IND vs ENG : டெஸ்ட் தொடரில் இந்தியா கற்ற 3 பாடங்கள்

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 4 போட்டிகளின் முடிவில் இந்தியா 2 - 1 என முன்னிலையில் இருந்த நிலையில் 5வது போட்டி ரத்து செய்யப்பட்டதால் இந்த தொடர் முடிவின்றி நிறுத்தப்பட்டுள்ளது, இந்த 5வது டெஸ்ட் போட்டியை எப்போது நடத்தலாம் என்பது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. 

Rahane, Ashwin, Thakur (Getty)


இந்த தொடர் தொடங்கியது முதலே இரு அணிகளும் தங்களது முழு திறமையுடன் அபாரமாக மோதியதால் ரசிகர்களுக்கு இந்த தொடர் சிறப்பான விருந்து படைத்தது என்றே கூறலாம், இருப்பினும் கூட இங்கிலாந்தை விட இந்தியா தான் அதிக ஆதிக்கம் செலுத்தியது.

சரி இந்த தொடரில் இந்தியா கற்ற 3 முக்கியமான பாடங்கள் பற்றி பார்ப்போம்:

1. மிடில் ஆர்டர் : இந்த தொடர் முழுவதும் இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் மோசமான பார்ம் படுமோசமாக வெளிப்பட்டது, கேப்டன் விராட் கோலி, புஜாரா, அஜிங்கிய ரஹானே ஆகிய மூவரும் இந்த தொடரில் மோசமாக விளையாடினர்.

இருப்பினும் 2வது பகுதியில் கேப்டன் விராட் கோலி மற்றும் அனுபவ வீரர் புஜாரா ஆகியோர் பார்ம்க்கு திரும்பி இந்த தொடரில் முறையை 218 மற்றும் 227 ரன்கள் எடுத்தனர், இருந்தபோதிலும் துணை கேப்டன் ரகானே கடைசிவரை மோசமாக விளையாடினார், அவர் இந்த தொடரில் மொத்தமாக வெறும் 109 ரன்களை 15.50 என்ற மோசமான சராசரியில் மட்டுமே எடுத்தார்.

இப்படி இந்த தொடரில் தள்ளாடிய மிடில் ஆர்டரின் மோசமான ஆட்டம் டாப் ஆர்டரில் களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரின் பொறுப்பான ஆட்டம் மறைத்து, எனவே அடுத்த டெஸ்ட் தொடருக்குள் இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நல்ல பார்ம்க்கு வரவேண்டும் அல்லது ஒரு சில மாற்றங்களை செய்து பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.


2. கேப்டன் கோலியின் அஷ்வின் முடிவு : இந்த தொடரில் இந்தியாவின் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்காத காரணத்தால் கேப்டன் விராட் கோலி கடும் விமர்சனங்களை சந்தித்தார் ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 413 விக்கெட்டுகளையும் 5 சதங்களையும் அடித்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வினுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜாவை விராட்கோலி அனைத்துப் போட்டிகளிலும் களமிறக்கினார்.

அவருக்கு பதில் களமிறங்கிய ரவிந்திர ஜடேஜா 160 ரன்களும் 4 விக்கெட்டுகளும் எடுத்தார், 4 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 1 சுழல் பந்துவீச்சாளர் என்ற பார்முலாவை கையில் எடுத்த விராட் கோலியின் இந்த இந்த முடிவு இந்தியாவை பெரிதளவு பாதிக்கவில்லை என்பதால் அதை அவர் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


3. ஆல் ரவுண்டர் ஷார்துல் தாகூர் : இந்த தொடரில் நடைபெற்ற 4 போட்டிகளில் 2 முறை வாய்ப்பு பெற்ற ஷார்துல் தாக்கூர் யாரும் எதிர்பாரா வண்ணம் அற்புதமாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார், குறிப்பாக ஓவலில் நடைபெற்ற 4வது போட்டியில் இந்தியா கடும் நெருக்கடியில் இருந்த போது 2 இன்னிங்ஸ்களிலும் முறையே 57 மற்றும் 60 ரன்கள் என அரைசதங்கள் அடித்தார்.

அத்துடன் ஜோ ரூட் விக்கெட் உட்பட 3 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார், இதுமட்டுமல்லாமல் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காபா டெஸ்ட் போட்டியிலும் இவர் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலுமே அசத்தினார்.

இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் ஆல்ரவுண்டர் தேடலுக்கான ஒரு முடிவாக தாக்கூர் இருப்பார் என நம்பலாம், மேலும் முன்னாள் இந்திய ஜாம்பவான்களான விவிஎஸ் லக்ஷ்மன் மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோர் இந்திய அணியில் ஆல் ரவுண்டராக தாகூருக்கு தங்களது ஆதரவை சமீபத்தில் தெரிவித்தனர்.

Previous Post Next Post

Your Reaction