துபாயில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2021 தொடரின் 34வது போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை அணி கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது.
![]() |
Rohit Sharma | Dinesh Karthik (Photo : BCCI/IPL) |
போட்டி விவரம் :
போட்டி 34, மும்பை இந்தியன்ஸ் V கொல்கத்தா நைட் ரைடர்ஸ், இரவு 7.30 PM, அபுதாபி.
நேரடி ஒளிபரப்பு:
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்.
முன்னோட்டம் :
5 முறை நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் தோல்வி அடைந்தது, எனவே அந்த அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மறுபுறம் முதல் பகுதி ஐபிஎல் தொடரில் சுமாராக விளையாடிய கொல்கத்தா 2ஆவது பகுதியின் முதல் போட்டியில் பெங்களூருவை 92 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து சூப்பர் வெற்றி பெற்றது, அந்த வெற்றியால் புத்துணர்ச்சி அடைந்துள்ள அந்த அணி இன்றைய போட்டியில் நடப்பு சாம்பியனை தைரியத்தோடு எதிர்கொள்ள தயாராகி உள்ளது.
புள்ளிவிவரங்கள் :
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை மொத்தம் 28 போட்டிகளில் மோதி உள்ளன.
- அதில் மும்பை இந்தியன்ஸ் 22 போட்டிகளில் அசால்டாக வெற்றி பெற்று கொல்கத்தாவுக்கு சிம்ம சொப்பனமாகவே இருந்து வருகிறது.
- மறுபுறம் கொல்கத்தா வெறும் 6 போட்டிகளில் மட்டுமே வென்று மும்பைக்கு முன் கத்துக்குட்டியாக உள்ளது.
- கடைசியாக இவ்விரு அணிகள் மோதிய 5 போட்டிகளில் கூட மும்பை 4 முறை வெற்றி பெற்று அசத்தியுள்ளது கொல்கத்தா 1 முறை மட்டுமே வென்றுள்ளது.
குறிப்பாக கடைசியாக இந்த 2 அணிகள் மோதிய போட்டியில் மும்பை 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பிட்ச் விவரங்கள் :
போட்டி நடைபெறும் அபுதாபி மைதானம் சுழல் பந்து வீச்சுக்கு அதிக சாதகமாக இருந்து வருகிறது, இதை சில தினங்களுக்கு முன் பெங்களூரு - கொல்கத்தா அணிகள் மோதிய போட்டியில் நாம் கண்டோம்.
எனவே பேட்ஸ்மேன்கள் நிதானத்துடன் ஆட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
- இங்கு கடைசியாக நடைபெற்ற 8 போட்டிகளில் 7 போட்டிகளில் சேசிங் செய்த அணிகள் வெற்றி பெற்றுள்ளன, எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச தீர்மானிப்பது.
உத்தேச அணிகள் :
மும்பை இந்தியன்ஸ் : மும்பை அணியை பொறுத்தவரை கடைசி போட்டியில் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்ட போதிலும் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர்.
மேலும் அந்த அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இல்லாத குறை தோல்விக்கு வித்திட்டது.
அத்துடன் அடுத்த போட்டிக்கு ரோகித் அணிக்குள் திரும்புவார் என கடந்த போட்டியில் கேப்டனாக இருந்த பொல்லார்ட் தெரிவித்திருந்தார், ஹர்திக் பாண்டியா காயத்திலிருந்து குணமடைந்தால் மட்டுமே அணியில் சேர்க்கப்படுவார்.
குயின்டன் டீ காக் (கீப்பர்), ரோகித் சர்மா (கேப்டன்), சூரியகுமார் யாதவ், இஷான் கிஷான், கிரன் பொல்லார்ட், திவாரி /ஹர்டிக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, அடம் மில்னே, ராகுல் சஹர், ஜஸ்பிரிட் பும்ரா,ட்ரெண்ட் போல்ட்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் :
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி பந்து வீச்சு அபாரமாக செயல்பட்டது, பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாடி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
எனவே அந்த அணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கலாம்.
சுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, ஈயன் மோர்கன் (கேப்டன்), ஆண்ட்ரே ரசல், தினேஷ் கார்த்திக் (கீப்பர்), சுனில் நரேன், லாக்கி பெர்குசன்,வருண் சக்ரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா.