இங்கிலாந்தில் நடைபெற்று வந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 1 என இந்தியா முன்னிலை வகித்த நிலையில் 5வது போட்டி ரத்து செய்யப்பட்டது, இதையடுத்து இந்திய வீரர்கள் இன்று முதல் துவங்க இருக்கும் எஞ்சிய 2021 ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு நாடுகளில் உள்ளார்கள்.
![]() |
Team India (Source : Twitter) |
இந்த தொடர் முடிந்த அடுத்த ஒரு சில தினங்களில் அதே ஐக்கிய அரபு நாடுகளில் 2021 ஐசிசி டி20 உலகக் கோப்பை துவங்குகிறது, இதில் விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. இந்த தொடரை முடித்துவிட்டு நாடு திரும்பும் இந்திய அணி சொந்த மண்ணில் அடுத்தடுத்த 4 கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது.
நியூஸிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை மற்றும் தென்ஆப்பிரிக்கா ஆகிய 4 நாடுகளுக்கு எதிராக மொத்தம் 14 டி20 போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் சொந்த மண்ணில் இந்தியா களம் இறங்குகிறது. இதில் நியூசிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக 2 போட்டிகள் கொண்ட 2 டெஸ்ட் தொடர்களில் பங்கு பெறுகிறது.
![]() |
Getty Images |
டி20 உலகக் கோப்பை 2071 தொடர் முடிந்தவுடன் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா பங்கு பெறும் கிரிக்கெட் தொடர்களின் அட்டவணை (2021) :
இந்தியா V நியூஸிலாந்து
முதல் டி20, நவம்பர் 17, ஜெய்ப்பூர்.
2வது டி20, நவம்பர் 19, ராஞ்சி.
3வது டி20, நவம்பர் 21, கொல்கத்தா.
முதல் டெஸ்ட், நவம்பர் 25 - 29, கான்பூர்.
2வது டெஸ்ட், டிசம்பர் 3 - 7, மும்பை.
இந்த தொடரை முடித்துக் கொண்டு இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 4 டி20 போட்டிகளில் பங்கேற்று விட்டு மீண்டும் நாடு திரும்புகிறது. அதன்பின் தொடர்ச்சியாக 3 அடுத்தடுத்த தொடர்களில் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை மற்றும் தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக இந்திய அணி விளையாடுகிறது.
வெஸ்ட் அணிக்கு அணிக்கு எதிராக இந்தியா பங்குபெரும் கிரிக்கெட் தொடரின் அட்டவணை (2022) :
இந்தியா V வெஸ்ட்இண்டீஸ்
முதல் ஒருநாள் போட்டி, பிப்ரவரி 6, அகமதாபாத்.
2வது ஒருநாள் போட்டி, பிப்ரவரி 9, ஜெய்ப்பூர்.
3வது ஒருநாள் போட்டி, பிப்ரவரி 12, கொல்கத்தா.
முதல் டி20, பிப்ரவரி 15, கட்டாக்.
2வது டி20, பிப்ரவரி 18, விசாகப்பட்டினம்.
3வது டி20, பிப்ரவரி 20, திருவனந்தபுரம்.
இலங்கைக்கு எதிராக இந்தியா களமிறங்கும் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை (2022) :
இந்தியா V இலங்கை
முதல் டெஸ்ட், பிப்ரவரி 25 - மார்ச் 01, பெங்களூரு.
2வது டெஸ்ட், மார்ச் 05 - 09, மொஹாலி.
முதல் டி20, மார்ச் 13, மொஹாலி.
2வது டி20, மார்ச் 15, தர்மசாலா.
3வது டி20, மார்ச் 18, லக்னோ.
இந்த தொடருக்குப் பின் இந்தியாவில் நடைபெறும் 2022 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணை (2022) :
இந்தியா V தென்ஆப்பிரிக்கா
முதல் டி20, ஜூன் 9, சென்னை.
2வது டி20, ஜூன் 12, பெங்களூரு.
3வது டி20, ஜூன் 14, நாக்பூர்.
4வது டி20, ஜூன் 15, ராஜ்கோட்.
5வது டி20, ஜூன் 19, டெல்லி.