ஐபிஎல் 2021 தொடரின் 37 ஆவது போட்டியில் புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களில் இருக்கும் ஹைதராபாத் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
![]() |
Kane Williamson (Photo : BCCI/IPL) |
செப்டம்பர் 25ல் நடைபெறும் 2 போட்டிகளில் 2வது போட்டியாக இப்போட்டி ஷார்ஜாவில் நடைபெற உள்ளது.
போட்டி விவரம் :
செப்டம்பர் 25, போட்டி 37, சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் V பஞ்சாப் கிங்ஸ், இரவு 7.30 மணி, ஷார்ஜா.
நேரடி ஒளிபரப்பு :
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்.
முன்னோட்டம் :
ஹைதெராபாத் அணி கேப்டனாக டேவிட் வார்னர் நீக்கிவிட்டு வில்லியம்சன் நியமிக்கப்பட்ட போதிலும் அது அந்த அணிக்கான வெற்றிப் பாதையை துவக்கவில்லை.
குறிப்பாக பேட்டிங் அந்த அணியின் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் வேளையில் தமிழகத்தின் நடராஜன் அந்த அணியில் இல்லாதது மேலும் பின்னடைவை கொடுக்கிறது.
ஏற்கனவே பங்கேற்ற 8 போட்டிகளில் வெறும் 1 வெற்றி மட்டுமே பெற்றுள்ள ஹைதராபாத் இந்த போட்டி உட்பட இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் பற்றி நினைத்து பார்க்க முடியும்.
மறுபுறம் டெல்லிக்கு எதிராக நடைபெற்ற கடைசி போட்டியில் கடைசி ஓரில் வெறும் 4 ரன்களை எடுக்க முடியாமல் பஞ்சாப் படுதோல்வி அடைந்தது.
இது மட்டுமல்லாமல் சமீபகாலமாக இதேபோல வெற்றிபெற இருந்த பல போட்டிகளில் கடைசி ஓவரில் வெற்றியை எதிரணியிடம் கோட்டைவிட்டு பஞ்சாப் தடுமாறி வருகிறது.
இதுவரை 3 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் ஐதராபாத்திற்கு முன்னதாக 7வது இடத்தில் அந்த அணி உள்ளது.
எனவே பஞ்சாப் அணியும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற இந்த போட்டி உட்பட அடுத்து வரும் போட்டிகளில் வெல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
புள்ளிவிவரம் :
ஐபிஎல் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் இதுவரை வரலாற்றில் 17 போட்டிகளில் மோதியுள்ளன.
- அதில் ஹைதராபாத் 12 முறை வெற்றி பெற்று அசத்தியுள்ளது பஞ்சாப் 5 முறை மட்டுமே வென்றுள்ளது.
- கடைசியாக இந்த 2 அணிகள் பலப்பரீட்சை நடத்திய 7 போட்டிகளில் ஹைதராபாத் 4 முறையும் பஞ்சாப் 3 முறையும் வென்றுள்ளன.
பிட்ச் விவரம் :
அளவில் சிறிய ஷார்ஜா மைதானத்தில் இந்தப் போட்டியிலும் திறமையான பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழியலாம்.
திறமையை பயன்படுத்தி துல்லியமாக பந்துவீசும் சுழல் மற்றும் வேக பவுலர்களுக்கு விக்கெட்டுகள் கண்டிப்பாக கிடைக்கும், இந்த மைதானத்தில் 200 ரன்களை கூட சராசரி ஸ்கோர் என தெளிவாக கூற முடியாது, இருப்பினும் 160-180 ரன்கள் சராசரி ஸ்கோராக இருக்கும்.
உத்தேச அணிகள் :
பஞ்சாப் அணிக்கு கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் சிறப்பாக ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரன்கள் அடிக்க மறுக்கிறார்கள்.
கடைசி போட்டியில் கிறிஸ் கெயிலை எடுக்காமல் அந்த அணி தவறு செய்து விட்டது. அதேபோல் தமிழகத்தின் சாருகான், ரவி பிஷ்னோய் போன்ற முக்கிய வீரர்களையும் எடுக்காமல் விட்டது.
பஞ்சாப் கிங்ஸ் :
கேஎல் ராகுல் (கேப்டன் - கீப்பர்), மயங் அகர்வால், கிறிஸ் கெயில், ஐடெண் மார்க்ரம், நிக்கோலஸ் பூரான், தீபக் ஹூடா/ஷாருக்கான், அடில் ரஷீத், ஹார்ப்ரீத் ப்ரார்/ரவி பிஸ்னோய், முகமத் ஷமி, அர்ஷிதீப் சிங், இஷான் போரல்.
ஹைதெராபாத் அணியில் ஏற்கனவே இருப்பவர்கள் அடிப்படையாக விளையாடினாலே அந்த வெற்றி கிடைக்கும், டேவிட் வார்னருக்கு பதில் ஜேசன் ராய் சேர்க்கப்படுவாரா என பார்க்க வேண்டும்.
கேதார் ஜாதவ் ஹைதராபாத் அணியில் என்ன செய்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை, அவருக்கு பதில் இளம் பிரியம் கார்க்க்கு வாய்ப்பளித்து பார்க்கலாம்.
சன் ரைசெர்ஸ் ஹைதெராபாத் :
டேவிட் வார்னர்/ஜேசன் ராய், வ்ரிதிமான் சஹா (கீப்பர்), மனிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), கேதார் ஜாதவ்/பிரியம் கார்க், ஜேசன் ஹோல்டர், அப்துல் சமட், ரஷீத் கான், புவனேஸ்வர் குமார், சந்தீப் சர்மா, கலில் அஹ்மத்.