வயதால் துணை கேப்டன் ரோஹித் சர்மாவை நீக்க நினைத்த விராட் கோலி

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து வரும் டி20 உலகக் கோப்பையுடன் விலக உள்ளதாக விராட் கோலி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார், இதையடுத்து அடுத்த கேப்டனாக துணை கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rohit Sharma | Virat Kohli (BCCI)

இந்த நிலையில் ஒரு கட்டத்தின் போது துணை கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மாவை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என விராட் கோலி நினைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன, பொதுவாகவே உடல் பகுதியில் அதிக அக்கறை காட்டும் விராட் கோலி தனது அணியில் உடல் கட்டுடன் கூடிய வீரர்கள் இருப்பதையே விரும்புவார் என்பதை நாம் அறிவோம்.

அந்த வகையில் 34 வயது நிரம்பிய ரோகித் சர்மாவை துணை கேப்டன் பதவியில் இருந்து விலக்க வேண்டும் என பிசிசிஐயிடம் ஒரு சமயம் விராட் கோலி கேட்டுக் கொண்டதாக தெரிகிறது, அதே சமயம் ஒரு நாள் போட்டிகளில் துணை கேப்டனாக கேஎல் ராகுல் மற்றும் டி20 போட்டிகளில் துணை கேப்டனாக ரிஷப் பண்ட் இருக்க வேண்டும் என விராட் கோலி விரும்பியதாக தெரிகிறது.

ஆதரவு கொடுக்காத கேப்டன் :

இந்நிலையில் விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகுவது பற்றி "கிரிக்கெட்அடிக்டர்" இணையதளத்தில் பிசிசிஐக்கு நெருங்கிய அதிகாரி ஒருவர் பேசுகையில்,


"வெள்ளை பந்து கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுவோம் என விராட் கோலிக்கு தெரியும், ஒருவேளை துபாயில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் போனால் அவரின் வெள்ளை பந்து கேப்டன்சிப் பறிபோகும் என அவருக்குத் தெரியும். இந்த முடிவின் வாயிலாக அவர் தன் மீதான அழுத்தத்தை ஓரளவு குறைத்துக் கொண்டுள்ளார், டி20 கிரிக்கெட்டில் அவரின் செயல்பாடுகள் கீழ்நோக்கி சென்றாலும் அது 50 ஓவர் கிரிக்கெட்டில் பாதிக்காது.

என கூறினார்.

Getty Images

மேலும் விராட் கோலி இந்திய அணியை எவ்வாறு நடத்துகிறார் என்பது பற்றிய தகவல்களை அவர் தெரிவிக்கையில்,

எம்எஸ் தோனியின் அறை கதவுகள் 24*7 என எப்போதும் அணியில் உள்ள வீரர்களுக்காக திறந்திருக்கும், யார் வேண்டுமானாலும் வரலாம் பிஎஸ் 4 விளையாடலாம், சாப்பிடலாம். வேண்டுமானால் கிரிக்கெட் பற்றி கூட பேசலாம் ஆனால் அந்த விசயத்தில் மைதானத்திற்கு வெளியே விராட் கோலி உண்மையாக தொடர்பு வைத்துக் கொள்ள மாட்டார்

ரோஹித் சர்மா தோனியின் சாயத்தை கொண்டவர் இருப்பினும் அது வித்தியாசமானதாக இருக்கும், அவர் அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு விருந்து அளிப்பார், அவர்களின் கடினமான தருணங்களில் மனம் விட்டு பேசுவார், நண்பனைப் போல் அதிக ஆதரவு கொடுப்பார்"

என தெரிவித்தார். கேப்டன் பதவியில் இருந்து விலகுவது பற்றி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் துணை கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் உடன் விவாதித்த பின் முடிவெடுத்துள்ளதாக விராட் கோலி நேற்று தனது அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார்.

Previous Post Next Post

Your Reaction