அஜிங்கிய ரகானேவை நீக்கவிட்டால் ராகுல் டிராவிட் கிடைக்கமாட்டார் - சஞ்சய் மஞ்ரேக்கர்

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2 - 1 என முன்னிலை வகிக்கிறது, முன்னதாக 1 - 1 என சமனில் இருந்த இந்தத் தொடரை நேற்று முன்தினம் நடைபெற்ற முடிந்த 4வது டெஸ்ட் போட்டியில் 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா முன்னிலை பெற்றது.

Ajinkya Rahane and Sanjay Manjrekar | Getty


இந்த தொடரில் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரைத் தவிர மிடில் ஆர்டரில் வகிக்கும் கேப்டன் விராட் கோலி உட்பட முக்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் பார்ம் இல்லாமல் தவித்து வந்தனர், அதில் 3 மற்றும் 4வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி 2 அரை சதங்கள் அடித்து ஓரளவு தனது பார்வை மீட்டெடுத்துள்ளார்.

அதேபோல் டெஸ்ட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் செட்டேஸ்வர் புஜாராவும் 3வது போட்டியில் 91 ரன்களும், 4வது போட்டியில் 61 ரன்களும் அடித்து ஓரளவுக்கு பார்முக்கு திரும்பியுள்ளார்.

ஆனால் துணைக் கேப்டனாக இருக்கும் அஜிங்கிய ரஹானே தொடர்ந்து இந்த தொடரில் படுமோசமாக விளையாடி வருகிறார், இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளிலும் அவர் மொத்தமாக வெறும் 109 ரன்களை 15.57 என்ற மிக சுமாரான சராசரியில் மட்டுமே எடுத்துள்ளார், குறிப்பாக ஓவல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் டக் அவுட்டாகினார், இதனால் இந்திய ரசிகர்கள் பலரும் அவரை அணியில் இருந்து நீக்கிவிட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள்.


நேரம் முடிந்துவிட்டது : இந்நிலையில் அஜிங்கிய ரஹானேவுக்கு அதிகமான வாய்ப்பு வழங்கப்பட்டு விட்டது என முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். இதுபற்றி சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர்,

அணியில் காத்திருக்கும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் கடமை உங்களுக்கு (ரஹானேவுக்கு) ஏற்பட்டுள்ளது, அப்படி தான் நீங்கள் இந்திய கிரிக்கெட்டை பார்க்க வேண்டும். சிறப்பாக விளையாடாத என்னை அணியில் இருந்து நீக்காமல் இருந்திருந்தால் ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவான்கள் உருவாகியிருக்க முடியாது, எனவே ஹனுமா விஹாரி அல்லது சூரியகுமார் யாதவுக்கு வாய்ப்பு அளிக்கலாம்


என கூறினார். இந்தியாவிற்காக பங்கேற்று ஜொலிக்க தவறிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தற்போது தொலைக்காட்சிகளில் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார், அவரின் காலத்தில் அவர் சிறப்பாக விளையாட தவறியதால் அணியில் இருந்து நீக்கப் பட்டதையும் அதனால் வாய்ப்பு பெற்ற ராகுல் டிராவிட் நாளடைவில் பெரிய பேட்ஸ்மேனாக உருவானதையும் மஞ்சரேக்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அதிர்ஷ்டம் : துணை கேப்டனாகவும் அனுபவ வீரராகவும் ரகானே இருப்பதால் கேப்டன் விராட் கோலி அவரை அணியில் இருந்து நீக்குவதற்கு சற்று யோசிக்கிறார். அதுபற்றி மஞ்ச்ரேக்கர் கூறுகையில்,

ரகானேவுக்கு இன்னும் ஒரு போட்டியில் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக அது அவரின் அதிர்ஷ்டம் ஆகும், ஏனெனில் அவருக்கு நீண்ட காலமாக வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு அதிகமான வாய்ப்பு அளிக்கும் போது அவர் சிறப்பாக விளையாடுகிறார் என தோன்றவில்லை. இதில் கவலைக்குரிய விஷயம் என்னவெனில் ஒரு இன்னிங்சில் அவர் சிறப்பாக விளையாடி பார்முக்கு திரும்புவார் என்று எதிர்பார்த்தால் அது நடக்கவில்லை, ஆகவே 5வது போட்டியில் மீண்டும் அவர் வாய்ப்பு பெற்றால் அது நிச்சயம் அவரின் அதிர்ஷ்டம்


என கூறினார். இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்சில் ரகானே 61 ரன்கள் எடுத்தார், இதனால் அவர் பார்ம்க்கு திரும்பி விடுவார் என அனைவரும் எதிர்ப்பார்த்த நிலையில் மீண்டும் அடுத்தடுத்து அவுட் ஆகி வருகிறார், இதைத்தான் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் குறிப்பிட்டு அஜிங்கிய ரஹானேவுக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்கப்பட்டு விட்டது என தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post

Your Reaction