2008இல் இங்கிலாந்து பாதியில் ஓடியதை மறக்ககூடாது - சுனில் கவாஸ்கர்

இங்கிலாந்தில் இந்தியா பங்கேற்று வந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 4 போட்டிகளுடன் நிறுத்தப்பட்டது, நேற்று மான்செஸ்டரில் துவங்குவதாக இருந்த 5வது போட்டி ரத்து செய்யப்பட்டதை அடுத்து இந்தியா 2 - 1 என தொடரில் முன்னிலையுடன் உள்ளது. ரத்து செய்யப்பட்ட 5வது போட்டியை பற்றிய இறுதி முடிவு விரைவில் வெளியாகும் என இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் கூட்டாக அறிவித்தனர்.

Joe Root | Virat Kohli| Sunil Gavaskar (Getty)

இந்தியா மீது குற்றச்சாட்டு : 5வது போட்டி ரத்து செய்யப்பட்டதை அடுத்து இங்கிலாந்து கிரிக்கெட்டை இந்திய கிரிக்கெட் தலை குனியச் செய்து விட்டது என இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் நேற்று தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதேபோல் மற்றொரு முன்னாள் கேப்டன் நாசர் உசேன் உட்பட பல இங்கிலாந்து ஊடகங்களும் ரசிகர்களும் மான்செஸ்டர் டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதற்கு இந்தியாதான் முழுமுதற் காரணம் என இந்தியா மீது கடும் விமர்சனத்தை வைத்தனர்.


மறந்துட்டீங்களா : இந்நிலையில் இந்தியாவின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு இந்தியாவின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார். இதுபற்றி சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர்,


"2008ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தாக்குதளை காரணம் காட்டி இங்கிலாந்து அணி பாதியிலேயே நாடு திரும்பியதை இந்தியர்களான நாங்கள் மறக்க மாட்டோம். அப்போது கெவின் பீட்டர்சன் தலைமையிலான இங்கிலாந்து அணியில் அவர் தான் முதன்மையானவராக இருந்தார் என்பதை நாங்கள் மறக்க மாட்டோம்".

"அந்த சமயத்தில் கெவின் பீட்டர்சன் "இல்லை, நான் நாடு திரும்ப விரும்பவில்லை" எனக் கூறியிருந்தால் அந்த சுற்றுப்பயணம் முழுமையாக நடந்திருக்கும். அந்த நேரத்தில் கெவின் பீட்டர்சன்  மற்றவர்களிடம் பேசி எஞ்சிய தொடர் நடைபெற சம்மதிக்க வைத்தார். அதனால் சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் 380 ரன்களை சேசிங் செய்து இந்தியா அபார வெற்றி பெற்றிருந்தது, அந்த சம்பவத்தை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நினைவு கொள்ள வேண்டும்"


என தெரிவித்தார். கடந்த 2008 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு கெவின் பீட்டர்சன் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 7 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வந்தது. அதில் 5 போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில் மும்பை தாஜ் ஹோட்டலில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலால் நவம்பர் 29 மற்றும் டிசம்பர் 2 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த கடைசி 2 போட்டிகளில் பங்கேற்க முடியாது எனக் கூறிவிட்டு இங்கிலாந்து அணியினர் நாடு திரும்பினார்.

அதை தான் சுனில் கவாஸ்கர் தற்போது சுட்டிக்காட்டி பதிலடி கொடுத்துள்ளார், மேலும் 2008இல் இந்தியாவில் நிலைமை சீரான பிறகு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து அணி மீண்டும் இந்தியாவிற்கு வந்தது, அப்போது மும்பையில் நடைபெறுவதாக இருந்த 2வது போட்டி சென்னைக்கு மாற்றப்பட்டது.

அதேபோல் இந்த 5வது டெஸ்ட் போட்டியை 2022 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது நடத்திக் கொள்ளலாம் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் பிசிசிஐ தெரிவித்துள்ளது மிகச்சிறந்த திட்டம் என சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.



Previous Post Next Post

Your Reaction