ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது.
![]() |
India Halts Australia's Record Streak (Photo By ICC) |
இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற முடிந்த 2வது போட்டியில் கடைசி பந்து வரை போராடி இந்தியா தோற்றது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் மெக்காய் நகரில் இந்தத் தொடரின் 3வது மற்றும் கடைசி போட்டி இந்திய நேரப்படி அதிகாலை தொடங்கியது.
ஆஸ்திரேலியா 264 ரன்கள் :
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா ஆரம்பத்தில் இந்தியாவின் சிறப்பான பந்து வீச்சில் 83/4 என தடுமாறியது.
இருப்பினும் மிடில் ஆர்டர் வீராங்கனைகள் பெத் மூனி 52 ரன்களும், அஷ் கார்டனர் 67 ரன்களும், தஹிலா மெக்ராத் 47 ரன்களும் எடுக்க 50 ஓவர்களில் 9 விக்கெட் இழந்த ஆஸ்திரேலியா 264 ரன்கள் குவித்தது.
இந்தியா சார்பில் சிறப்பாக பந்து வீசிய அனுபவ வீராங்கனை ஜூலன் கோஸ்வமி மற்றும் பூஜா வஸ்த்தகர் 3 விக்கெட்களும் சாய்த்தனர்.
சிறப்பான தொடக்கம் :
பின்னர் 265 என்ற இலக்கை துரத்திய இந்தியாவிற்கு நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 22 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
- ஆனாலும் அடுத்ததாக ஜோடி சேர்ந்த சபாலி வர்மா 56 ரன்களும் மற்றும் யாஷிகா பாட்டியா 64 ரன்களும் எடுத்து 2வது விக்கெட்டுக்கு 101 ரன்கள் குவித்து இந்தியாவை சரிவில் இருந்து மீட்டனர்.
சொதப்பிய மிடில் ஆர்டர்:
இதன் காரணமாக எளிதாக வெற்றி பெற்றுவிடும் என எதிர்பார்த்த இந்திய ரசிகர்களுக்கு ரிச்சா கோஷ் டக் அவுட் ஆகியும் பூஜா வர்த்தகர் 3 ரன்களில் அவுட் ஆகியும் அதிர்ச்சி அளித்தனர்.
கூடவே கேப்டன் மிதாலி ராஜ் 13 ரன்களில் அவுட் ஆக போட்டியில் பரபரப்பு பற்றியது.
காப்பாற்றிய ராணா - தீப்தி ஜோடி:
அந்த பரபரப்பான நேரத்தில் அடுத்து வந்த தீப்தி சர்மா 30 பந்துகளில் 31 ரன்களும் ஸ்னே ராணா 27 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து முக்கியமான வேளையில் அவுட் ஆனார்கள்.
கடைசி ஓவரில் 4 ரன்கள் தேவைப்பட்ட போது கடந்த போட்டியில் நோபால் வீசி வெற்றியை கோட்டை விட்ட அனுபவ வீராங்கனை கோஸ்வாமி பவுண்டரி அடித்து 3 பந்துகள் மீதம் வைத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை திரில் வெற்றி பெற செய்தார்.
இந்தியா சாதனை :
அத்துடன் 265 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த இந்தியா மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தனது அதிகபட்ச ஸ்கோரை வெற்றிகரமாக சேசிங் செய்து சாதனை படைத்தது.
![]() |
Photo By Cricket Australia |
- இந்த த்ரில் வெற்றியில் 8* ரன்களும் 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய ஜூலன் கோஸ்வாமி ஆட்டநாயகன் விருது வென்றார்.
- சொந்த மண்ணில் நடைபெற்ற இந்த தொடரை 2 - 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வென்றது.
முடிவுக்கு வந்த உலகசாதனை :
இதன் வாயிலாக மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 26 போட்டிகளில் வென்று உலக சாதனை படைத்து வந்த ஆஸ்திரேலிய மகளிர் அணியின் வெற்றிப் பயணத்திற்கு இந்தியா முடிவு கட்டியது.
கடைசியாக கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக காப்ஸ் ஹார்பர் மைதானத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா ஒரு ஒருநாள் போட்டியில் தோற்றது.
- அதன் பின் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக நியூசிலாந்துக்கு எதிராக 9 வெற்றிகள், இந்தியாவுக்கு எதிராக 5 வெற்றிகள், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக தலா 3 வெற்றிகள் என 26 வெற்றிகளை தொடர்ச்சியாக பெற்று வந்தது.
தற்போது அந்த உலக சாதனைக்கு இந்திய மகளிர் அணி ஒருவழியாக முற்றுப்புள்ளி வைத்து இந்தியாவை பெருமை படுத்தியுள்ளது.