ஐசிசி 20 ஓவர் உலக கோப்பை 2021 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது, இதற்கான முழு அட்டவணையும் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் குரூப் 2 பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை வரும் அக்டோபர் 24ஆம் தேதி துபாயில் சந்திக்கிறது.
![]() |
Team India (BCCI) |
இந்த உலக கோப்பையில் பங்கேற்கும் விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி மும்பையில் வெளியிடப்பட்டது, இதில் 4 வருடங்கள் கழித்து முதல் முறையாக தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார், அதேபோல் மற்றொரு தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியும் இடம் பிடித்துள்ளார்
குறிப்பிட தக்க அம்சமாக முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட உள்ளார். 2021 20 ஓவர் உலகக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணி இதோ :
![]() |
Photo By BCCI |
பயிற்சி போட்டிகள் :
இந்நிலையில் வரும் அக்டோபர் 17-இல் துவங்கும் இந்த உலக கோப்பைக்கு தயாராகும் வண்ணம் சூப்பர் 12 சுற்றில் இடம் பிடித்துள்ள பிரதான அணிகள் மோதும் பயிற்சி போட்டிகளுக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி இந்த உலக கோப்பையின் பயிற்சி போட்டியில் வலுவான இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை இந்தியா எதிர்கொள்கிறது.
பயிற்சி போட்டி அட்டவணை இதோ :
அக்டோபர் 18:
ஆப்கானிஸ்தான் V தென்ஆப்பிரிக்கா, 3.30PM, அபுதாபி.
நியூஸிலாந்து V ஆஸ்திரேலியா, 7.30PM, அபுதாபி.
பாகிஸ்தான் V வெஸ்ட்இண்டீஸ், 3.30PM, துபாய்.
இந்தியா V இங்கிலாந்து, 7.30PM, துபாய்.
அக்டோபர் 20:
இங்கிலாந்து V நியூஸிலாந்து, 3.30Pm, அபுதாபி.
தென்ஆப்பிரிக்கா V பாகிஸ்தான், 7.30PM, அபுதாபி.
இந்தியா V ஆஸ்திரேலியா, 3.30PM, துபாய்.
ஆப்கானிஸ்தான் V வெஸ்ட்இண்டீஸ், 7.30PM, துபாய்.
டி20 உலககோப்பை இந்திய அணி பங்கேற்கும் அட்டவணை இதோ :
![]() |
Photo By ICC |
எதில் பார்க்கலாம் :
- இந்த பயிற்சிப் போட்டிகளில் இந்தியா பங்கேற்கும் 2 பயிற்சி போட்டிகளை மட்டும் இந்தியாவில் இருக்கும் ரசிகர்கள் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி வாயிலாக நேரடியாக கண்டு களிக்கலாம்.
இதர நாடுகள் மோதும் பயிற்சி போட்டிகளுக்கு நேரடி ஒளிபரப்பு கிடையாது, இருப்பினும் பிரதான உலக கோப்பை போட்டிகளை வழக்கம்போல ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் ஆப் வாயிலாக கண்டுகளிக்கலாம்.