பாகிஸ்தான் நாட்டுக்கு 18 வருடங்கள் கழித்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணி முதல் போட்டி தொடங்கும் ஒரு சில மணித்துளிகள் முன்பாக அந்த கிரிக்கெட் தொடர்களை முன்னறிவிப்பின்றி ஒட்டு மொத்தமாக ரத்து செய்து விட்டு நாடு திரும்பி உள்ளது, பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தொடரை வேறு வழியின்றி ரத்து செய்வதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
![]() |
Ramiz Raza (Photo : Pakistan Cricket) |
இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் அந்நாட்டு முன்னாள் வீரர்களும் மற்றும் ரசிகர்களும் கடும் ஏமாற்றத்துக்கும் கோபத்துக்கும் உள்ளாகி நியூசிலாந்தை விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில் இதையே காரணமாக வைத்து அடுத்த மாதம் பாகிஸ்தானுக்கு மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணத்தை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று முன்தினம் அதிரடியாக ரத்து செய்தது, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இந்த செயல் பாகிஸ்தான் மத்தியில் "எறியும் எண்ணெயை ஊற்றியது போல" அமைந்துள்ளது.
டி20 உலககோப்பையில் பழிக்கு பழி :
இந்த வேலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமேஷ் ராசா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு தெம்பூட்டும் வண்ணம் வெளியிட்ட வீடியோ பதிவில்,
தற்போது உலக கோப்பையை நோக்கி பயணிக்க வேண்டும், அதில் நமது முதல் இலக்கு எங்களின் அண்டை நாடான இந்தியாவாக இருந்தது, தற்போது அவர்கள் நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து என மேலும் 2 அணியை சேர்த்துள்ளார்கள்.
எனவே அணியை வலுவாக்கி உலக கோப்பையில் நாம் தோற்க போவதில்லை என்ற மனநிலையை உருவாக்க வேண்டும் ஏனெனில் அவர்கள் நமக்கு நல்லது செய்யவில்லை, ஆகவே அதற்கு அவர்களை நாம் மைதானத்தில் பழிவாங்குவோம்
என வரும் அக்டோபரில் துபாய் நடைபெறவுள்ள 2021 டி20 உலக கோப்பையில் தங்களை ஏமாற்றிய இந்தியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளை பழிவாங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
ஏமாற்றிய இங்கிலாந்து :
கடந்த 2020இல் கிரிக்கெட் தடைபட்டிருந்த வேலையில் இங்கிலாந்தின் அழைப்பை ஏற்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அந்நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது, அதனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இழக்க இருந்த பெரிய நஷ்டத்தை சரி செய்தது.
ஆனால் தற்போது தங்களுக்கு ஒரு உதவி என்று வரும் போது இங்கிலாந்து கழட்டிவிட்டு உள்ளதால் "தேவைப்படும்போது பயன்படுத்திவிட்டு குப்பைத் தொட்டியில் பாகிஸ்தானை எறிந்து விட்டார்கள்" என ரமீஸ் ராசா தெரிவித்துள்ளார், அத்துடன் நியூசிலாந்து தங்களை புறக்கணித்த பிறகு ஒரு சிறிய அளவிலான ஆதரவை கிரிக்கெட்டின் முக்கியமான ஒரு நாடாக இருக்கும் இங்கிலாந்திடம் எதிர்பார்த்ததாகவும் ஆனால் அவர்களும் தங்களை ஏமாற்றியுள்ளது வருத்தமளிக்கிறது எனவும் ரமீஸ் ராஜா மேலும் தெரிவித்தார்.
பாகிஸ்தானுக்கு ஆதரவு :
இந்த வேளையில் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் அதர்டன் தி டைம்ஸ் நாளிதழில்,
சரியான முடிவை எடுக்கும் தருணம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் கையில் இந்த வாரம் இருந்தது, ஒரு கிரிக்கெட் அணி மற்றவர்களால் கைவிடப்பட்டு தத்தளிக்கும் போது அவர்களுக்கு உதவி செய்து பெருமை அடையும் வாய்ப்பை இங்கிலாந்து பெற்றிருந்தது ஆனால் தொடரை ரத்து செய்து விட்டோம் என வெறும் வாய் வார்த்தைகளால் கூறி இங்கிலாந்து தவறு செய்து விட்டது
என பாகிஸ்தானுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். எது எப்படி இருந்தாலும் இந்த விஷயத்தில் இந்தியாவை பாகிஸ்தான் எதற்கு உள்ளே இழுக்கிறது என்று தான் இந்திய ரசிகர்களுக்கு புரியவில்லை.