ஐபிஎல் 2021 தொடரில் நேற்று சார்ஜாவில் நடைபெற்ற 35வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது.
![]() |
Chennai Super Kings | Royal Challengers Benglore (Photo : BCCI/IPL) |
முன்னதாக இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணிக்கு கேப்டன் விராட் கோலி மற்றும் தேவூத் படிக்கல் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 13.1 ஓவர்களில் 111 ரன்கள் எடுத்து மிகச் சிறந்த அடித்தளமிட்டனர்.
இதில் விராட் கோலி 41 பந்துகளில் 53 ரன்களும் 50 பந்துகளில் 20 ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள், இதனால் 200 ரன்களை பெங்களூரு எளிதாக தொட்டுவிடும் என அனைவரும் நினைத்தனர்.
சொதப்பிய மிடில் ஆர்டர் :
அந்த வேளையில் அவர்கள் அவுட் ஆனதும் அடுத்துவந்த டிவில்லியர்ஸ் 12, கிளன் மேக்ஸ்வெல் 11, டிம் டேவிட் 1 என அடுத்தடுத்து சென்னையின் திட்டமிட்ட சிறப்பான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட் ஆகி நடையை கட்டினர்.
இதனால் 20 ஓவர்களில் பெங்களூரு வெறும் 156/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை சார்பில் பந்துவீச்சில் கலக்கிய டுவைன் பிராவோ 3 விக்கெட்டுகளும் தாக்கூர் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
சென்னை வெற்றி :
பின் 157 என்ற இலக்கை துரத்திய சென்னைக்கு ருத்துராஜ் 38, டு பிளேஸிஸ் 31, ராயுடு 32 என களமிறங்கிய அனைத்து பேட்டர்களும் சுமாரான ரன்கள் குவித்த காரணத்தால் 18.1 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியால் சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளி பட்டியலில் 14 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றது, பெங்களூரு 10 புள்ளிகளுடன் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளது.
இப்போட்டியில் நிகழ்ந்த சில சாதனைகள் மற்றும் நிகழ்வுகளின் பட்டியல்:
1. நேற்றைய போட்டியில் 53 ரன்கள் விளாசிய விராட் கோலி ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக முறை 50+ ரன்கள் குவித்த இந்திய பேட்டர் என்ற சாதனையை ஷிகர் தவானுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
- விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் இருவருமே ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை அதிகபட்சமாக 46 முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்துள்ளனர்.
2. அத்துடன் 41 அரை சதங்களுடன் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் அடித்த 3வது பேட்டர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
- முதல் 2 இடங்களில் டேவிட் வார்னர் 50 அரை சதங்களுடனும் ஷிகர் தவான் 44 அரை சதங்களுடன் உள்ளனர்.
3. இப்போட்டியில் முதல் விக்கெட்டுக்கு 111 ரன்கள் குவித்த விராட் கோலி மற்றும் படிக்கல் ஜோடி ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னைக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த பெங்களூரு ஓப்பனிங் ஜோடி என்ற சாதனை படைத்தது.
- இதற்கு முன் கடந்த 2012இல் கிறிஸ் கெயில் - விராட் கோலி ஜோடி சென்னைக்கு எதிராக 109 ரன்கள் குவித்ததே இதுவரை சாதனையாக இருந்தது.
4. நேற்றைய போட்டியில் சென்னைக்கு எதிராகப் பெற்ற தோல்வியுடன் அரபுநடுகளில் பெங்களூர் அணி இதுவரை தொடர்ந்து 7 போட்டிகளில் தோற்றுள்ளது.
இதன் காரணமாக ஐக்கிய அரபு நாடுகளில் தொடர்ந்து அதிக டி20 போட்டிகளில் தோற்ற அணி என்ற மோசமான சாதனை பெங்களூரு படைத்தது.
- இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் தொடர்ந்து 6 போட்டிகளில் தோற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
5. நேற்றைய வெற்றியுடன் சேர்த்து ஐக்கிய அரபு நாடுகளில் கடைசியாக களமிறங்கிய 5 போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது.
6. பெங்களூருக்கு எதிராக ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை குவித்த அணி என்ற பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்றுள்ளது.
பெங்களூருவுக்கு எதிராக அதிக வெற்றிகள்:
- சென்னை - 18.
- மும்பை - 17*.
- கொல்கத்தா - 15.
7. நட்சத்திர வீரர் ட்வைன் பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 100 போட்டிகளில் விளையாடிய 4வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
- எம்எஸ் தோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஏற்கனவே சென்னை 100 போட்டியில் விளையாடி உள்ளனர்.
8. 17* ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சுரேஷ் ரெய்னா ஐபிஎல் கிரிக்கெட்டில் 5500 ரன்களை கடந்த 4வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
- விராட் கோலி, ரோகித் சர்மா ஷிகர் தவான் ஆகியோர் ஏற்கனவே 5500 ரன்களை கடந்துள்ளார்கள்.
9. சென்னை வெற்றி பெற்ற இப்போட்டியின் இறுதியில் 11* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த எம்எஸ் தோனி ஐபிஎல் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட போட்டிகளில் அதிக முறை ஆட்டமிழக்காமல் இருந்த 2வது பேட்டர் என்ற பெருமையைப் பெற்றார்.
- அவர் இதுவரை வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட போட்டிகளில் 23 முறை அவுட்டாகாமல் இருந்துள்ளார், ரவீந்திர ஜடேஜா 24 நாட் -அவுட் களுடன் முதலிடத்தில் உள்ளார்.