டி20 உலகக்கோப்பையில் நியூஸிலாந்தை பழி தீர்ப்போம் - கடுப்பில் பாகிஸ்தான்

நேற்று முன்தினம் பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத இருந்த முதல் ஒருநாள் போட்டி துவங்க இருந்த சில நிமிடங்களுக்கு முன்பாக ரத்து செய்யப்பட்டது, அத்துடன் பாதுகாப்பு காரணங்களுக்காக 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் அடங்கிய இந்த சுற்றுப்பயணத்தை மொத்தமாக ரத்து செய்வதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் திடீரென அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது.

Rameez Raza On Pakistan Vs Newzeland (Pakistan Cricket)


கடந்த 2003 ஆண்டுக்கு பின் 18 வருடங்கள் கழித்து முதல் முறையாக பாகிஸ்தானிற்கு வந்த நியூசிலாந்து ஒரு வாரமாக அங்கு பயிற்சியில் ஈடுபட்டு வந்தது ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்பாக தங்கள் நாட்டு அரசிடம் இருந்து வந்த அவசர பாதுகாப்பு சம்பந்தப்பட்ட தகவல் காரணமாக இந்த முடிவை வேறு வழியின்றி எடுத்ததாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது, இதையடுத்து அந்த அணி வீரர்கள் தனி விமானம் வாயிலாக இன்று நியூசிலாந்தை சேர்ந்த அடைந்தனர்.

இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் என பலரும் நியூசிலாந்து மீது மிகுந்த கோபத்துடன் உள்ளார்கள். இது மிகப்பெரிய அவமானம், நியூசிலாந்து கிரிக்கெட் பாகிஸ்தான் கிரிக்கட்டை கொன்று விட்டது என பல பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் தங்களது ட்விட்டர் பக்கங்களில் நியூசிலாந்து மீது கடும் விமர்சனத்தை வைத்து வருகிறார்கள்.

பழி தீர்ப்போம் : 

இந்நிலையில் நியூசிலாந்தின் இந்த திடீர் நடவடிக்கை பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக கடந்த சில தினங்களுக்கு முன்பாக தேர்வு செய்யப்பட்ட முன்னாள் வீரர் ரமீஸ் ராசா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,

உங்களின் ஏமாற்றம் மற்றும் கோபம் ஆகியவற்றை செயல்பாடாக மாற்றி விளையாட்டில் காட்டுங்கள். உங்களது ஏமாற்றத்தை சிறப்பான செயல்பாடுகள் வாயிலாக வருகின்ற உலக கோப்பையில் காட்டுங்கள். ஒரு உலகத்தரம் வாய்ந்த அணியாக நீங்கள் உருவாகிவிட்டால் அனைவரும் உங்களுக்கு எதிராக விளையாட வரிசையாக நிற்பார்கள், எனவே இதிலிருந்து பாடத்தை கற்றுக் கொண்டு வலுவாக மாற வேண்டும், வருத்தப்படுவதற்கு எதுவும் இல்லை

என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களிடம் கூறினார். வரும் 2021 டி20 உலக கோப்பையில் குரூப் 2 பிரிவில் இடம் பிடித்துள்ள பாகிஸ்தான் தனது முதல் போட்டியில் வரும் அக்டோபர் 24ஆம் தேதி இந்தியாவை எதிர்கொள்கிறது, அதைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 26 ஆம் தேதி நியூசிலாந்தை சந்திக்கிறது.

அந்த போட்டியின் போது தற்போது பெரிய அவமானத்தையும் ஏமாற்றத்தையும் கொடுத்த நியூசிலாந்திற்கு தோல்வியை பரிசளித்து தக்க பதிலடி கொடுத்து பழிதீர்க்க வேண்டும் என பாகிஸ்தான் வீரர்களிடம் ரமீஸ் ராசா கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் உலகக் கோப்பை வரை உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக விளையாடி பயிற்சி எடுத்து உலக கோப்பையில் பங்கேற்ற தயாராகுமாறும் அவர் கூறினார், இவரைப் போலவே மற்றொரு பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தரும் வருகின்ற டி20 உலக கோப்பையில் நியூசிலாந்தை வீழ்த்தி பழி தீர்க்க வேண்டும் என பாகிஸ்தானை கேட்டுக்கொண்டுள்ளார்.

Previous Post Next Post

Your Reaction