இந்தியாவில் நடைபெற்று வந்த இந்தியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட்டின் 2021 தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது, இதையடுத்து பல தடைகளுக்கு பின் இந்த தொடரின் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளில் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.
![]() |
Aaron Finch | Darren Sammy (File) |
ஐபிஎல் என்றாலே ஒவ்வொரு அணியிலும் விளையாடும் வெளிநாட்டு வீரர்கள் மீது ரசிகர்களுக்கு எப்போதுமே எதிர்பார்ப்பு எகிறி இருக்கும், குறிப்பாக பல வெளிநாட்டு கேப்டன்கள் ஐபிஎல் அணிகளுக்கு கேப்டன்ஷிப் செய்து தங்களது திறமையால் கோப்பைகளையும் வென்று கொடுத்துள்ளார்கள் . எடுத்துக்காட்டாக ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான்கள் அடம் கில்கிரிஸ்ட், ஷேன் வார்னே, டேவிட் வார்னர் போன்றவர்களைக் குறிப்பிடலாம்.
இருப்பினும் சில வெளிநாட்டு கேப்டன்கள் இந்த புகழ்பெற்ற தொடரில் ஜொலிக்கவும் தவறி உள்ளார்கள். அவர்களின் பட்டியல்:
1. டேரன் சம்மி - வெஸ்ட்இண்டீஸ் :
வெஸ்ட்இண்டீஸை சேர்ந்த டேரன் சம்மி வரலாற்றில் இதுவரை நடைபெற்ற 6 ஐசிசி டி20 உலகக் கோப்பைகளில் 2012 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் 2 முறை கோப்பைகளை வென்று சாதித்த ஒரே கேப்டன் ஆவார். இவர் ஐபிஎல் தொடரில் கடந்த 2013ஆம் ஆண்டு ஹைதராபாத் அணிக்காக முதல் முறையாக ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
பின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய போதிலும் எந்த ஒரு தொடரிலும் அவர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, மொத்தமாக அவர் விளையாடிய 22 ஐபிஎல் போட்டிகளில் வெறும் 241 ரன்களுக்கு 11 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார்.
2. ஆரோன் பின்ச் - ஆஸ்திரேலியா :
ஆஸ்திரேலியாவின் தற்போதைய டி20 கேப்டன் ஆரோன் பின்ச் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக அணிகளுக்காக விளையாடியவர் என்ற பெருமையை கொண்டவர், இவர் வரலாற்றில் அதிக பட்சமாக 8 வெவ்வேறு அணிகளுக்காக விளையாடி உள்ளார்.
ஆனால் எந்த ஒரு அணிக்காகவும் சிறப்பாக விளையாடி ஒரு நிரந்தரமான இடத்தை இவரால் பிடிக்கவே முடியவில்லை, இதுவரை 85 ஐபிஎல் இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்துள்ள அவர் வெறும் 2005 ரன்களை 25.38 என்ற சுமாரான சராசரியில் மட்டுமே எடுத்துள்ளார், இதிலிருந்தே இந்திய ஆடுகளங்களில் இவர் பெரிய அளவில் பேட்டிங் செய்ய தவறி வருகிறார் என தெளிவாக தெரிகிறது.
3. ஏஞ்சலோ மேத்தியூஸ் - இலங்கை :
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையை சேர்ந்த ஆல்ரவுண்டர் கேப்டன் என்பதாலும் இந்திய ஆடுகளங்களில் சிறப்பாக விளையாடுவார் என்பதாலும் இவரை டெல்லி, கொல்கத்தா மற்றும் புனே ஆகிய அணிகள் ஐபிஎல் தொடரில் எடுத்தன.
இருப்பினும் இவர் களமிறங்கிய 42 இன்னிங்ஸ்களில் வெறும் 724 ரன்களை 23.35 என்ற சுமாரான சராசரியில் 125.91 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் மட்டுமே எடுத்தார், அதேபோல் 44 இன்னிங்ஸ்களில் வெறும் 27 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்து ஐபிஎல் தொடரில் சோபிக்க தவறினார்.