RCB vs KKR : முன்னோட்டம், புள்ளிவிவரங்கள்

ஐபிஎல் 2021 கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது, இதில் இன்று துவங்கும் 31 ஆவது போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது ஈயன் மோர்கன் தலைமையிலான கொடுக்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

Eoin Morgan | Virat Kohli (BCCI/IPL)


முன்னோட்டம் :

இந்தியாவில் நடைபெற்ற இந்த ஐபிஎல் தொடரின் முதல் பகுதியில் 7 போட்டிகளில் பங்கேற்ற கொல்கத்தா வெறும் 2 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் தள்ளாடி வருகிறது, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற அந்த அணியின் ஆன்ட்ரே ரசல், மோர்கன், தினேஷ் கார்த்திக், வருண் சக்கரவர்த்தி, சுப்மன் கில் போன்ற நம்பிக்கை நட்சத்திரங்கள் சிறப்பாக விளையாட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி பங்கேற்ற 7 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்று நல்ல நிலையில் உள்ளது. ஏபி டிவில்லியர்ஸ், கிளன் மேக்ஸ்வெல் போன்ற வெளி நாட்டு வீரர்களுடன் வணிந்து ஹஸரங்கா மேலும் அந்த அணிக்கு வலு சேர்க்கிறார்.

அத்துடன் இந்த வருடத்துடன் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி நேற்று அறிவித்துள்ளார், எனவே 7 வருடங்களில் வெல்லமுடியாத ஐபிஎல் கோப்பையை இந்த முறை வென்று வெற்றியுடன் விடைபெற தன்னால் முடிந்த முழுமூச்சுடன் அவர் போராட தயாராக உள்ளார்.

புள்ளிவிவரங்கள் :

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை மொத்தம் 28 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. 

  • அதில் கொல்கத்தா 15 போட்டிகளிலும் பெங்களூர் 13 போட்டிகளிலும் வென்று ஏறக்குறைய சம பலத்தில் உள்ளன. 

இருப்பினும் இவ்விரு அணிகள் மோதிய கடைசி 5 போட்டிகளில் பெங்களுரு 5 முறை வென்று அசத்தியுள்ளது, 1 முறை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

போட்டி நடைபெறும் ஐக்கிய அரபு நாடுகளில் இவ்விரு அணிகள் மோதிய 3 போட்டிகளில் கொல்கத்தா 1 போட்டியிலும் பெங்களூரு 2 போட்டிகளிலும் வென்று உள்ளன.

கடைசியாக இவ்விரு அணிகள் சென்னையில் மோதிய போட்டியில் ஏபி டிவில்லியர்ஸ் (76* ரன்கள்) மற்றும் மேக்ஸ்வெல் (78 ரன்கள்) ஆகியோர் அதிரடியால் பெங்களூரு அபார வெற்றி பெற்றது.

போட்டி விவரம் :

பெங்களூரு V கொல்கத்தா, இரவு 7.30PM, போட்டி 31, அபுதாபி.

நேரடி ஒளிபரப்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்.

பிட்ச், வெதர் ரிப்போர்ட் :

துபாய், ஷார்ஜா மைதானங்களை விட அபுதாபி மைதானத்தில் சுழல் பந்துவீச்சு சற்று அதிகமாக எடுபடும், அதே சம அளவு வேகப்பந்து வீச்சுக்கும் உதவி கிடைக்கும். வழக்கம்போல பேட்ஸ்மேன்களும் இங்கு ரன்களை விளாசுவார்கள்.

இங்கு கடந்த 2020 இல் நடைபெற்ற 22 ஐபிஎல் போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 162 ஆகும்.

மேலும் இங்கு சேசிங் செய்த அணிகள் 13 போட்டிகளில் வென்றுள்ளன, முதலில் பேட்டிங் செய்த அணிகள் 9 முறை மட்டுமே வென்றுள்ளன என்பதால் டாஸ் வெல்லும் அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்வது நல்லது.

உத்தேச அணிகள் :

பெங்களூரு அணியில் அடம் சாம்பா உட்பட பல நட்சத்திரங்கள் பல்வேறு காரணங்களுக்காக விளக்கியுள்ளார்கள் என்றாலும் இலங்கையின் ஹஸரங்கா இந்த போட்டியில் கண்டிப்பாக முதல்முறையாக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது, முதல் முறையாக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள சிங்கப்பூர் வீரர் டிம் டேவிட் இடம் பெறுவாரா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு :

விராட் கோலி (கேப்டன்), தேவூத் படிக்கல், கிளென் மேக்ஸ்வெல், ஏபி டீ வில்லியர்ஸ் (கீப்பர்), ரஜத் படிடார், சபாஷ் அஹமத், வணிந்து ஹஸரங்கா/டிம் டேவிட், ஹர்ஷல் படேல், கைல் ஜேமிசன், யுஸ்வென்ற சஹால், முஹம்மத் சிராஜ்.

கொல்கத்தா அணியை பொறுத்தவரை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பட் கம்மின்ஸ் விலகியுள்ளது பெருத்த பின்னடைவை கொடுத்துள்ளது, அவருக்கு பதில் டிம் சவுதி அல்லது லாக்கி பெர்குசன் விளையாடலாம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் :

சுப்மன் கில், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, ஈயன் மோர்கன் (கேப்டன்), தினேஷ்  கார்த்திக் (கீப்பர்), ஆன்றே ரஸ்ஸல், சுனில் நரேன்/சாகிப் அல் ஹசன், லாக்கி பெர்குசன்/டிம் சௌதீ, பிரசித் கிருஷ்ணா, வருண் சக்ரவர்த்தி, கமலேஷ் நாகர்கோட்டி

Previous Post Next Post

Your Reaction