வகிக்கிறது, பெங்களூரு 11 முறை வெற்றி பெற்றுள்ளது.
  • கடைசியாக இந்த 2 அணிகள் மோதிய 7 போட்டிகளில் மும்பை 4 முறையும் பெங்களூரு 3 முறையும் வென்றுள்ளன.

பிட்ச் விவரங்கள் :

போட்டி நடைபெறும் துபாய் மைதானம் இந்த ஆண்டு வேகப்பந்து வீச்சுக்கு சிறப்பாக கைகொடுக்கிறது.

குறிப்பாக கடைசி போட்டியில் டெல்லி அணியை சேர்ந்த நோர்ட்ஜெ, ககிசோ ரபாடா ஆகியோர் அதிரடியாக பந்துவீசி விக்கெட்டுகளை அள்ளினார்கள்.

எனவே பேட்ஸ்மேன்கள் இங்கு நின்று நிதானமாக விளையாட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

  • கடைசியாக துபாய் மைதானத்தில் நடைபெற்ற 29 போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸை 170 ஆகும்.
  • இந்த மைதானத்தில் நடந்த கடைசி 29 போட்டிகளில் 18 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகள் வென்றுள்ளன, 11 போட்டிகளில் சேசிங் செய்த அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானிக்கலாம்.

டாப் வீரர்கள் :

மும்பைக்கு எதிராக : ஏபி டிவில்லியர்ஸ் 774 ரன்களை 24 போட்டிகளில் குவித்துள்ளார்.

பந்துவீச்சில் சஹால் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

பெங்களூருவுக்கு எதிராக : மும்பை கேப்டன் ரோகித் சர்மா 716 ரன்கள் குவித்துள்ளார்.

அதேபோல் மும்பை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா பெங்களூருவுக்கு எதிராக வரலாற்றில் 21 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

உத்தேச அணிகள் :

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு :

விராட் கோலி (கேப்டன்), தேவூத் படிக்கல், ஸ்ரீகர் பரத் (கீப்பர்), க்ளென் மேக்ஸ்வேல் ஏபி டீ வில்லியர்ஸ், டிம் டேவிட், வணிந்து ஹஸரங்கா, ஹர்ஷல் படேல், முகமத் சிராஜ், நவ்தீப் சைனி, யுஸ்வென்ற சஹால்.

மும்பை இந்தியன்ஸ்:

குயின்டன் டீ கோக் (கீப்பர்), ரோஹித் சர்மா (கேப்டன்), சூரியகுமார் யாதவ், இஷான் கிஷான், சௌரப் திவாரி/ஹர்டிக் பாண்டியா, கிரன் பொல்லார்ட், க்ருனால் பாண்டியா, அடம் மில்னே, ராகுல் சஹர், ஜஸ்பிரிட் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்.

Your Reaction

Previous Post Next Post